முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாதவிடாய் காலம் முறையற்றதாக மாற காரணிகள் என்ன? சரி செய்ய கைட்லைன்!

மாதவிடாய் காலம் முறையற்றதாக மாற காரணிகள் என்ன? சரி செய்ய கைட்லைன்!

மருத்துவர்கள் பரிந்துரைக்காமல் நீங்களாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்வது பெரும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மருத்துவர்கள் பரிந்துரைக்காமல் நீங்களாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்வது பெரும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மருத்துவர்கள் பரிந்துரைக்காமல் நீங்களாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்வது பெரும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது அவர்களின் ஆரோக்கியமின்மையின் அறிகுறியாகும். மாதவிடாய் முறையாக இருந்தால் பிரச்சனை இல்லை. முறையற்று, காலதாமதமானால் அதுவே பல பெண்களின் மன சோர்வு மற்றும் உடல் சோர்வுக்கு வழிவகுக்கும். பெண்களின் உணர்ச்சியும் மாதவிடாய் காலமும் பிணையப்பட்டு இருக்கும் ஒன்று.

ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்கள் என்பது உலகம் முழுவதும் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான சுகாதாரப் பிரச்சனை ஆகும். அதிலும், இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏராளமான பெண்கள் பெரும் மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்து வரும் சூழலில் பலரின் மாதவிடாய் காலம் தாமதமாகிறது. அது அவர்களின் மன அழுத்தத்தை அதிகரித்து, ஆரோக்கியத்தை மோசமாக்கும். பொதுமுடக்க காலத்தில் வெளியே செல்வதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் உடல்நலன் சார்ந்த விஷயங்களை வைத்தே உங்கள் மாதவிடாய் தாமதமாவதை தடுக்கலாம்.

மாதவிடாய் காலம் முறையற்றதாக மாற காரணிகள் என்ன?

பெண்கள் வயிற்றின் அடிப்பகுதியில் இருக்கும் கருப்பைகள், அவர்கள் பருவத்தை அடைந்தபிறகு ஹார்மோன்களை உருவாக்க தொடங்குகின்றன. இது கருப்பையின் சுற்றுப்பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தேதியில், கருப்பையின் புறணி (lining) இரத்தத்தை வெளிவிடும். அதுவே மாதவிடாய் ஆகும். பொதுவாக, மாதவிடாய் சுழற்சி காலம் 28-30 நாட்கள். அதுவே ஆரோக்கியமான, முறையான கால சுழற்சி. மாறாக, மாதவிடாய் சுழற்சி 35 நாட்களை தாண்டினால் அது முறையற்ற, ஆரோக்கியமற்றதாகும்.

இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1

உணவு கோளாறுகள், இரத்த சோகை பிரச்சனை, தைராய்டு கோளாறுகள், எடை அதிகரிப்பு அல்லது குறைதல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, கருச்சிதைவு, மாதவிடாய் நிற்கும் காலம் (menopause) மற்றும் பிற காரணிகளால் இந்த சிக்கல் ஏற்படுகிறது. மாதவிடாய் முழுமையாக நிற்கும் காலத்தில் (menopause) ஒழுங்கற்று வருவது பொதுவானதே அதை மற்றி கவலைப்பட தேவையில்லை. ஒழுங்கற்ற மாதவிடாய் காலத்தை தவிர்க்க வீட்டிலேயே சிலவற்றை பின்பற்றலாம். இவற்றை செய்தும் உங்கள் உடல் ஒத்துழைக்கவில்லை எனில் மருத்துவரை அணுகி அவர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் மாத்திரைகளோடு இவற்றை பின்பற்றலாம்.

பின் குறிப்பு: மருத்துவர்கள் பரிந்துரைக்காமல் நீங்களாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்வது பெரும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

வீட்டு உணவுகளால் மாதவிடாயை சரிசெய்ய வழிமுறைகள்:

இஞ்சி:

இஞ்சியில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஒழுங்கற்ற மாதவிடாயை போக்க வல்லது. இஞ்சியை தேநீர் வடிவிலும் உட்கொள்ளலாம் அல்லது சிறிது தேனுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். மேலும், சிறிது தண்ணீரில் இஞ்சியை கொதிக்கவிட்டு அதில் சிறிதளவு சக்கரை சேர்த்து உணவுக்கு பிறகு குடித்துவந்தால் மாதவிடாய் பிரச்சனை தீரும்.

பப்பாளி:

முறையான மாதவிடாய்க்கு பப்பாளி பெரும் பங்களிக்கிறது. பப்பாளியில் இருக்கும் கரோட்டின், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைத் தூண்டி மாதவிடாய் காலத்தை முறையாக்குகிறது. பழமாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ எடுத்துக்கொள்ளலாம்.

சீரகம்:

சீரகத்தில் ஒளிந்துள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். வெது வெதுப்பான குடிநீரில் சீரகத்தை சேர்த்து குடித்துவர மாதவிடாய் சீராகும். அல்லது உறங்குவதற்கு முன் குடிநீரில் சீரகத்தை சேர்த்துவிட்டு காலையில் குடிப்பது நல்ல பலன் தரும்.

பட்டை:

மாதவிடாயின்போது ஏற்படும் தசைப்பிடிப்பு, அதிகப்படியான இரத்தப்போக்கு ஆகியவற்றை குறைக்க பட்டை உதவும். ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் பட்டை தூளை சேர்த்து குடித்துவர ஒழுங்கற்ற மாதவிடாய் தீரும்.

இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

மஞ்சள்:

மஞ்சளில் உள்ள நற்குணங்கள் அதிகம். மாதவிடாயை சரிசெய்வது மட்டுமல்லாமல், ஹார்மோன் பிரச்சனைகளுக்கும் மஞ்சள் தீர்வு தரும். மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் வலிகளுக்கு மஞ்சள் ஒரு சிறந்த தீர்வு. பாலில் மஞ்சளுடன் தேன் கலந்து குடித்துவர மாதவிடாய் பிரச்சனை மெல்ல நீங்கும்.

இவை எல்லாவற்றோடு, முறையான யோகா மற்றும் தியானம் செய்வது மன அழுத்தத்தை குறைத்து ஹார்மோன்களின் சமநிலையை உறுதிபடுத்தும்.

First published:

Tags: Irregular periods, Women Health