பெண்களுக்கு தாய்மை ஒரு வரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மாறிவிட்ட வாழ்க்கை முறை, உணவு பழக்கம் வழக்கம் ஆகியவற்றால் பெண்கள் கருத்தரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன. இயற்கையாக கருத்தரிக்க முடியாத பெண்ணுக்கு, பல நவீன மருத்துவ சிகிச்சைகள் மூலம் செயற்கையாக கருத்தரிக்க வைக்க முடியும். அதில் செயற்கை கருத்தரிப்பு முறைகளில் ஐவிஎஃப் ( IVF) முக்கியமான ஒன்று. இன் -விட்ரோ-பெர்டிலிசேஷன் (Invitro fertilization) என்பதே ஐவிஎப் ஆகும்.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமாக தாயாக வேண்டும் என்ற பெண்களின் கனவு நனவாகி வருகிறது. இயற்கையாக குழந்தை பெறமுடியவில்லை என்று ஏங்கும் பெண்களுக்கு IVF செயல்முறை எப்படிப்பட்டது, அதன் பலன்கள் என்ன என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
ஐவிஎஃப் சிகிச்சை என்பது, கருமுட்டையை தனியாக பிரித்து, ஆய்வகத்தில் விந்தணுக்களுடன் சேர்த்து கருவுற வைக்கப்படுகிறது. கருவுற்ற முட்டை கரு என்று அழைக்கப்படுகிறது. இந்த கரு ஒரு பெண்ணின் கருப்பையில் பொருத்தப்படுகிறது.
10-12 நாட்களுக்கு, பல முட்டைகளை உற்பத்தி செய்ய கருப்பைகளை தூண்டுவதற்கு கருவுறுதல் மருந்துகளை மருத்துவரால் வழங்கப்படுகிறது. அந்த நேரத்தில், இரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். கரு முட்டை உற்பத்தி முடிந்ததும், கருப்பையிலிருந்து முட்டைகளை வெளியேற்றி அவற்றை ஆய்வகத்தில் உள்ள கணவரின் விந்தணுவுடன் இணைப்பார்கள்.
முட்டை மீட்டெடுக்கப்பட்ட மூன்று முதல் ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருக்கள் உங்கள் கருப்பையில் மீண்டும் வைக்கப்படும். அதன் பிறகு இரண்டு வாரங்கள் கழித்து கருப்பபையில் வைக்கப்பட்ட கரு வளர்ச்சி அடையத் தொடங்கிவிட்டதா என்பதை மருத்துவர்கள் ரத்த பரிசோதனை மூலமாக கண்டறிவார்கள்.
தற்போது IVF அல்லது IUI (கருப்பையில் கருவூட்டல்) மூலம் கருத்தரிக்க பல தாய்மார்கள் தயாராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய காலக்கட்டத்தில் சிங்கிள் மதராக குழந்தையை வளர்க்க விரும்பும் நிறைய பெண்கள் ஐவிஎஃப் மற்றும் ஐயூவி முறை மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முன்வருகின்றனர்.
Also Read : கர்ப்பப்பை கட்டி எதனால் ஏற்படுகிறது தெரியுமா..?
ஐவிஎஃப் சிகிச்சை ஒரே முயற்சியில் வெற்றி பெறுவது கிடையாது. பல சுற்றுக்களை கொண்ட செயல்முறைக்கு தம்பதி தயாராக இருக்க வேண்டும். ஐவிஎஃப்-யின் வெற்றி பெண்ணின் வயது மற்றும் பல்வேறு காரணிகளை கொண்டு வரையறுக்கப்படுகிறது.
ஐவிஎஃப் சிகிச்சை ஒருபோதும் நீங்கள் நிச்சயம் கர்ப்பம் அடைவீர்கள் என்பதற்கான உத்தரவாதத்தை அளிக்காது. ஏனென்றால் ஐவிஎஃப் சிகிச்சை முறை அனைவருக்கும் ஒரே மாதிரி வேலை செய்வது கிடையாது. சிலர் முதல் முறையிலேயே கருத்தரிக்கலாம், சிலருக்கு அது இரண்டாவது முறையாகவோ அல்லது சில தம்பதிகளுக்கு பலமுறை முயன்ற பிறகும் தோல்வியோ கூட அடையலாம்.
Also Read : பெண்கள் மிக அதிகமாக உடற்பயிற்சி செய்தால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும்!
டாக்டர் ஃபீன்பெர்க் கூறுகிறார். சொசைட்டி ஃபார் அசிஸ்டெட் ரீப்ரொடக்டிவ் டெக்னாலஜி வெளியிட்டுள்ள தேசிய அளவிலான தரவுகளின்படி,தங்கள் சொந்த முட்டைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கான ஐவிஎஃப் வெற்றி விகிதம் 35 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 48 சதவீதமாகவும், 42 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 3 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
30 வயதுக்குட்பட பெண்களுக்கு முதல் சுற்று 43 சதவீத வெற்றி விகிதமும், இரண்டாவது சுற்றில் கருத்தரிப்பதற்கான வாய்ப்பை 16 சதவீதமும் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. அது மூன்றாவது சுற்றில் ஒட்டுமொத்த வாய்ப்பை 7 சதவீத வரை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Also Read : பெண்குயின் கார்னர் 22 : 30 வயதை கடந்து திருமணம் செய்தால் குழந்தை பிறப்பதில் சிக்கல் உண்டாகுமா..? மருத்துவரின் பதில்..!
மேலும் ஐவிஎஃப் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவெடுக்கும் தம்பதிக்கு பொறுமை, நேரம், பொருளாதாரம் ஆகிய மூன்றும் தேவை. ஐவிஎஃப் சிகிச்சைக்கான செலவு, மருத்துவ ஆலோசனை கட்டணம், முட்டையை பாதுகாத்தல், பரிசோதனைகள் என மிகப்பெரிய மருத்துவ பில் செலுத்த தேவையான பணத்தை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.