ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கல்லீரல் ஊட்டச்சத்து குறித்து நீங்கள் ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும்.. இங்கே காண்போம்

கல்லீரல் ஊட்டச்சத்து குறித்து நீங்கள் ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும்.. இங்கே காண்போம்

Liver Health | உங்கள் கல்லீரலுக்கு ஏற்ற சரியான ஊட்டச்சத்தைப் பற்றி அறிவது முக்கியம். எப்போதும் கவனமாக இருப்பதோடு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியமான கல்லீரலுக்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இங்கே காண்போம்.

Liver Health | உங்கள் கல்லீரலுக்கு ஏற்ற சரியான ஊட்டச்சத்தைப் பற்றி அறிவது முக்கியம். எப்போதும் கவனமாக இருப்பதோடு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியமான கல்லீரலுக்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இங்கே காண்போம்.

Liver Health | உங்கள் கல்லீரலுக்கு ஏற்ற சரியான ஊட்டச்சத்தைப் பற்றி அறிவது முக்கியம். எப்போதும் கவனமாக இருப்பதோடு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியமான கல்லீரலுக்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இங்கே காண்போம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

‘நாம் உண்பதுதான் நம்மை யார் எனக் காண்பிக்கிறது’ என்கிற பழமொழி உங்களுக்குத் தெரியுமா? சரி, அந்த பழமொழியை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் உடல் உறுப்பு ஒன்று உள்ளது - ஆனால் அது உங்கள் இதயம் இல்லை. அதுதான் உங்கள் கல்லீரல். நமது உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வடிகட்டுதல், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களைச் சேமித்து, செரிமானம் மற்றும் வளர்ச்சிக்கு உதவுதல் என உடலின் 500 முக்கியச் செயல்பாடுகளில் கல்லீரலுக்குப் பன்முகப் பணி உள்ளது.

எனவே இந்த முக்கியமான உறுப்பை நாம் கவனித்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது!

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கல்லீரல் நோய் இந்தியாவில் 5 நபர்களில் ஒருவரைப் பாதிக்கிறது. மேலும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மில்லியன் கல்லீரல் சிரோசிஸ் நோயாளிகள் புதிதாகக் கண்டறியப்படுவதாகவும் தரவு காட்டுகிறது. இந்தியாவில் இறப்பிற்கான பத்தாவது பொதுவான காரணமாக கல்லீரல் நோய் உள்ளது.

உங்கள் கல்லீரலுக்கு ஏற்ற சரியான ஊட்டச்சத்தைப் பற்றி அறிவது முக்கியம். எப்போதும் கவனமாக இருப்பதோடு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியமான கல்லீரலுக்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இங்கே காண்போம்.

Dr Joy Varghese - Consultant Gastroenterologist, Gleneagles Global Hospital Chennai

கல்லீரல் ஊட்டச்சத்து மற்றும் அது ஏன் முக்கியமானது:

பதப்படுத்தப்பட்ட/துரித உணவு விருப்பங்களுடன் உட்கார்ந்து கொண்டே பணியாற்றும் வாழ்க்கை முறை, கல்லீரலைத் தொடர்ந்து வேலைச் செய்ய தூண்டும் பெரிய அளவிலான அழுத்தத்தை அளிக்கிறது. அடிப்படையில், நமது உடலில் இருந்து நச்சுப் பொருட்களைத் தொடர்ந்து அகற்றுவதற்காக நமது கல்லீரல் அதிக நேரம் வேலை செய்கிறது. அதிக வேலை செய்வது காலப்போக்கில் தீங்கு விளைவிக்கும். எனவே, கல்லீரலை நல்ல நிலையில் வைத்திருக்க, பல்வேறு இரைப்பை குடல் (IG) கோளாறுகளை நிர்வகிப்பதற்குச் சரியான ஊட்டச்சத்து முக்கியமானது.

கல்லீரல் நோயாளிகளுக்கான அறிகுறிகள் மற்றும் பராமரிப்பு:

கல்லீரல் நோயின் அறிகுறிகள் மாறுபடும். கல்லீரல் நோயின் சில முக்கியமான அறிகுறிகளில் குமட்டல், வாந்தி, வலது மேல் நாற்புற வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை, சோர்வு, அரிப்பு, பலவீனம் மற்றும் எடை இழப்பு ஆகியவை அடங்கும்.

கல்லீரல் நோய் முதிர்ச்சிக் கட்டத்தை அடைந்தால், அது பொதுவாக கல்லீரலின் சிரோசிஸ் எனப்படும். நோயின் தொடக்கத்தில் எந்த அறிகுறிகளையும் ஒருவர் அனுபவிக்காமல் இருக்கலாம், ஆனால் நோய் மோசமடையும்போது, ஒருவர் சோர்வு, தோல் அரிப்பு, குழப்பம் மற்றும் சோம்பல் ஆகியவற்றை அனுபவிக்கிறார்கள்.

ஆரோக்கியமான கல்லீரலை உறுதிப்படுத்த, சமச்சீர் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகள் குறிப்பாக எடை தாங்கள் பயிற்சிகள் உதவியாக இருக்கும் என்று அறியப்படுகிறது, அவை இழந்த தசை எடையை மீண்டும் பெற உதவுகின்றன. கல்லீரல் நோய் அதிகரிக்கும்போது தசைக் கட்டும் திறன் குறைவதால், முடிந்தவரை விரைவாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். (4)

மேலும், உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், மது மற்றும் புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பதும் நல்லது.

ஆரோக்கியமான கல்லீரலுக்கான குறிப்புகள்:

கல்லீரல் நோயைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைக்கப்பட்ட வழிகளில் ஒன்று ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி செயல்திறன்மிக்க நடவடிக்கைகளை எடுப்பதாகும்.

தினசரி உடற்பயிற்சி, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, மது அருந்துவதில் மிதமான கட்டுப்பாடு மற்றும் புகைபிடிப்பதைக் குறைத்துக் கொள்வது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. உங்கள் உணவில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பைச் சேர்த்து கொள்ள வேண்டும். (3)

உங்கள் வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில் சரியான உடல் நிறை குறியீட்டை அடைவதை நீங்கள் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். எனவே, உகந்த எடையைப் பராமரிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் அல்லது வைரஸ் தொற்று போன்ற கல்லீரல் தொடர்பான நோய்களைத் தடுப்பதும் முக்கியம். இறுதியாக, உங்கள் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொழுப்பு ஆகியவற்றை உணவு, உடற்பயிற்சி மற்றும்/அல்லது மருந்துகள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இது கல்லீரல் பாதிப்பைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவும்.

குறிப்புகள்:

1. GE Port J Gastroenterol. 2015;22(6):268---276

2. Bemeur C, et al. J NutrMetab. 2010;2010:1-12

3. J. Clin. Med. 2019, 8, 1065

4. Plauth M, et al. ClinNutr. 2019;38(2):485-521 (ESPEN/international guidelines for nutritional recommendation)

5. EASL Clinical Practice Guidelines on nutrition in chronic liver disease. J Hepatol. 2019;70(1):172-193. (EASL/international guidelines for nutritional recommendation)

6. Gottschlich MM, et al. The A.S.P.E.N. NUTRITION SUPPORT CORE CURRICULUM: A CASE-BASED APPROACH—THE ADULT PATIENT. United States of America. ASPEN. 2007 (ASPEN/international guidelines for nutritional recommendation))

IND2214612 (v1.2)

The information provided in this article is meant for the awareness only and this article should not be considered as a substitute for doctor’s advice. Please consult your doctor for more details. Abbott India Limited shall not be liable in any manner whatsoever for any action based on the information provided in this article and does not hold itself liable for any consequences, legal or otherwise, arising out of information in this article. This article has been produced on behalf of Abbott India’s #ULivStrong initiative, by Network18 team.

First published:

Tags: Liver Health, Nutrition