• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Anxiety attack : ஒருவருக்கு "பீதி தாக்குதல்" பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன!

Anxiety attack : ஒருவருக்கு "பீதி தாக்குதல்" பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன!

பீதி தாக்குதல்

பீதி தாக்குதல்

சில நேரங்களில் பயம் மற்றும் கவலை ஆகியவை அதிகமாகி ஒரு நபரை ஆக்கிரமித்து அவரது உடலுக்கும் மனதுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை துண்டித்து நிலைமையை தீவிரமாக்குகிறது.

  • Share this:
ஒரு நபர் அவர் மனதிற்கு அச்சம் தர கூடிய விஷயங்களை எதிர்கொள்ளும் போது பதற்றம் உண்டாகிறது. இது ஒரு மருத்துவ பிரச்சனை அல்ல என்றாலும் பெரும்பாலும் கவலையுடன் தொடர்புடைய பயம் அல்லது பதற்ற உணர்வைக் குறிக்கிறது. உதாரணமாக ஒரு தேர்வை எழுத செல்வதற்கு முன் அல்லது தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு ஒரு பதற்ற உணர்வை எதிர்கொள்வதை கூறலாம். பயம், கவலை கலந்த மன அழுத்தம் போன்ற உணர்வு பதற்றம் ஏற்பட காரணமாகிறது.

பதற்றம் என்பது நமது உடலில் நடக்க கூடிய இயல்பான எதிர்வினை மற்றும் ஒரு நிகழ்வு. பெரும்பாலும் பதற்றம் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது சூழ்நிலையுடன் தொடர்புடையது. எப்போதும் இருந்து கொண்டே இருக்காது. புதிய வேலைகளில் சேரும் போது, உயரதிகாரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் போது, பெரிய வாழ்க்கை நிகழ்வையும் பற்றி கவலைப்படுவது உள்ளிட்ட பல காரணங்கள் பதற்றம் ஏற்பட காரணமாகின்றன. உண்மையில் லேசான பதற்றம் ஒருவர் ஒரு சவாலான சூழ்நிலையை சமாளிக்க பயன்படலாம். ஆனால் அதுவே ஒருவரின் அன்றாட செயல்பாட்டை பாதிக்க துவங்கும் போது, அது உடலுக்கு தீங்கு விளைவித்து ஆபத்தை ஏற்படுத்த கூடும்.

எனவே இவ்வகை பதற்றங்கள் கவனிக்கப்பட வேண்டியது அவசியம். பதற்றம் மன அழுத்தத்துடன் தொடர்புடையது என்பதால் உடலில் பல பிரச்சனைகள் உருவாக கூடும். பதற்றத்தின் காரணமாக ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு சில நேரங்களில் வெளிப்படையான காரணமின்றி எதிர்பாராத விதமாக நிகழக்கூடும். சில நேரங்களில் பயம் மற்றும் கவலை ஆகியவை அதிகமாகி ஒரு நபரை ஆக்கிரமித்து அவரது உடலுக்கும் மனதுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை துண்டித்து நிலைமையை தீவிரமாக்குகிறது.



இது பதற்றம் அல்லது பீதி தாக்குதல் (anxiety attack) என்று குறிப்பிடப்படுகிறது. இது நெருங்கி வரும் நிகழ்வால் தூண்டப்படலாம் மற்றும் நேரம் வரும் போது மெதுவாக உருவாகிறது. ஒருவரை ஒருவருக்கு anxiety attack பாதிப்பு ஏற்படும் போது குறிப்பிட்ட நபரின் உடலில் தீவிர பயம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். இந்த தாக்குதல்களை உடல் மற்றும் மன ரீதியாக எதிர்கொள்ளும் நபர்கள், அன்றாட வாழ்க்கை சூழ்நிலைகளை நினைத்து தினமும் கவலைப்படுகிறார்கள் மற்றும் பதற்றமடைகிறார்கள்.

நாள் முழுவதும் உட்கார்ந்தே வேலை செய்கிறீர்களா? முதுகை வலுவாக்கும் யோகாசனங்கள்!

வேலை அழுத்தம், பொருளாதார அழுத்தம், குடும்பம் அல்லது உறவு பிரச்சனைகள், பிரிவு அல்லது இறப்பு,பெற்றோரைப் பற்றிய கவலைகள், நிர்வாக சிக்கல்கள் அல்லது தொழில்நுட்பத்தை சமாளிக்கும் சிக்கல்கள், வேலை உள்ளிட்ட வாழ்க்கை சூழல்களில் திடீரென ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் anxiety attack ஏற்படுகிறது. இதற்கான அறிகுறிகள் வெவ்வேறு நபர்களுக்கு மாறுபடலாம், இதனால் பலவிதமான உடல் மற்றும் மன அறிகுறிகளை நமக்கு anxiety attack காட்டுகிறது.



anxiety attack சில உடல் அறிகுறிகள்:

* விரைவான இதயத்துடிப்பு
* சுவாசிப்பதில் சிரமம்
* வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான சுவாசம்
* அதிகமாக வியர்த்து கொட்டுவது
* உடல் நடுக்கம்
* வாய் உலர்ந்து போதல்
* மார்பில் திடீர் வலி
* மூச்சு திணறல் உணர்வு
* மயக்க உணர்வு
* வயிற்றுப்போக்கு
* வாயு அல்லது அசிடிட்டி
* தசை பதற்றம் அல்லது தசை வலி
* தூக்கமின்மை மற்றும் பலவீனம்
* சோர்வு



சில மன அறிகுறிகள்:

*ஆழ்ந்த பயம்
* அதிக மன அழுத்தம்
* பதற்றம்
* எரிச்சல் உணர்வு
* எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வு
* மனம் வெறுமையாக இருப்பது போன்ற உணர்வு
* அதீத கவலை
* கவனக்குறைவு மற்றும் சிந்திப்பதில் சிரமம்

anxiety attack அனுபவிக்கும் வெவ்வேறு நபர்கள் மேலே உள்ள அறிகுறிகளின் வெவ்வேறு சேர்க்கைகளை எதிர் கொள்ளக்கூடும். கவலை மற்றும் பதற்ற தாக்குதல் அறிகுறிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் மற்றும் அச்ச உணர்வுகள் அன்றாட வாழ்க்கையை பாதிக்க செய்தால் கண்டிப்பாக மருத்துவரை பார்க்க வேண்டும்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: