Home /News /lifestyle /

Teeth Whitening | பற்கள் வெண்மையாக மாற வேண்டுமா..? வீட்டிலேயே தயார் செய்யலாம் ஆயுர்வேத பற்பொடி

Teeth Whitening | பற்கள் வெண்மையாக மாற வேண்டுமா..? வீட்டிலேயே தயார் செய்யலாம் ஆயுர்வேத பற்பொடி

பற்களை வெண்மையாக்கும் யோசனைக்கு, எந்த தீங்கும் விளைவிக்காத இயற்கையாக வீட்டிலேயே தயாரிக்கும் பொருட்களை உபயோகப்படுத்தலாம்.

பற்களை வெண்மையாக்கும் யோசனைக்கு, எந்த தீங்கும் விளைவிக்காத இயற்கையாக வீட்டிலேயே தயாரிக்கும் பொருட்களை உபயோகப்படுத்தலாம்.

பற்களை வெண்மையாக்கும் யோசனைக்கு, எந்த தீங்கும் விளைவிக்காத இயற்கையாக வீட்டிலேயே தயாரிக்கும் பொருட்களை உபயோகப்படுத்தலாம்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
நல்ல தூக்கமும், உணவு முறையும் எப்படி நம் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமோ, அதே அளவுக்கு பற்களின் ஆரோக்கியத்தை பேணுவதும் மிக முக்கியம். உங்கள் பற்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் போது சரியான நேரத்தில் பல் மருத்துவரை அணுகி அதனை சரிசெய்ய வேண்டும். இதுதவிர ஆரோக்கியமான பல் நடைமுறைகளைப் பின்பற்றுவது பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கும். இருப்பினும், எந்த வித பல் வலிகள் இல்லாவிட்டாலும் பலர் சந்திக்கும் பொதுவான பல் பிரச்சினைகளில் ஒன்று மஞ்சள் பற்கள். ஏன் பல பற்பசை தயாரிப்புகள் கூட உங்கள் பற்களை வெண்மையாக்கும் திறன் கொண்டவை என விளம்பரப்படுத்துகின்றன.

வெண்மையான பற்கள் கிடைக்கும் என்றால் யார் தான் இதுபோன்ற தயாரிப்புகளை வாங்கமாட்டார்கள். மஞ்சள் பற்களுக்கு சிகிச்சையளிக்க நாட்டில் பல தீர்வுகள் இருந்தாலும், அவற்றில் சில உண்மையில் உங்கள் பற்களின் எனாமலை சேதப்படுத்தும். சில நேரங்களில் பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இரசாயன தயாரிப்புகள் கூட விலை உயர்ந்தவையாக இருக்கும் ஆனால் அந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்காது.

Must Read | சியா விதைகளா? சப்ஜா விதைகளா?- உடல் எடையை எது விரைவாக குறைக்க உதவும்?

எனவே, ரசாயனம் கலந்த தயாரிப்புகளை வாங்கி உங்கள் பற்களை வெண்மையாக்கும் யோசனையை கைவிட்டு, எந்த தீங்கும் விளைவிக்காத இயற்கையாக வீட்டிலேயே தயாரிக்கும் பொருட்களை உபயோகப்படுத்தலாமே. அந்த வகையில் நீங்கள் மஞ்சள் பற்கள் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இந்த பழமையான ஆயுர்வேத வீட்டு வைத்தியம் உங்கள் பற்களை பிரகாசமாக்கவும் வெண்மையாக்கவும் உதவும். இதனை எப்படி தயாரிக்கலாம் என்பது பற்றி பின்வருமாறு காண்போம்.

பற்களை பிரகாசமாக்க உதவும் ஆயுர்வேத பற்பொடியை தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

கல் உப்பு - 1 ஸ்பூன்,
கிராம்பு தூள் - 1 ஸ்பூன்,
இலவங்கப்பட்டை தூள் - 1 ஸ்பூன்,
முலேதி - 1,
உலர்ந்த வேப்ப இலைகள் - தேவையான அளவு,
உலர்ந்த புதினா இலைகள் - தேவையான அளவு.

செய்முறை:

மேற்கண்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து தூள் பதத்திற்கு வரும்வரை மிக்சியில் நன்றாக அரைக்கவும். அவ்வளது தான் உங்கள் பற்பொடி தயார். எதிர்கால பயன்பாட்டிற்காக நீங்கள் அதை காற்று புகாத ஒரு கன்டெய்னரில் சேமிக்கலாம்.

இதனை பயன்படுத்துவது எப்படி?

அரைத்து வைத்த பற்பொடியில் தேவையான அளவை உங்கள் உள்ளங்கையில் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் பிரஷை பயன்படுத்தி உங்கள் பற்களை தூள் கொண்டு சுத்தம் செய்யுங்கள். பிறகு உங்கள் வாயை தண்ணீர் கொண்டு நன்றாக கொப்பளித்து சுத்தம் செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு வாரத்திலேயே உங்கள் பற்களின் நிறத்தில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் காணலாம்.

Must Read | ‘இனியும் தயங்காதீங்க’ | பெண்கள் ஏன் பாலியல் உறவை முன்னெடுக்கத் தயங்குகின்றனர்? நிபுணர் பகிரும் விஷயங்கள்!

கல் உப்பு உங்கள் பற்களுக்கு இயற்கையாகவே வெள்ளை நிறத்தை அளிக்கிறது. அதே நேரத்தில் முலேதி மற்றும் வேப்பம் ஆகியவை ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. உணர்திறன் வாய்ந்த பற்கள் உள்ளவர்களுக்கு இந்த தூள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு பற்களுக்கு தேய்மானமற்ற முகவர்களாக செயல்படுகின்றன.

உங்கள் பல் ஆரோக்கியத்தை பராமரிக்க சில டிப்ஸ்:

உங்கள் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவதை தவறவிடாதீர்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குங்கள்.

பல்லிடுக்கு நூல் பயன்படுத்துவதை தவறவிடாதீர்கள். இது பற்களின் இலையில் உள்ள கிருமிகளை வெளியேற்ற உதவுகிறது.

அதிக நேரம் அல்லது மிகவும் கடினமாக பல் துலக்க வேண்டாம். இது பல் எனாமலை சிதைத்து விடும்.

நடுத்தர அல்லது கடினமான பிரஷை உபயோகப்படுத்துபவதற்கு பதிலாக, மென்மையான பிரஷை பயன்படுத்தவும். நடுத்தர அல்லது கடினமான பிரஷை பயன்படுத்துவது காலப்போக்கில் பல் எனாமலில் தேய்மானத்தை ஏற்படுத்தும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல் துலக்கும் போது ப்ரஷ் தூரிகை செங்குத்தாக இருக்க வேண்டும். பல மக்கள் நீண்ட கிடைமட்ட துலக்குதல் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது பல் சேதத்திற்கு வழிவகுக்கிறது.

நீங்கள் ஒரு ஆட்டோமேட்டிக் பிரஷை பயன்படுத்தலாம். இது பல் சுகாதாரத்தை எளிதாக பராமரிக்கும்.
Published by:Archana R
First published:

Tags: Ayurveda, Healthy Lifestyle, Teeth, Yellow Teeth

அடுத்த செய்தி