• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்..

பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்..

காட்சி படம்

காட்சி படம்

Best And Worst Food For Your Teeth : பற்கள் ஆரோக்கியமாக இருக்க இதை பின்பற்றுங்கள்..

  • Share this:
நாம் சாப்பிடும் உணவிற்கும் நம்முடைய ஆரோக்கியத்திற்கும் எவ்வளவு தொடர் உள்ளதோ, அதே அளவு பற்கள், ஈறுகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தொடர்பு உள்ளது. பற்சிதைவு, சொத்தை, எனாமல் பாதிப்பு, ஈறுகளில் ரத்தம் கசிவது ஆகியவை நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகள் காரணமாக தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பட்டியல் இங்கே.,

பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கென்று சில பொதுவான உணவுகள் எப்பொழுதுமே பரிந்துரைப்பதை நீங்கள் பல முறை கேட்டிருப்பீர்கள். உதாரணமாக இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும், அதிக கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்,அதிக குளிர்ச்சியான அல்லது அதிகமான சூடான உணவுகளை உட்கொள்வது பற்கூச்சத்தை ஏற்படுத்தும் போன்றவை. இங்கு உங்கள் பற்களுக்கு ஏற்ற உணவுகள் என்னென்ன என்பது குறித்து காண்போம்.,

நார்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் : 

உணவு செரிமானத்திற்கு நார்சத்து நிறைந்த உணவுகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு பற்கள் சுத்தமாக இருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் அவசியம். காய்கறிகள் மற்றும் பழங்களை மென்று சாப்பிடுவது உங்கள் தாடையின் தசைகளுக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும். ஈறுகளில் பாதிப்பு மற்றும் பற்சிதைவு ஆகியவற்றிலிருந்து இயற்கையான முறையில் உள்ள பற்களை பாதுகாப்பதற்கு இது சிறந்த வழி.



பால் பொருட்கள் :

பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பன்னீர் ஆகிய பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் நிறைந்துள்ளது. உங்கள் பற்களின் மேற்புற எனாமலுக்கு பால் பொருட்கள் மிகவும் அவசியம். பற்களின் எனாமல் பாதிப்பை பால் பொருட்களில் உள்ள மினரல் சத்துகள் சரி செய்கிறது.

ப்ளாக் டீ மற்றும் கிரீன் டீ :

தேநீர் வகைகளில் பாலிபெனால் எனப்படும் இயற்கையான காம்பவுண்ட் உள்ளது. இவை பற்களை பாதிக்கக்கூடிய வாயில் உற்பத்தியாகும் பிளேக் பாக்டீரியாவை அழிக்கிறது. ஒரு கப் தேநீரில் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு தேவையான ஃப்ளோரைடு கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

also read : உடல் எடையை குறைக்கப் போகிறீர்களா ? காலையில் இந்த புரத உணவுகளை சாப்பிடுங்க..

நீங்கள் தவிர்க்க வேண்டியவை :

இனிப்பு உணவுகள் மற்றும் மிட்டாய்கள் :

ஏற்கனவே கூறியுள்ளது போல மிட்டாய்களும் இனிப்பு உணவுகளும் பற்களிலேயே நீண்ட நேரத்திற்கு சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளன. எனவே இவை பாக்டீரியாக்கள் உற்பத்தியாவதற்கு வழிவகுக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்பு வகைகளை முற்றிலுமாக தவிர்ப்பது பற்கள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்க உதவும்.



ஸ்டிக்கி உணவுகள் :

ஸ்டிக்கி உணவுகள் என்பது, சிப்ஸ், பிரெட், உள்ளிட்ட பற்களில் சிக்கிக் கொள்ளும் அல்லது பற்களுக்கு இடையில் மாட்டிக் கொள்ளக் கூடிய உணவுகளை குறிக்கிறது.

also read : எந்தெந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது ? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..

குளிர்பானங்கள் மற்றும் சோடா :

சோடா பானங்களை அடிக்கடி குடிப்பது பற்களில் கறையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எனாமலையும் பாதிக்கும்.

இனிப்புகளுக்கு பதிலாக என்ன சாப்பிடலாம்?

நீங்கள் இனிப்பு வகை உணவுகளை விரும்பி சாப்பிடுவீர்கள் என்றால், கொஞ்சம் கொஞ்சமாக பலமுறை சாப்பிடாமல், கணிசமான அளவு இனிப்புகளை ஒரே முறையாக சாப்பிடுவது பற்களில் சொத்தை ஏற்படும் அபாயத்தை குறைக்கும். அது மட்டுமின்றி, இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பைனாப்பிள் போன்ற பழங்களை ஸ்வீட்டுக்கு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம். உணவுகளுக்கு இடையில் சாப்பிடக்கூடிய தின்பண்டங்களை நீங்கள் பழங்களாக எடுத்துக்கொண்டால் இவை உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இயற்கையாகவே பற்களையும் சுத்தம் செய்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: