Home /News /lifestyle /

மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா.? இந்த 8 விஷயங்களை ஒவ்வொரு நாளும் செய்யுங்கள்.!

மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா.? இந்த 8 விஷயங்களை ஒவ்வொரு நாளும் செய்யுங்கள்.!

Happy

Happy

Mental Health | மகிழ்ச்சிக்கான திறவுகோல் வெற்றி மட்டுமல்ல. மாறாக நம் அன்றாட வாழ்வில் மனநிறைவு உணர்வு இருப்பதும் அவசியம். பிரச்சனைகள் ஒருபக்கம் இருந்தாலும் தினமும் நீங்கள் மகிழ்ச்சியாக உணர சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள், அனைவரது பதிலும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதாக தான் இருக்கும். மகிழ்ச்சியை பாதிக்கும் சில காரணிகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், அனைவருமே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறார்கள்.

நம்மில் பலர் தொடர்ந்து மகிழ்ச்சியற்ற நாட்களை அதிருப்தியுடன் எதிர்கொள்கிறோம். மகிழ்ச்சிக்கான திறவுகோல் வெற்றி மட்டுமல்ல. மாறாக நம் அன்றாட வாழ்வில் மனநிறைவு உணர்வு இருப்பதும் அவசியம். பிரச்சனைகள் ஒருபக்கம் இருந்தாலும் தினமும் நீங்கள் மகிழ்ச்சியாக உணர சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

பிறருடன் ஒப்பிட்டு பார்ப்பதை தவிருங்கள்..

பெரும்பாலும் நம்முடைய சுயமதிப்பை நாம் எப்படி அளவிடுகிறோம். யோசித்து பாருங்கள், மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலமாக தான் இருக்கும். ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பலங்கள், முன்னுரிமைகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் இருப்பதை புரிந்து கொள்ள தவறுகிறோம். எப்போதுமே உங்கள் சொந்த மதிப்பை மற்றவர்களை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்யாதீர்கள். இதற்கு முன் நீங்கள் செய்த சில பெரிய விஷயங்களை சிந்தித்து பார்த்து நாம் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள்.



உங்களின் பலம் மீது கவனம்:

நம் அனைவருக்குமே பலம் மற்றும் பலவீனம் என இரண்டுமே இருக்கும். குறிப்பாக பலவீனங்கள் இல்லாத மனிதனே இருக்க முடியாது. எனவே உங்களை பற்றி நீங்களே தாழ்வாக நினைக்காமல், செய்த தவறுகளிலிருந்து பாடங்கள் கற்று கொள்வதோடு உங்களது திறமை மீது கவனம் செலுத்துங்கள்.

பிரமிப்பை ஏற்படுத்தும் இந்தியாவின் தனித்துவமான இடங்கள் பற்றிய சுவாரஸ்சிய தகவல்கள் இங்கே.!

நோக்கத்தோடு செய்ய பழகுங்கள்:

மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக சில விஷயங்களை நீங்களும் செய்வது நிச்சயமாக உங்களுக்கு மகிழ்ச்சி அல்லது திருப்தியை தராது. நீங்கள் செய்யும் செயல்களுக்கான அர்த்தம் மற்றும் நோக்கத்தை கண்டுபிடியுங்கள். நமது கவலை மற்றும் மனச்சோர்வின் பெரும்பகுதி நம்மை பற்றியே நாம் அதிகம் சிந்திப்பது மற்றும் கவலைப்படுவதால் ஏற்படுகிறது. எனவே உங்களைத் தாண்டி மற்றவர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி நீங்கள் மகிழ்ச்சியாக உணர பெரிதும் உதவும்.



வெற்றியை கொண்டாடுங்கள்:

நாம் ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்தால் நம்மை நாமே கடிந்து கொள்வோம், சோர்ந்து போவோம். ஆனால் ஒரு விஷயத்தை சிறப்பாக செய்து முடித்து விட்டால் அதை பெரிதாக நினைக்காமல் கடந்து செல்வோம். நீங்கள் செய்துள்ளது சிறிய விஷயங்களாக இருந்தாலும் அல்லது பெரிய வெற்றியாக இருந்தாலும் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு சிறப்பான தருணத்தையும் கொண்டாடுங்கள்.

உங்கள் குழந்தைக்கு உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம் என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்..!

முயற்சிகளை நினைத்து பெருமைப்படுங்கள்:

நல்ல முறையில் முயற்சிகள் செய்தாலும் சில விஷயங்கள் எப்போதும் நாம் எதிர்பார்த்த வெற்றியை தராமல் போகலாம். முயற்சிகள் நம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இறுதி முடிவு நம் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே முயற்சி செய்யாமல் இருப்பதை விட நீங்கள் செய்த முயற்சிகளை நினைத்து பெருமை கொள்ளுங்கள்.



நன்றியுணர்வு:

நன்றியுணர்வு என்பது ஒரு நேர்மறையான உணர்ச்சி. இது பிறருக்கு நன்றி சொல்வது மற்றும் பாராட்டுவதை உள்ளடக்கியது. மன மற்றும் உடல் ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது. உங்களிடம் உள்ள அனைத்திற்கும் நன்றியுணர்வுடன் இருப்பதற்கும் நேரத்தை ஒதுக்குவதன் மூலம் கருணை, அரவணைப்பு மற்றும் தாராள மனப்பான்மை போன்ற உணர்வுகளுடன் நாளை சிறப்பான முறையில் மகிழ்ச்சியுடன் செலவிடுவீர்கள்.

போலித்தனம், பிடிவாதம், நக்கல்.. Toxic பெண்களின் நட்பு, சுபாவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

உறவுகளை வலுப்படுத்துங்கள்:

சில நேரங்களில் மகிழ்ச்சிக்கான நமது தேடலில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று உறவுகளை புறக்கணிப்பது. பணம் மற்றும் புகழை காட்டிலும் நல்ல மற்றும் நமக்கு ஆதரவான உறவுகள் மகிழ்ச்சியான வாழ்விற்கு இன்றியமையாதவர்கள். எனவே குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக பணியாளர்கள் என உங்களை நெருக்கமாக நினைக்கும் உறவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.



விரும்பியதை செய்யுங்கள்:

உங்களுக்கு விருப்பமில்லாதவற்றை செய்வது, வாழ்க்கையை அனுபவிக்க காத்திருப்பதும் மகிழ்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கு தயங்காதீர்கள் மற்றும் காத்திருக்காதீர்கள். உங்களக்கு மனநிறைவை தரும் விஷயங்களில் ஈடுபட நேரத்தை ஒதுக்குங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: Lifestyle

அடுத்த செய்தி