Home /News /lifestyle /

ஆர்கானிக் மற்றும் நேச்சுரல் விளை பொருட்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் மற்றும் சாதக, பாதகங்களை தெரிந்து கொள்ளுங்கள்

ஆர்கானிக் மற்றும் நேச்சுரல் விளை பொருட்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் மற்றும் சாதக, பாதகங்களை தெரிந்து கொள்ளுங்கள்

Organic Food

Organic Food

Organic VS Natural Food | ஆர்கானிக் உணவுகள் என்றாலே, இயற்கை உணவுகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவை பதப்படுத்தப்பட்ட உணவுகளாகவும் இருக்கலாம். இதனால், சர்க்கரை, உப்பு மற்றும் இதர பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அது உடல் நலனுக்கு தீங்கானது.

மேலும் படிக்கவும் ...
உணவு என்பது நம் உடல் இயகுவதற்கான ஆற்றலை தருவது, நம் பசியைத் தீர்ப்பது என்பதையும் தாண்டி, பல்வேறு உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகள் இப்போது பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. வெஜிடேரியன் என்னும் காய்கறி மற்றும் தாவரங்களை மட்டும் சாப்பிடக் கூடியவர்கள், அதிலும் கொஞ்சம் தூய்மை வாதத்தை ஏற்படுத்தி விலங்கு சார்ந்த பால், தயிர், நெய் போன்ற எந்தவொரு உற்பத்தி பொருள்களையும் எடுத்துக் கொள்ளாத ‘வீகன் உணவுமுறையைக் கடைப்பிடிப்பவர்கள் என பல வகையினர் சமூகத்தில் உண்டு.

குறிப்பாக, ஆர்கானிக் எனப்படும் உணவுப் பொருள் முறை இப்போது பரவலாக எங்கும் கடைப்பிடிக்கப்படும் முறைகளில் ஒன்றாக மாறி வருகிறது. அதேசமயம், வழக்கமான சாகுபடி முறைகளை பயன்படுத்தி விளைவிக்கப்படும் நேச்சுரல் விளை பொருட்களும் சந்தையில் தடையின்றி கிடைக்கின்றன. இந்த இரண்டு உணவு முறைகளின் சாதக, பாதகங்கள் குறித்து இந்தச் செய்தியில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஆர்கானிக் உணவுப் பொருட்கள்

வழக்கமான பூச்சிக் கொல்லிகள், ரசாயனங்கள் போன்றவற்றை பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் பொருட்களே ஆர்கானிக் உணவுகள் ஆகும். அதேசமயம், உயிரி உரங்கள், கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் நுண்ணூட்டச் சத்து ஆகியவை இந்த உற்பத்திக்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.



ஆர்கானிக் உணவுகளின் சாதகங்கள்

உரங்கள் மற்றும் ரசாயனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் உடல் நலனுக்கு நல்லது. ஆர்கானிக் குறித்த விரிவான ஆராய்ச்சிகள் தேவை என்றாலும், முதல்கட்ட ஆய்வுகளில் இது நன்மை ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. இறைச்சி அல்லது தாவர உணவு என்று எந்த உணவாக இருந்தலும், அது கையாளப்படும் முறைகளில் உயர் தரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Also Read : தாவர ஊட்டச்சத்துக்கள் ஏன் நமது உடலுக்கு மிக அவசியமானவை? இதை எப்படி எளிதில் பெறுவது?

ஆர்கானிக் உணவுகளின் பாதகங்கள்

ஆர்கானிக் உணவுகள் என்றாலே, இயற்கை உணவுகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவை பதப்படுத்தப்பட்ட உணவுகளாகவும் இருக்கலாம். இதனால், சர்க்கரை, உப்பு மற்றும் இதர பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அது உடல் நலனுக்கு தீங்கானது. ஆர்கானிக் பொருட்களின் விலை மிக, மிக அதிகம். தவிர, எல்லா இடங்களிலும் இது கிடைக்காது. இதன் உற்பத்தி செலவும் மிக அதிகம். மேலும், இந்த வகை உணவுகளில் மிக அதிகமான கார்பன் இருப்பதால் இதை நீண்ட காலத்துக்கு சாப்பிட முடியாது.



இயற்கை உணவுகளின் சாதகங்கள்

பொதுவெளியில் இந்த வகை உணவுப் பொருட்களே அதிகம் கிடைக்கின்றன. ஆகவே, இதன் விலையும் மிகவும் குறைவு. இதில், பதப்படுத்தப்படும் உணவுகள், ரசாயனங்கள் சேர்ப்பது உள்ளிட்ட விஷயங்கள் இருக்காது. இதனால், பாதுகாப்பாக சாப்பிடலாம். இயற்கை உணவுகள் என்று வந்துவிட்டால் அதில் எண்ணற்ற வெரைட்டிகள் கிடைக்கும்.

Also Read : பசலைக் கீரை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 7 வகை நன்மைகள்..!

இயற்கை உணவுகளின் பாதகங்கள்

மிகப்பெரிய அளவில் இயற்கை உணவுகள் சாகுபடி செய்யப்படுவதால் பூச்சுகளின் தாக்குதல்களை தடுக்க பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. உணவுகளில் சில ஊட்டச்சத்துக்கள் குறையலாம். இதனால் போதிய சுவை இருக்காது. இறைச்சிகளுக்காக விலங்குகளை கையாளும்போது மனித நேயம் இல்லாத வகையில் சித்திரவதைகள் செய்யப்படக் கூடும்.
Published by:Selvi M
First published:

Tags: Healthy Food, Organic Products

அடுத்த செய்தி