HOME»NEWS»LIFESTYLE»health here is how you will be able to register yourself for the covid vaccine in india with co win app esr ghta

இந்தியாவில் கோவிட் -19 தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான வழிமுறைகள்!

தடுப்பூசி கிடைப்பதற்கு முன் தடுப்பூசி தேவைப்படுபவர்கள் முதலில் கோவின் -20 (CoWin-20) ஆப்ஸில் தங்களை பதிவு செய்து கொள்வது கட்டாயம் என்ற செய்தி வெளியாகியுள்ளது

இந்தியாவில் கோவிட் -19 தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான வழிமுறைகள்!
மாதிரி படம்
  • Share this:

அடுத்த சில வாரங்களில் கொரோனாவிற்கான தடுப்பூசி தயாராக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் இதனை உறுதி செய்தவுடன், இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் தொடங்கும். தடுப்பூசி கிடைப்பதற்கு முன் தடுப்பூசி தேவைப்படுபவர்கள் முதலில் கோவின் -20 (CoWin-20) ஆப்ஸில் தங்களை பதிவு செய்து கொள்வது கட்டாயம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 2019 மார்ச் மாதத்தில், மத்திய அரசு கோவின் -20 (CoWin-20) என்ற புதிய மொபைல் ஆப்ஸுக்கான வேலைகளைத் தொடங்கியது, இந்த ஆப் இந்திய குடிமக்கள் தங்களை சுற்றி COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கண்டறிய உதவுகிறது.

இந்த ஆப்ஸ் பின்னர் ஆரோக்ய சேது (Aarogya Setu) என அறிமுகப்படுத்தப்பட்டது, இது தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) பத்து கோடிக்கு மேல் பதிவிறக்கங்களை கொண்டுள்ளது. ஆனால் முந்தைய கோ-வின் ஆப்ஸ் இன்னும் செயல்பாட்டில் உள்ளது, ஆனால் இப்போது வேறு நோக்கத்துடன் அது செயல்பட்டுக் கொண்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கோ-வின் ஆப்ஸின் செயல்பாட்டை அரசாங்கம் விளக்கியது, அதாவது, முதன்மையாக கோவிட் -19 தடுப்பூசிகளின் (COVID-19 vaccines) விநியோகத்தைக் கண்காணிக்க ஏஜென்சிகளுக்கு உதவுவதோடு, நாட்டின் குடிமக்கள் தடுப்பூசி செயல்முறைக்கு பதிவு செய்யவும் இந்த ஆப்ஸ் உதவுகிறது.

கொரோனா காலத்தில் மருத்துவமனை செல்ல தயக்கமா..? பாதுகாப்பிற்காக இந்த வழிகளை பின்பற்றுங்கள்..!



OVID-19 தடுப்பூசிக்கான (COVID-19 vaccines) கண்காணிப்பு மற்றும் பதிவை உறுதி செய்வதற்காக , கோ-வின் ஆப்ஸ் நிர்வாகி தொகுதி, பதிவு தொகுதி, தடுப்பூசி தொகுதி, பயனாளி ஒப்புதல் தொகுதி மற்றும் அறிக்கை தொகுதி (administrator module, registration module, vaccination module, beneficiary acknowledgement module, and report module) என ஐந்து தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முன்னணி சுகாதார ஊழியர்கள் அல்லாத குடிமக்கள் பதிவு தொகுதி மூலம் தடுப்பூசிக்கு பதிவு செய்ய முடியும்.  "இது உள்ளூர் அதிகாரிகள் அல்லது சர்வேயர்களால் வழங்கப்பட்ட இணை நோயுற்ற தன்மை குறித்த மொத்த தரவைப் பதிவேற்றும்" ("It will upload bulk data on co-morbidity provided by local authorities or by surveyors,") என்று அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.



கோ-வின் ஆப்ஸில் உள்ள நிர்வாகி தொகுதி மூலம், இந்த தடுப்பூசி அமர்வுகளை (Session) நடத்தும் நிர்வாகிகள், அமர்வுகளை மேலும் உருவாக்குவார்கள், மேலும் தடுப்பூசிகளை பற்றி அந்தந்த மேலாளர்களுக்கு அறிவிக்கப்படும். அதேசமயம், தடுப்பூசி தொகுதி பயனாளி விவரங்களை சரிபார்க்கும் மற்றும் தடுப்பூசி நிலையை புதுப்பிக்கும். பயனாளி ஒப்புதல் தொகுதி, பயனாளிகளுக்கு SMS அனுப்பும் மற்றும் ஒருவர் தடுப்பூசி போட்ட பிறகு கியூஆர் அடிப்படையிலான சான்றிதழ்களை (QR-based certificates) உருவாக்கும். இதுவரை எத்தனை தடுப்பூசி அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன, எத்தனை பேர் கலந்து கொண்டனர், எத்தனை பேர் வெளியேறினார்கள் போன்ற அறிக்கைகளை, அறிக்கை தொகுதியாக தயாரிக்கும்.

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் (Union Health Secretary Rajesh Bhushan) பத்திரிகையாளர் சந்திப்பின் போது கோ-வின் மொபைல் ஆப்ஸும் (CoWin-20) குளிர்-சேமிப்பு வசதிகளின் (cold-storage facilities) வெப்பநிலையின் நிகழ்நேர டேட்டாவை பிரதான சேவையகத்திற்கு (Servar) அனுப்பவும். இது முக்கியமாக இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பு (Electronic Vaccine Intelligence Network (eVIN)) அமைப்பின் விரிவாக்கம் ஆகும். இந்தியாவில் COVID-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி இயக்கம் மூன்று தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் தொடங்குகிறது.

கொரோனா பாதித்த பெண்களை விட ஆண்களுக்கு மூன்று மடங்கு சிகிச்சை தேவையா..? காரணம் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்

ஃபைசர், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக் (Pfizer, Serum Institute of India, Bharat Biotech) - தங்கள் தடுப்பூசி வேட்பாளர்களின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்திருக்கலாம். பத்திரிகையாளர் சந்திப்பின் போது, மத்திய சுகாதார செயலாளர் பூஷண், சுமார் ஒரு கோடி முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் கிடைக்கும் என்று கூறினார். இருப்பினும், சில மாதங்கள் கழித்து குடிமக்கள் இந்த திட்டத்திற்காக தங்களை பதிவு செய்ய முடியும். கோ-வின் ஆப்ஸின் (CoWin-20) மூலம், கோவிட் -19 விநியோகிக்க அரசாங்கம் விரும்புகிறது.

corona vaccine

இந்த நேரத்தில், கோவின் -20 (CoWin-20) இன்னும் வளர்ச்சியில் உள்ளது, மேலும் ஆப்ஸுக்கு கிடைக்கும் விவரங்களை கூகுள், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Google Play Store, and Apple App Store) பகிர்ந்து கொள்ளவில்லை. KaiOSல் இயங்கும் ஜியோ போன்களிலும் (Jio phones) இந்த ஆப்ஸ் விரைவில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதார தொழிலாளர்கள் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட முதியோருக்குத் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். தடுப்பூசி விநியோகத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் குழுக்கள் இணைந்து செயல்படுகின்றன. தடுப்பூசி விநியோகத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு நிபுணத்துவம் மற்றும் திறன் அதிகம் உள்ளது. தடுப்பூசி துறையில் நமக்கு மிகப்பெரிய, அனுபவம் வாய்ந்த கட்டமைப்பு உள்ளது. அதை முழுமையாகப் பயன்படுத்துவோம்" என சுகாதார செயலாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Published by:Sivaranjani E
First published: