ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நீண்ட நாட்களாக முதுகு வலியா? சரி செய்ய சில சிம்பிள் டிப்ஸ்!

நீண்ட நாட்களாக முதுகு வலியா? சரி செய்ய சில சிம்பிள் டிப்ஸ்!

முதுகு வலி

முதுகு வலி

உங்களது முதுகு வலியை மோசமாக்குவது எந்தெந்த செயல்பாடுகள் என்பதை கவனித்து கூடுமானவரை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்று இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை பலரும் எதிர்கொள்ளும் நாள்பட்ட நோயாக மாறி இருக்கிறது முதுகு வலி. மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் முதுகுவலி நீடித்தால் அது நாள்பட்டதாக கருதப்படுகிறது.

  நாள்பட்ட முதுகுவலி பொதுவாக வயது தொடர்பானது, ஆனால் முந்தைய காயத்தின் விளைவாகவும் ஏற்படலாம். முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களிடையேயும் தற்போது நாள்பட்ட முதுகுவலி அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணம் உட்கார்ந்த வாழ்க்கை முறை, போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாதது மற்றும் ஆரோக்கியமற்ற வாழக்கை முறை பழக்கங்கள் காரணமாக இருக்கின்றன. விளையாட்டு காயங்கள், நெகிழ்வான மூட்டுகள், பிறவி முதுகெலும்பு பிரச்சினைகள் போன்ற பல காரணங்கள் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே நாள்பட்ட முதுகுவலியை ஏற்படுத்துகிறது.

  சிகரெட், மது பழங்கங்களை உடையவர்கள், டிப்ரஷன் போன்ற மனநல சிக்கல்களை கொண்ட இளம் வயதினர் முதுகுவலியால் அடிக்கடி பாதிக்கப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

  இப்படி பல தரப்பினரும் எதிர்கொள்ளும் பொதுவான நாள்பட்ட சிக்கலாக மாறி இருக்கும் முதுகு வலியை நிர்வகிக்க உதவும் டிப்ஸ்கள் இங்கே...

  நாள்தோறும் சுமார் 10 - 20 நிமிடங்கள் முழு உடலையும் நன்றாக ஸ்ட்ரெச் செய்து யோகா போன்ற பயிற்சிகளை செய்யாலாம்.
  தசைகளை வலுப்படுத்த, முதுகு வலியிலிருந்து கவனத்தை திசை திருப்ப முடிந்தவரை சுறுசுறுப்பாக இருக்கவும்.
  ஆரோக்கியமான எடையை பராமரிப்பதன் மூலம் உங்கள் முதுகுத்தண்டில் கொடுக்கப்படும் அழுத்தத்தைக் குறைக்கலாம். இதன் மூலம் உங்கள் முதுகுவலி கணிசமாக குறையும்.
  கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்ய நேரிடும் போது அல்லது நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்தும் போது பலரும் ஒரே பொஷிஷனிலோ அல்லது தவறான பொஷிஷனிலோ உட்கார்ந்து முதுகு வலியை ஏற்படுத்தி கொள்கின்றனர். அவ்வப்போது எழுந்து நடப்பது, கழுத்து மற்றும் கீழ் முதுகுடன் சீரான நிலையில் நேரான போஸை பராமரித்தபடி அமர்வது, சரியான டிஸ்பிளே மானிட்டரை பின்பற்றுவதன் மூலம் முதுகு வலியை குறைக்கலாம்.
  முதுகுவலியை விரைவாகக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகக் கண்டறியப்பட்டுள்ளது. பார்ஷியல் க்ரஞ்சஸ், பிரிட்ஜ், ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச்சஸ், கேட் ஸ்ட்ரெச், ஷோல்டர் & நெக் ரோல் உள்ளிட்ட ஒர்கவுட்கள் தசைகள், மூட்டுகள் மற்றும் ஸ்பைனல் டிஸ்க்ஸ்களின் திரவத்தை மீட்டெடுக்க உதவும்.
  உங்களது முதுகு வலியை மோசமாக்குவது எந்தெந்த செயல்பாடுகள் என்பதை கவனித்து கூடுமானவரை அவற்றை தவிர்ப்பது முதுகு வலி தீவிரமடைய விடாமல் தடுக்கும்.
  நீண்ட நேரம் ஒரே இடத்தில் அல்லது நிலையில் உட்கார நேர்ந்தால் அது உங்கள் முதுகு வலியை இன்னும் மோசமாக்கும். எனவே சில நிமிடங்கள் எழுந்து நிற்பது அல்லது நடப்பது கடும் முதுகு வலியை தவிர்க்க உதவும்.
  நாள்தோறும் போகும் விறுவிறுப்பான வாக்கிங் முதுகு வலியைப் போக்க எளிதான மற்றும் பயனுள்ள வழி. முதுகுத்தண்டின் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, ரத்தத்தில் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்க ஒர்கவுட்கள் & வாக்கிங் உதவுகின்றன.
  கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்த்து விட்டு நாள் முழுவதும் பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிப்பது முதுகெலும்பு பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.
  சில சமயத்தில் டிரான்ஸ் கொழுப்புகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மிகவும் அழற்சியை ஏற்படுத்த கூடும். உங்கள் உணவு பழக்கம் உங்களது நாள்பட்ட முதுகுவலிக்கு காரணமாக இருக்கிறதா அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை கண்டறிய உரிய மருத்துவரை அணுகவும்.
  மோசமான தூக்கம் எந்த வலியாக இருந்தாலும் அதை மோசமாக்கும். எனவே தினசரி 7 - 8 மணி நேரம் தூங்குவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். அதே போல தூங்கும் போது சரியான தோரணையில் நீங்கள் தூங்காவிட்டாலும் அது முதுகு வலிக்கு பங்களிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
  Published by:Josephine Aarthy
  First published:

  Tags: Back pain, Chronic Disease, Workout