பெரும்பாலான ஆண்களுக்கு ஆணுறுப்பு குறித்த கவலை இருக்கத்தான் செய்கிறது. தன்னுடைய ஆணுறுப்பு போதுமான அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதா என பலரும் கவலை அடைகின்றனர். ஆணுறுப்பு பெரியதாக இருந்தால் சிறப்பாக செயல்பட முடியும் என நினைக்கின்றனர். ஆனால், சராசரி அளவில்தான் பெரும்பாலான ஆண்களுக்கு ஆணுறுப்பு இருக்கிறது என்றும், அதை வைத்தே அவர்களது பெண் துணை மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
செக்ஸ் உறவில் ஒருவருக்கு கிடைக்கும் திருப்திக்கும், ஆணுறுப்பு அளவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். அன்பு மற்றும் காதல் உணர்ச்சி போன்றவையும் கூட செக்ஸ் உறவில் இன்பம் கிடைப்பதற்கான காரணங்களாக உள்ளன. எனினும், ஆணுறுப்பின் சராசரி அளவு என்ன, எந்த வயது வரை அது வளர்ச்சி அடைகிறது போன்ற தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஆணுறுப்பு வளர்ச்சிக்கு கால வரையறை உண்டா?
சிறுவயதில் இருந்தே ஆணுறுப்பின் வளர்ச்சி தொடங்கி விடுகிறது. எனினும், 12 முதல் 16 வரையிலான வயதில் ஒரு ஆண், பருவ வயதுக்கு வரும் சமயத்தில் தனது உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுவதை உணர முடியும். குறிப்பாக, ஆணுறுப்பின் வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்படும். உடலில் சுரக்கும் டெஸ்டிரோடோன் காரணமாக இந்த மாற்றங்கள் தென்படும். இந்த காலகட்டத்தில் தான் ஆணுறுப்பு மிக வேகமாக வளர்ச்சி அடையும், அதன்நீளம் மற்றும் பருமன் அளவு அதிகரிக்கும்.
also read : உங்கள் செக்ஸ் வாழ்க்கை செம்ம கிக்காக இருக்க இதை முயற்சி செஞ்சு பாருங்க..!
அதேசமயம், ஆண்களின் விதைப்பைகள் என்பது பிறந்தபோது இருக்கும் அதே அளவில் நீடிக்கும். 8 அல்லது 9 வயதுக்கு பிறகுதான் வளர தொடங்குகின்றன. 11 முதல் 15 வயது வரையில் அவை மிகுந்த வளர்ச்சியை அடையும்.
வளர்ச்சி எப்போது நின்று போகிறது?
ஆண்களின் பருவ வயது முடியும் சமயத்தில் ஆணுறுப்பின் வளர்ச்சியும் நின்று போகும். அதே சமயம், ஆண்களின் உயரத்திற்கும், ஆணுறுப்பின் வளர்ச்சிக்கும் இடையே தொடர்பு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்களின் உயரம் வளர, வளர, அதற்கேற்ப ஆணுறுப்பின் அளவும் வளர்ச்சி அடையும்.
சராசரி அளவு என்ன?
கடந்த 2020ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, விரைப்புத்தன்மையில் உள்ள ஒரு ஆணுறுப்பின் சராசரி அளவு என்பது 5.1 இன்ச் முதல் 5.5 இன்ச் வரை ஆகும். சராசரியாக ஆணுறுப்பின் பருமன் அளவு 4.59 இன்ச் ஆகும்.
ஆணுறுப்பின் வளர்ச்சியை பாதிக்கும் விஷயங்கள்
மரபணு, ஹார்மோன்கள், வாழ்வியல் பழக்க வழக்கங்கள் போன்ற பல்வேறு விஷயங்கள் ஆணுறுப்பின் வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. ஒருவரின் உடல் வாகு, மருத்துவ ரீதியிலான பிரச்சினைகள் போன்றவை காரணமாகவும் ஆணுறுப்பின் தோற்றத்தில் மாற்றம் தென்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.