டயாலிசிஸ் காலத்தில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்!

பகுதி உணவு கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவு சமநிலையை வைத்திருக்க உங்கள் தினசரி கலோரியை சரியான எண்ணிக்கையில் வைத்திருங்கள்.

டயாலிசிஸ் காலத்தில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்!
மாதிரி படம்
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 9:36 PM IST
  • Share this:
டயாலிசிஸ் காலத்தில் நீங்கள் சீரான உணவு மற்றும் உட்கொள்வது, இன்சுலின் அளவை சரியாக எடுத்து கொள்வது (மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டும்) மற்றும் நீங்கள் டயாலிசிஸில் இருக்கும்போது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியம்.

நீரிழிவு நோய் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு (சி.கே.டி) முக்கிய காரணமாக உள்ளது. நீரிழிவு நோயாளி நோயின் 5ம் கட்டத்தை அடையும் போது டயாலிசிஸ் வழக்கமாக தொடங்குகிறது. டைப் 1 அல்லது டைப் 2 நீரிழிவு என்பது இந்தியாவின் முக்கிய நீரிழிவு பிரச்னைகளில் ஒன்றாகும். இது பெரும்பாலும் நோயாளிகளின் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.

இது நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது. உண்மையில் உங்கள் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை சிறுநீரகங்களில் உள்ள மூலக்கூறு இரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கிறது


நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் :

இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போகாமல் தடுக்க ஒரு நாளைக்கு மூன்று வேளை சரியான உணவை உட்கொள்ளுங்கள். நடுவில் ஆரோக்கியமான தின்பண்டங்களை சேர்க்கவும்.

அதிக கலோரி கொண்ட உணவுகளை தவிர்க்கவும். குறிப்பாக எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.உங்கள் உணவில் நார்ச்சத்தை சேர்க்க குறைந்த பொட்டாசியம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.

உணவில் சர்க்கரை இல்லாத மாற்று வழிகளைப் பயன்படுத்துங்கள். பதப்படுத்தப்படாத உணவுகளான தானியங்கள், காய்கறிகள், பழங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் கொழுப்பு இல்லாத இறைச்சிகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

பகுதி உணவு கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவு சமநிலையை வைத்திருக்க உங்கள் தினசரி கலோரியை சரியான எண்ணிக்கையில் வைத்திருங்கள்.

திரவ உணவுகளை தவிர்க்கவும்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து குறிப்புகள் :

மருத்துவர் பரிந்துரைத்தயின்படி உங்கள் இரத்த சர்க்கரையை அடிக்கடி சரிபார்க்கவும்

உங்கள் நீரிழிவு மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள்

டயாலிசிஸ் காலத்தில் குறிப்பாக டயாலிசிஸ் சிகிச்சையை தொடங்குவதற்கு முன்பு உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை அடிக்கடி கண்காணிக்கவும்.நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள் :

உங்கள் உடற்பயிற்சி திட்டத்தை உங்கள் மருத்துவரிடம் முன்பே விவாதிக்கவும்.

தினமும் ஒரு சிறிய உடற்பயிற்சி அல்லது வாரத்திற்கு மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்வது உடல் எடை அதிகரிக்காமல் தடுக்க உதவும்.

நன்கு சீரான உணவை உட்கொள்வது, மருந்துகள், இன்சுலினை சரியாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

மனதையும், உடலையும் அமைதிப்படுத்த யோகா உதவும். இவற்றை சரியாக கடைபிடித்து வந்தாலே நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்!
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading