சீத்தாப்பழம் என்பது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு சத்தான பழமாகும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும், சீத்தாப்பழம் பருவ காலத்து பழம் என்பதால் தற்போது சீசனில் உள்ளது. எனவே, மழைக்காலங்களில் உங்கள் டயட்டின் ஒரு பகுதியாக சீத்தாப்பழம் இருக்க வேண்டும். உங்கள் டயட்டில் சீத்தாப்பழத்தை சேர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர். அவர் தனது சமீபத்திய பதிவு ஒன்றில், சித்தாப்பழம் குறித்து சில காலமாக பரவி வரும் கட்டுக்கதைகளைப் பற்றி பேசுகிறார். மேலும், இப்பழத்தைப் பற்றிய உண்மைகள், உள்ளூர், பருவகால மற்றும் ஆரோக்கியம் பற்றி ருஜுதா என்ன சொல்கிறார் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
சீத்தாப்பழம்: நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்…
கட்டுக்கதை:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தவிர்க்க வேண்டும்.
உண்மை:
சீத்தாப்பழம் என்பது கிளைசெமிக் இன்டெக்ஸ் 54 கொண்ட ஒரு பழமாகும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, கிளைசெமிக் இன்டெக்ஸ் 55 மற்றும் அதற்கும் குறைவான உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.
இதையும் படிங்க | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!
கட்டுக்கதை:
இதய நோயாளிகள் சித்தாப்பழத்தை தவிர்க்க வேண்டும்.
உண்மை:
உண்மை என்னவென்றால், சீத்தாப்பழம் எப்படி நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ, அப்படிதான் இதய நோயாளிகளுக்கும். இதில் பொட்டாசியம், மேங்கனீஸ் மற்றும் வைட்டமின் சி போன்ற பயனுள்ள தாதுக்கள் உள்ளன. ஆரோக்கியமான இதயம் மற்றும் சுற்றோட்ட அமைப்புக்கு இந்த பழம் உங்கள் டயட்டில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
கட்டுக்கதை:
அதிக உடல் எடை உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தவிர்க்க வேண்டும்.
உண்மை:
இங்குள்ள கட்டுக்கதை என்னவென்றால், அதிக உடல் எடை கொண்டவர்கள் சீத்தாப்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று நம்புகிறார்கள். ஆனால், உண்மையில் சீத்தாப்பழம் செரிமானத்திற்கு நல்லது. அதுமட்டுமின்றி, வீக்கத்தைக் குறைக்கவும் உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா கூறுகிறார். மேலும், இப்பழம் அமிலத்தன்மையைத் தடுக்கும் மற்றும் புண்களை ஆற்றும். சீத்தாப்பழம் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், குறிப்பாக வைட்டமின் பி6-ன் நல்ல மூலமாகும்.
இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?
கட்டுக்கதை:
பிசிஓடி உள்ள பெண்கள் சீத்தாப்பழத்தை தவிர்க்க வேண்டும்.
உண்மை:
இந்த கட்டுக்கதை, சீத்தாப்பழம் பற்றிய மற்றொரு பிரபலமான கட்டுக்கதை ஆகும். ஆனால், பிசிஓடி உள்ள பெண்கள் இரும்புச்சத்துக்கான நல்ல ஆதாரமாக இருக்கும் சீத்தாப்பழத்தை சாப்பிட வேண்டும் என்று ருஜுதா கூறுகிறார். இது கருவுறுதலை மேம்படுத்துகிறது, சோர்வு உணர்வைக் குறைத்து எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது.
ஆகவே, எல்லா வயதினரும் சீத்தாப்பழத்தை குற்ற உணர்வின்றி சாப்பிடலாம். சீத்தாப்பழம் உங்கள் சருமத்தின் நிறம், கூந்தலின் தரம், கண்பார்வை, மூளை ஆரோக்கியம் மற்றும் ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றை மேம்படுத்தும். இது உயர் உயிரியல் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதால் அவை ஒப்சோஜெனிக் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fruits, Healthy Life