உலகம் முழுவதும் சமீபத்தில் ஏற்பட்ட ஓமிக்ரான் தொற்றானது பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் ஆங்காங்கே இன்னும் கொரோனா பாதிப்பு இருக்கதான் செய்கிறது. ஓமிக்ரான் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததற்கு காரணமாக மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டதையும், மாஸ்க் கட்டாயம் போன்ற விஷயங்களையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முகக்கவசங்கள் நமக்கு ஒரு சிறிய சிரமமாக இருந்தாலும், அவை SARS-CoV-2 ஐ தடுப்பதில் முக்கியமாக இருக்கின்றன. ஏனெனில், வைரஸ் நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம் பரவுகிறது. சரி, என்னதான் தொற்று குறைந்தாலும் நீங்கள் மாஸ்க்கை அலட்சியப்படுத்தக்கூடாது என்பதற்கான நான்கு காரணங்கள் இங்கே.
முகக்கவசம் அணிவது கொரோனா தாக்கும் வாய்ப்பை பெருமளவில் குறைக்கும்:
பல ஆய்வுகள், கொரோனா தொற்றிலிருந்து முகக்கவசம் நம்மை பாதுகாப்பதைக் காட்டுகின்றன. N95 சுவாசக் கருவிகள் மிகப் பெரிய பாதுகாப்பை வழங்கும் அதே வேளையில், துணி மாஸ்க்குகள் கூட நன்மை பயக்கும். அறுவைசிகிச்சை முகக்கவசம் 66 சதவிகிதம் மற்றும் துணி முகக்கவசங்ளுக்கு 56 சதவிகிதம் உடன் ஒப்பிடும்போது, N95s சுவாசக் கருவிகள் கொரொனா பாதிப்பில் இருந்து நம்மை 83 சதவிகிதம் காக்கின்றன.
இதையும் படிங்க | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!
எல்லோரும் முகக்கவசத்தை அணியும் போது பாதுகாப்பு மிகவும் அதிகமாக இருக்கும். ஏனெனில், பாதிக்கப்பட்டவர்கள் வைரஸை காற்றில் வெளியேற்றுவதைத் தடுக்கிறது. எல்லோரும் மாஸ்க் அணிந்தால், காற்றில் வைரஸ் பரவல் மிகவும் குறைவாக இருக்கும்.
கொரோனா இருப்பது உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம்:
அறிகுறிகள் இல்லாமல் வைரஸ் பரவுவது பெரும் பாதிப்பிற்கான முக்கிய உந்துதலாகும். மேலும், நம்மைச் சுற்றி யார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் அறிய முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் அறிகுறியற்றவர்களாக இருக்கலாம் அல்லது அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று தெரியாமல் இருக்கலாம். இது குறிப்பாக ஓமிக்ரானுக்கு பொருந்தும். ஒட்டுமொத்தமாக, நான்கு நோய்த்தொற்றுகளில் ஒன்று அறிகுறியற்றது. எனவே, வெளியில் சொல்லும்போது, குறிப்பாக கூட்டத்திற்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது சிறந்ததே!
மேலும், கொரோனா நோயால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளையும் மாஸ்க் பாதுகாக்கிறது என்பது நிரூபணமான உண்மை. SARS-CoV-2 நோய்த்தொற்றில் இருந்து மீண்ட பிறகும் உடலில் நீண்ட கால இதயம், நுரையீரல் மற்றும் மூளை பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1
மாஸ்க் உங்கள் சக ஊழியர்களைப் பாதுகாக்கின்றன:
கொரோனா பாதிப்பு குறைந்ததால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை விலக்கிக்கொண்டு அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர். போதுமான காற்றோட்டம் இல்லாமல் நீண்ட நேரத்திற்கு ஒரு இடத்தில் இருக்கும் போது கோவிட் பரவும் அபாயம் அதிகம். எனவே, மாஸ்க் இல்லாமல் எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பது ஆபத்தானது. குறிப்பாக பாதுகாப்பான உட்புற காற்று கவனிக்கப்படாவிட்டால் மிகவும் ஆபத்து.
எனவே, அலுவலகங்களுக்கு திரும்பினாலும் ஊழியர்கள் தங்கள் முகக்கவசங்களை தவறாமல் பயன்படுத்துவது அவர்களுக்கு மட்டுமல்ல சுற்றியுள்ளவர்களுக்கும் பாதுகாப்பானது.
மற்றவர்கள் உங்கள் வழியைப் பின்பற்றலாம்:
சூப்பர் மார்க்கெட் போன்ற மக்கள் சற்று அதிகளவில் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்த வெகு சில நபர்களில் ஒருவராக இருப்பது, மாஸ்க்கை தொடர விரும்புபவர்களுக்கான ஒரு கடினமான நேரமாக உள்ளது. ஒருபடி மேலே சென்று, மாஸ்க் அணிந்தவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான செய்திகளும் உள்ளன.
முகக்கவசத்தை நாம் எவ்வளவு இயல்பாகப் பார்க்கிறோமோ, அவ்வளவு அதிகமாக சமூகம் பாதுகாக்கப்படும்.
நாம் எவ்வளவு விரும்புகிறோமோ, அந்த அளவுக்கு தொற்றுநோய் முடிந்துவிடவில்லை, அடுத்த புதிய மாறுபாடுகள் தோன்றக்கூடும். எனவே, ஆரோக்கியம், பொருளாதாரம் மற்றும் இயல்பான செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான சிறந்த வழி மாஸ்க்கை தொடர்ந்து அணிவதே ஆகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.