ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் முதல் உப்பு வரை… இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கான எச்சரிக்கை… ஓர் அலர்ட் பதிவு

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் முதல் உப்பு வரை… இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கான எச்சரிக்கை… ஓர் அலர்ட் பதிவு

இரத்த அழுத்தம் சார்ந்த நோய்

இரத்த அழுத்தம் சார்ந்த நோய்

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஒரு வகை கொழுப்பைக் கொண்டுள்ளன. இந்த எண்ணெய் பார்ப்பதற்கு சுத்தமாகவும் தெளிவாகவும் தோற்றினாலும், இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யும் வெண்ணெய்யும் ஒமேகா-6 கொழுப்பு வகையால் நிரம்பியவை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இன்றைய அதிவேக உலகில் பலர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் என்பது உங்கள் இரத்த நாளங்களில் இரத்தத்தின் இயல்பான வேகமானது அசாதாரணமான அளவில் அதிகரிக்கும் ஒரு நிலை ஆகும். இதன் விளைவாக, உங்கள் இரத்த நாளங்களின் சுவர்கள் பலவீனமடைந்து, உங்கள் இதயம் வழக்கமான விகிதத்தை விட அதிகமாக ’பம்ப்’ செய்யத் தொடங்குகிறது.

இந்த வேகமான ’பம்பிங்’ உங்கள் இதயத்தை அதிகமாக உழைக்க வைப்பதால் மாரடைப்பு மற்றும் பிற மாரடைப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எலுமிச்சை, ஆரஞ்ச், திராட்சை போன்ற பழங்களின் உதவியுடன் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பூசணி விதைகளும் இரத்த அழுத்தத்தை சீர் செய்ய உதவும் முக்கிய கூறாகும். சரி, நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் நீங்கள் விலகி இருக்க வேண்டிய 5 வெவ்வேறு உணவுகள் குறித்து பார்க்கலாம்.

உப்பு:

உயர் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வரும்போது, உப்பு மிக அபாயமான ஒரு பொருளாகும். ஒவ்வொரு முறையும் உங்கள் உணவில் சோடியம் உள்ளடக்கத்தை நீங்கள் அதிகரிக்கும்போது, உங்கள் உடலின் அயனி சமநிலையை நீங்கள் தொந்தரவு செய்கிறீர்கள் என்று அர்த்தம். இது பொதுவாக மிகவும் மோசமான நிலையில் உங்களை கொண்டு சேர்த்துவிடும். எனவே, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, அவர்கள் சோடியம் உட்கொள்ளலை 1,500 மி.கிராமுக்கு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் (Refined Oil):

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஒரு வகை கொழுப்பைக் கொண்டுள்ளன. இந்த எண்ணெய் பார்ப்பதற்கு சுத்தமாகவும் தெளிவாகவும் தோற்றமளிக்கின்றன. உண்மை என்னவென்றால், இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களும் வெண்ணெய்யும் ஒமேகா-6 கொழுப்பு வகையால் நிரம்பியவை. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஊறுகாய்:

பெரும்பாலான நிலைகளில், நீங்கள் எதையும் கெடாமல் பாதுகாக்க வேண்டியிருக்கும் போது, அதில் உப்புதான் சேர்க்க வேண்டியிருக்கும். அந்த வகையில் ஊறுகாய்களிலும் உப்புதான் அதிகம். ஊறுகாயில் சேர்க்கப்படும் காய்கறிகள் கெடாமல் புதியதாக இருக்க உப்பை அதிகம் சேர்க்கிறோம். ஆனால் மோசமான பகுதி என்னவென்றால், அவை பெரும்பாலும் ஏராளமான எண்ணெய் அல்லது வினிகரில் தோய்த்து வைக்கப்படுகின்றன. இதனால் அவை நொதித்து, சுவையை பராமரித்து கெடாமல் வைத்திருக்கும். ஆகவே, ஊறுகாய் இரத்த அழுத்தத்திற்கு தீங்கை விளைவிக்கும்.

இதையும் படிங்க | வெங்காயத்தின் இந்த 5 நன்மைகளை தெரிந்துகொண்டால் இனி உணவில் இருந்து ஒதுக்க மாட்டீர்கள்..!

பாலாடைக்கட்டி (Cheese):

பாலாடைக்கட்டி உணவில் சேர்க்கையில் சுவையை மேம்படுத்தும். ஆனால், லேக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்களுக்கு பாலாடைக்கட்டி அபாயம் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். பொதுவாகவே பாலாடைக்கட்டி அதிகமாக உட்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. பாலாடைக்கட்டியில் கால்சியம் மற்றும் புரதம் போன்ற சில ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இருப்பினும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நீங்கள் காணும் பாலாடைக்கட்டி வகைகள் உப்பு நிரம்பியவை. இது உங்கள் இரத்த அழுத்தத்திற்கு நல்லதல்ல. நீங்கள் அதிக பாலாடைக்கட்டி சாப்பிடும்போது கொழுப்பின் அளவு அதிகரிக்கும். அதன் விளைவாக, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

மது அருந்துவது கேடு:

நீங்கள் மருப்பிரியராக இருந்தால், மது குடிப்பதால் ஒரு ஆரோக்கிய நன்மை கூட இல்லை என்பதை அறிந்து அதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், நீங்கள் அதிகமாக மது அருந்தும்போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

First published:

Tags: Blood Pressure, High Blood Pressure