Home /News /lifestyle /

அச்சுறுத்தும் Omicron XE வேரியன்ட்! குழந்தைகளில் காணப்படும் பொதுவான கோவிட் அறிகுறிகள் இங்கே..

அச்சுறுத்தும் Omicron XE வேரியன்ட்! குழந்தைகளில் காணப்படும் பொதுவான கோவிட் அறிகுறிகள் இங்கே..

காட்சி படம்

காட்சி படம்

கோவிட்-19 வைரஸின் பல்வேறு வேரியன்ட்கள் உலகளவில் இன்னும் அச்சறுத்துதலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.

கோவிட்-19 வைரஸின் பல்வேறு வேரியன்ட்கள் உலகளவில் இன்னும் அச்சறுத்துதலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. பெருந்தொற்றின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் தொற்று பரவல் காரணமாக அங்கே பல பகுதிகளில் லாக்டவுன் போடப்பட்டு வருகின்றன.

இங்கே இந்தியாவிலும் சில இடங்களில் தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து கொண்டே இருப்பதால் மீண்டும் பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கோவிட் தொற்றை பொறுத்த வரை புதிதாக தோன்றும் வேரியன்ட்கள் முன்பு இருக்கும் வேரியன்ட்களை விட எப்போதும் வலிமை வாய்ந்ததாகவே இருக்கிறது. கொரோனா வைரஸ் ஏற்கனவே பல பிறழ்வுகளை கண்டுள்ள நிலையில் இப்போது ஆபத்தானதாக் கருதப்படும் வேரியன்ட்டாக உள்ளது ஒமைக்ரான் XE.

XE கோவிட் வேரியன்ட் பாதிப்புகள் அதிகம் காணப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே வயதானவர்களும், குழந்தைகளும் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் தொற்று மீண்டும் எழுச்சி பெற்று வரும் இந்த முக்கியமான நேரத்தில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சமீபத்திய தகவல்படி உத்தரபிரதேசத்தில் பதிவான புதிய கோவிட் பாதிப்புகளில் 30% குழந்தைகள் ஆவர். டெல்லியில் பல குழந்தைகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பீதி அடைய தேவையில்லை என்றாலும் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம்.குழந்தைகளில் XE வேரியன்ட்டின் அறிகுறிகள்:

Omicron BA.1 மற்றும் BA.2 போன்ற முந்தைய வேரியன்ட்களை விட இந்த XE வேரியன்ட் அதிகமாக பரவ கூடியதாக அறியப்படுகிறது. குறிப்பாக தடுப்பூசி போட்டிருப்பவர்களிடம் கூட இந்த வேரியன்ட் கண்டறியப்பட்டுள்ளதால் குழந்தைகளை கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.குழந்தைகளின் அறிகுறிகள் பொதுவாக லேசானவை மற்றும் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, உடல் வலி மற்றும் வறட்டு இருமல் போன்ற மேல் சுவாசக் குழாயின் அறிகுறிகளை உள்ளடக்கியது என்கிறார்கள் நிபுணர்கள். சில குழந்தைகளுக்கு அடிவயிற்றில் வலி ஏற்படும்.

also read : குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 கோல்டன் ரூல்ஸ்..!

அதே போல அடிப்படை உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள், குறிப்பாக இதயம், நுரையீரல், கல்லீரல் அல்லது சிறுநீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள், நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.குழந்தைகளில் கோவிட்டின் சில பொதுவான அறிகுறிகள்:

காய்ச்சல்: உடலில், குறிப்பாக மார்பு மற்றும் முதுகில் அதிக வெப்பநிலை மற்றும் தொடர் இருமல்

வறட்டு இருமல்: சில மணி நேரங்கள் அல்லது ஒரு நாளில் தொடர்ந்து வறட்டு இருமல் ஏற்படுவது கோவிட் நோயின் அறிகுறி.

வாசனை அல்லது சுவை உணர்வில் மாற்றம்: கோவிட்டால் பாதித்த பல குழந்தைகளுக்கு சுவை மற்றும் வாசனை தெரிவதில்லை.

also read : இரத்த வகையை வைத்தே உங்கள் இதய ஆரோக்கியத்தை சொல்லிவிடலாம் : எப்படி தெரியுமா..?

பசியின்மை: உணவு சாப்பிடுவதில் திடீரென் ஆர்வம் குறைவது

மூக்கு ஒழுகுதல்: மூக்கில் நீர் வடிதல் வழக்கத்தை விட நீண்ட நாள் நீடித்தால் உடனே குழந்தைக்கு கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும்.

வயிற்றுப்போக்கு: வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி மலம் கழிப்பது அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படுவது கோவிட் நோயின் மற்றொரு அறிகுறியாகும்.

முன்னெச்சரிக்கை:

மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் மாஸ்க் அணிவது, கூட்டத்தில் இருக்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்கு குழந்தைகளை மீண்டும் பழக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு கோவிட் நோயின் அறிகுறிகள் குறித்து புரியும் படி தெளிவாக விளக்க வேண்டும் அதே நேரத்தில் அவர்களை பயம் கொள்ள செய்ய கூடாது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Covid-19

அடுத்த செய்தி