முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மகளிர் நலன்: அந்தரங்க பகுதியில் வரக்கூடிய கெட்ட வாசனையை போக்குவது எப்படி?

மகளிர் நலன்: அந்தரங்க பகுதியில் வரக்கூடிய கெட்ட வாசனையை போக்குவது எப்படி?

vaginas smell different

vaginas smell different

வெவ்வேறு காரணங்களால் பெண்ணுறுப்பில் இருந்து கெட்ட வாசனை வருவது இயல்பானது தான். உதாரணத்திற்கு மாதவிலக்கு, உடலுறவு காலம், பிரசவகாலம், பெண்ணுறுப்பு கசிவு, சில மருந்து பயன்பாடுகள் போன்ற காரணங்களால் இந்த வாசனை வருகின்றது.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil |

பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து அனைத்து பெண்களும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், என்ன தான் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தாலும் கூட பெண்ணுறுப்பில் இருந்து எப்போதுமே ஒரு கெட்ட வாசனை வெளிவந்து கொண்டே இருப்பதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். இது உங்கள் மனதுக்கு கவலை தரக்கூடியதாக இருக்கலாம்.

ஆனால், பெண்ணுறுப்பில் இருந்து கெட்ட வாசனை வருவதொன்றும் ஆபத்தான விஷயம் கிடையாது. வெவ்வேறு காலச் சூழ்நிலைகளில், வெவ்வேறு காரணங்களால் பெண்ணுறுப்பில் இருந்து கெட்ட வாசனை வருவது இயல்பானது தான். உதாரணத்திற்கு மாதவிலக்கு, உடலுறவு காலம், பிரசவகாலம், பெண்ணுறுப்பு கசிவு, சில மருந்து பயன்பாடுகள் போன்ற காரணங்களால் இந்த வாசனை வருகின்றது.

பெண்ணுறுப்பானது தன்னியல்பாக சுத்தம் செய்து கொள்ளக் கூடியதாகும். இதற்கு ஏதுவான நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் பெண்ணுறுப்பில் உள்ளன. எனினும், புளித்த மோர் போர் கெட்ட வாசனை பெண்ணுறுப்பில் இருந்து வருவது உங்களுக்கு அசௌகரியத்தையும், கவலைகளையும் தருவதாக இருக்கலாம். இதற்கு எளிமையான வீட்டு முறை சிகிச்சைகளில் தீர்வு பெறலாம்.

Also Read : அதிகமாக ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? ஜாக்கிரதையா இருங்க..!

அனைத்து பெண்களுக்கும் வெவ்வேறு வாசனை வருமா?

பெண்ணுறுப்பை சுத்தம் செய்யும் லேக்டோபேசில்லஸ் பாக்டீரியா ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபடுகிறது. ஆகவே, அதைப் பொருத்து வாசனை மாறுபடலாம். ஏற்கனவே குறிப்பிட்டபடி மாதவிலக்கு, பாலுறவு போன்ற காரணங்களாலும் கெட்ட வாசனை மாறுபடும்.

சாதாரணமாக பெண்ணுறுப்பின் அமிலத்தன்மை 4.5க்கு குறைவாக இருக்கும். ஆணின் விந்தணு அமிலத்தன்மை 7.2 முதல் 8.0 வரை இருக்கும். இந்த இரண்டும் ஒன்றிணையும்போது வாசனை மாறுபடலாம்.

மருத்துவரை அணுக வேண்டுமா?

பெண்ணுறுப்பில் இருந்து வருகின்ற கெட்ட வாசனை இயல்பான அளவில் உள்ளது மற்றும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் அதுகுறித்து எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. ஆனால், பெண்ணுறுப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவது, அதனுடன் அரிப்பு, எரிச்சல், கசிவு போன்றவை ஏற்படுவது போன்ற தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.

வாசனையே பாலியல் உணர்ச்சியை தூண்டக்கூடியது

பண்டைய காலத்திற்கு பிந்தைய இடைக்காலத்தில், பெண்ணுறுப்பின் வாசனை தான் ஆண்களுக்கு பாலியல் உணர்ச்சியை தூண்டக் கூடியதாக இருந்துள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு கருமுட்டைகள் வெளியேறும் சமயத்தில் அதிக வாசம் இருப்பதை ஆண்கள் உணர்ந்துள்ளனர். மேலும், ஆண்களின் பாலியல் நடவடிக்கையை ஊக்குவிக்க கூடியதாக இது இருந்துள்ளது.

வாசனையை பலமாக்கும் உணவுகள் மற்றும் தவிர்க்கும் முறைகள்

மசாலா, வெங்காயம், பூண்டு, ப்ரோக்கோலி, காஃபி போன்ற உணவுகள் பெண்ணுறுப்பின் வாசனையை அதிகமாக்கும். அதிலும் இறைச்சி, பால் உணவுகள், மது போன்றவற்றை எடுத்துக் கொண்டால் கெட்ட வாசனை மிகுதியாக இருக்கும். அதே சமயம், ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றை சாப்பிட்டால் பெண்ணுறுப்பில் கெட்ட வாசனை சற்று குறையும்.

காட்டனில் தயாரான, தூய்மையான உள்ளாடைகளை அணிவது, நாளொன்றுக்கு இரண்டு முறை பெண்ணுறுப்பின் வெளிப்புற பகுதிகளை சுத்தம் செய்வது, பெண்ணுறுப்பின் உள்ளே சுத்தம் செய்வதை தவிர்ப்பது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் மூலமாக கெட்ட வாசனையை குறைக்க முடியும்.

First published:

Tags: Health tips, Women Care, Women Health