முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்த பழக்கவழக்கங்கள் உங்ககிட்ட இருந்தா... நீங்கள் ’இன்செக்யூர் பீப்புள்’! - அதனால் என்ன ஆகும் தெரியுமா?

இந்த பழக்கவழக்கங்கள் உங்ககிட்ட இருந்தா... நீங்கள் ’இன்செக்யூர் பீப்புள்’! - அதனால் என்ன ஆகும் தெரியுமா?

insecure people

insecure people

பாதுகாப்பு உணர்ச்சியற்ற மக்கள் மற்றவர்களின் கருத்துக்கள் மூலம் தங்கள் மதிப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிலையான தேவையை உணர்பவர்களாக இருக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil |

தன் மீதே சுய சந்தேகம் கொண்டவர்கள், போதுமான தன்னம்பிக்கை மற்றும் செல்ஃப் லவ் இல்லாதவர்கள், பாதுகாப்பின்மை உணர்ச்சியோடு வாழ்க்கையில் போராடுபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இன்செக்யூர் பீப்புள் (insecure people) என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

இவர்கள் பொதுவாக மற்றவர்களுடனான தனது உறவு குறித்து நம்பிக்கையில்லாத, தன்னம்பிக்கையற்ற, பாதுகாப்புணர்ச்சி இல்லாதவர்களாக இருப்பதால் பிறரிடமிருந்து வரும் விமர்சனங்களுக்கு பயந்து ஒதுங்கியே வாழ நினைப்பார்கள். இவர்கள் வெற்றிகரமான உறவில் இருந்தாலும்கூட தங்கள் திறன்களை பற்றி சந்தேகம் கொள்கிறார்கள்.

மேலும், தங்களை அமைதிப்படுத்தி கொள்ள, தங்களுக்குள் இருக்கும் பாதுகாப்பின்மையை உணர்ச்சியை மறைக்க பல முயற்சிகளை மற்றும் சில குறிப்பிடத்தக்க நடத்தைகளை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பாதுகாப்பின்மையை உணரும் மக்களின் குறிப்பிடத்தக்க பழக்கவழக்கங்கள் இங்கே:

பிறரிடமிருந்து வேலிடேஷன்:

பாதுகாப்பு உணர்ச்சியற்ற மக்கள் மற்றவர்களின் கருத்துக்கள் மூலம் தங்கள் மதிப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிலையான தேவையை உணர்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆளுமை அல்லது வேலைக்கு மற்றவர்களின் அங்கீகாரம் மற்றும் பாராட்டுகளை பெற முயற்சிக்கிறார்கள்.

இவர்கள் மற்றவர்களிடமிருந்து லைக்ஸ் மற்றும் பாராட்டுகளை தேடுவார்கள். அவர்களை பிறர் அங்கீகரிக்கும்போது மட்டுமே மகிழ்ச்சியாக உணர்வார்கள்.

Also Read : அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணம் வர இந்த நோய் கூட காரணமாக இருக்கலாம்..!

மிகவும் சென்சிட்டிவாக இருப்பார்கள்:

தங்களை பாதுகாப்பற்றவராக உணரும் மக்கள் பிறரின் விமர்சனங்களை ஏற்று கொள்ள முடியாமல் போராடுகிறார்கள். யாராவது தங்களின் சுய மதிப்பு மற்றும் ஆளுமையை கடுமையாக விமர்சித்து விட்டால் அதை கடந்து செல்ல முடியாமல் மனதில் வைத்து கொண்டு மிகவும் வருத்தப்படுவார்கள். விமர்சனங்களை எதிர்கொண்டால் இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருந்து அதிகம் கண்ணீர் வடிப்பார்கள் அல்லது கோபத்துடன் வேறொருவரை திட்டுவார்கள்.

பர்ஃபெக்ஷனிஸம்:

இந்த மக்கள் அனைவருக்கும் முன் எல்லா விஷயங்களிலும் இவர் பர்ஃபெக்டாக உள்ளார் என்று பெயர் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துபவர்களாக உள்ளனர். இவர்கள் தங்கள் குறைபாடுகளை வெளியில் காட்ட கொடுத்து எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும் என தொடர்ந்து முயற்சிப்பார்கள்.

சில நேரங்களில் அவர்கள் பர்ஃபெக்டாக அடைவதற்கான யோசனையில் வெறித்தனமாக இருப்பார்கள். இதற்கான அவர்களது வழிமுறை மிகவும் ஆரோக்கியமற்றதாக இருக்கலாம்.

மற்றவர்களுடன் ஒப்பிட்டு கொள்வார்கள்:

இவர்கள் தங்களை மற்றவர்களுடன் மிகவும் ஒப்பிட்டு கொள்வார்கள், மேலும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். மற்றவர்களுடன் தங்கள் திறமைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது தங்களது திறமை குறைவாக இருப்பதாக கருத்து பிறரை விட தாங்கள் தாழ்வாக இருப்பதாக கருதி கொள்கிறார்கள்.

Also Read :  பார்பிக்யூ உணவுகளால் உடலுக்கு இத்தனை நோய் அபாயங்கள் வருமா..? எச்சரிக்கும் மருத்துவர்கள்

அவர்கள் சிறிய சாதனைகள் செய்தால்கூட அதனை பெரிதாக நினைக்காமல் அந்த சாதனையை பிறரது சாதனைகளுடன் ஒப்பிட்டு தங்களை நினைத்து வருத்தப்படுவார்கள்.

மற்றவர்களின் மீதான நம்பிக்கை:

மற்றவர்களை நம்புவதில் இவர்களுக்கு நிறைய சிக்கல்கள் உள்ளன. பிறர் தங்களி நிராகரித்து விட கூடும் என்ற அச்சமும், எளிதாக தங்களை காயப்படுத்தி விடுவார்கள் என்ற தயக்கத்தினாலும் பிறர் மீது நம்பிக்கை வைக்க பயப்படுகிறார்கள். எனவே தங்கள் உணர்ச்சிக்கு சேதம் வராமல் இருக்க பாதுகாப்பாக இருப்பதை அதாவது மக்களை எளிதில் நம்பாமல் இருக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள்.

அதிக சிந்தனை:

பாதுகாப்பற்ற உணர்வுள்ளவர்கள் இயல்பான மக்களை விட அதிகம் சிந்திக்கிறார்கள். இவர்கள் பல வகையான எண்ணங்களில் மூழ்கி, ஒரு இக்கட்டான சூழல் ஏற்படுவதற்கு முன்பே அப்படியாகிவிடுமோ, இப்படி நடந்து விடுமோ என அதிகம் கவலைப்படுவார்கள். தேவையற்ற அவர்களது இந்த அதிகப்படியான சிந்தனைகள் கவலை மற்றும் பதற்றத்திற்கு வழிவகுக்கிறது.

First published:

Tags: Health Checkup, Health issues, Health tips