Home /News /lifestyle /

குளிர்காலத்தில் கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

குளிர்காலத்தில் கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

டுகு எண்ணெய் மசாஜ் உடலில் இரத்த ஓட்டத்தை தீவிரமாக மேம்படுத்த உதவுகிறது. இதனை செய்யும் போது, குளிர்காலத்தில் மூட்டு மற்றும் தசை வலிகள் நிவர்த்தியாகும்.

கடுகு எண்ணெய் என்பது பெரும்பாலான வட இந்தியர்களின் சமையலறைகளில் ஒரு மிகச்சிறந்த பொருளாகும். ஆனால் இந்த எண்ணெய்யை வெறுமனே சமைப்பதை விட நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். அதிலும் குறிப்பாக உடல் மசாஜ் செய்வதற்கு கடுகு எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

ஒரு முழுமையான மசாஜ் செய்துகொள்வது ஆண்டு முழுவதும் இனிமையானது என்றாலும், குளிர்காலத்தில் கடுகு எண்ணெயுடன் மசாஜ் செய்வது உண்மையில் நிறைய நன்மைகளை உங்களுக்கு வழங்கும். பொதுவாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் அதனை சரியான எண்ணெய்களை கொண்டு செய்யும் போது, அது உண்மையில் உங்கள் உடலை குணமாக்கும்.

இந்தியாவை சேர்ந்த பல குடும்பங்கள் அவர்களின் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய கடுகு எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் மற்றும் தசைகள் வளர உதவுவதற்காக கடுகு எண்ணெய்ப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல பெரியவர்களும் இந்த எண்ணெய் மூலம் உடலில் மசாஜ் செய்து கொள்வதால் நோய் தீர்க்கும் பண்புகளிலிருந்து பயனடையலாம். குளிர்காலத்தில் கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து கொள்வதால் ஏற்படும் சில நன்மைகள் குறித்து காண்போம்.



இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல்

சாதாரணமாக செய்யும் மசாஜ்களை போலவே, கடுகு எண்ணெய் மசாஜ் உடலில் இரத்த ஓட்டத்தை தீவிரமாக மேம்படுத்த உதவுகிறது. இதனை செய்யும் போது, குளிர்காலத்தில் மூட்டு மற்றும் தசை வலிகள் நிவர்த்தியாகும்.

உடலை வெப்பமடைய செய்தல்

கடுகு எண்ணெயுடன் மசாஜ் செய்து கொள்வது உடலை சூடேற்றுவது மட்டுமல்லாமல் உடலின் வெப்பத்தை உள்ளே வைத்திருக்க உதவுகிறது. ஒரு சூடான கடுகு எண்ணெய் மசாஜ் மூலம் உடலில் குளிரை நிர்வகிப்பது கொஞ்சம் எளிதாகிறது.

கன்ஜெஸனை குறைத்தல்

குளிர்காலங்களில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் எளிதில் வரக்கூடும். பொதுவான காய்ச்சல் குறைந்தது 3 முதல் 4 நாட்கள் நீடிக்கும் போது, எரிச்சலூட்டும் நாட்களை ஒரு பயனுள்ள மசாஜ் மூலம் இன்னும் கொஞ்சம் தாங்கக்கூடியதாக மாற்றலாம். கடுகு எண்ணெய் கன்ஜெஸனைத் தடுக்க உதவுகிறது மற்றும் உடலின் வலியை நீக்குகிறது. கடுகு எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால் மிகவும் நன்மை உடையதாக இருக்கும்.



கிருமி பாதுகாப்பு

கொரோனா தொற்றுநோய் பாதிப்பிலிருந்து கிருமிகள் குறித்து நாம் அனைவரும் அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறோம். அந்த வகையில் கடுகு எண்ணெயில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றது. மேலும் அவை தொல்லை தரும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. அதனால் தான் இது நீண்டகால பாதுகாப்பிற்காக ஊறுகாய்களில் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதனை கொண்டு நீங்கள் மசாஜ் செய்வதால் கிருமிகளை எதிர்த்து போராடும் நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

பிக்மென்ட்டேஷனை குறைகிறது

கடுகு எண்ணெயுடன் ஒரு வழக்கமான மசாஜ் பிக்மென்ட்டேஷனை குறைக்கவும், கருமையான புள்ளிகள் மற்றும் தழும்புகளை குறைக்கவும் உதவுகிறது. வாரம் இரண்டு நாள் மாசாஜ் செய்தால் விரைவில் நல்ல பலனை பெற முடியும்.

உங்கள் உடலில் மெட்டபாலிசத்தை மேம்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

சரும பராமரிப்பு

கடுகு எண்ணெய்யை சன்ஸ்கிரீனாகவும் பயன்படுத்தலாம். இது உங்கள் தோல் மற்றும் சூரியனின் புற ஊதா கதிர்களுக்கு இடையில் ஒரு தடையாக செயல்படுகிறது. தற்போது குளிர்காலம் என்பதால், உங்களுக்கு சூரிய பாதுகாப்பு தேவையில்லை என்று அர்த்தமல்ல. இது சருமத்தை சுத்தப்படுத்தி ஹைட்ரேட் செய்கிறது. அதாவது கடுமையான, வறண்ட காலநிலையில் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது
Published by:Sivaranjani E
First published:

Tags: Body massage, Musterd oil

அடுத்த செய்தி