இந்த காரணங்களால்தான் உங்கள் குழந்தையின் உடல் பருமன் அதிகரிக்கிறது : ஆய்வு சொல்லும் பளீச் ரிப்போர்ட்

நீங்கள்தான் உங்கள் குழந்தைகளுக்கு முன்னோடி. சோம்பேறியான பெற்றோராக இருக்கும்பட்சத்தில் அந்த குழந்தைக்கும் உடல் உழைப்பு இருக்காது.

news18
Updated: May 21, 2019, 11:26 PM IST
இந்த காரணங்களால்தான் உங்கள் குழந்தையின் உடல் பருமன் அதிகரிக்கிறது : ஆய்வு சொல்லும் பளீச் ரிப்போர்ட்
நீங்கள்தான் உங்கள் குழந்தைகளுக்கு முன்னோடி. சோம்பேறியான பெற்றோராக இருக்கும்பட்சத்தில் அந்த குழந்தைக்கும் உடல் உழைப்பு இருக்காது.
news18
Updated: May 21, 2019, 11:26 PM IST
பிஎம்சி பப்ளிக் ஹெல்த் வெளியிட்டுள்ள ஆய்வில் சைக்கிள் அல்லது நடைப்பயணமாகப் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களைக் காட்டிலும் கார் மற்றும் பள்ளிப் பேருந்தில் செல்லும் சிறுவர்கள்தான் அதிக உடல் எடைப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர் என்று கூறியுள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் உடல் உழைப்பு என்பது எந்த அளவுக் குறைந்துள்ளது என்றும் கண்டறிந்துள்ளது. இதில் மொத்தம் 2000 சிறுவர்களை ஆய்வில் உட்படுத்தியுள்ளது.

மேலும் இந்த உடல் பருமன் காரணத்தால் ஆஸ்துமா, மனதளவில் பாதிப்படைதல் , தூக்கமின்மைத் தொந்தரவு போன்ற பிரச்னைகள் வருவதாகவும் குறிப்பிடுகிறது. குறிப்பாகத் தான் குண்டாக இருக்கிறேன் என தன்னைத் தானே தாழ்வாகக் கருதிக் கொண்டு, நம்பிக்கையற்ற சிறுவர்களாகத் தோன்றுகின்றனர் என்கிறது அந்த ஆய்வு. மேலும் எந்த மாதிரியான காரணங்களால் அவர்கள் உடல் பருமன் அடைகின்றனர் என்கிற தொகுப்பையும் பட்டியலிடுகிறது.பெற்றோர்கள் காரணம் : நீங்கள்தான் உங்கள் குழந்தைகளுக்கு முன்னோடி. சோம்பேறியான பெற்றோராக இருக்கும்பட்சத்தில் அந்த குழந்தைக்கும் உடல் உழைப்பு இருக்காது. ஒரே இடத்தில் சோர்ந்து அமர்ந்திருக்கும். ஓடி ஆடி விளையாடும் சிறுவர்கள்தான் ஆரோக்கியமானவர்கள்.

உணவுப் பழக்கம் : நிச்சயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நல்ல விஷயங்களை விரைவில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படித்தான் சிறுவர்கள் உணவு விஷயத்தில் ஆரோக்கியமான உணவுகளை விட ஜங் ஃபுட்ஸ், ஸ்நாக்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் போன்றவற்றைத்தான் விரும்புவார்கள். இதனால் ஆரோக்கியமான உணவைத் தவிர்க்கின்றனர். இதன் விளைவு உடல் பருமன்.

இனிப்பு வகைகளைத் தவிர்க்கவும் : சிறுவர்களுக்கு இனிப்பு என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் அதுதான் அவர்களுக்கு எதிரியும் கூட. எனவே முக்கிய நிகழ்ச்சிகளின் போது மட்டும் இனிப்பு வகைகள் உண்ணப் பழக்கப்படுத்துங்கள். தினமும் உண்டால் உடல் பருமன் தான் அதிகரிக்கும்.
Loading...
சோடா மற்றும் ஜூஸ் வகைகள் : கியாஸ் நிறைந்த ஜுஸ் வகைகளையும் சிறுவர்கள் அதிகமாகக் குடிப்பார்கள். அதிலும் நாம் தினசரி பயன்பாட்டை மீறிய சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. அதிகமான இனிப்பு சுவை உடல் பருமனுக்கு வித்திடும்.

உடல் உழைப்பு : இன்றைய சிறுவர்களை வெளியிலேயே விளையாட விடாமல் வீட்டிலேயே பூட்டி வைக்கின்றனர். இனி அந்த தவறை செய்யாமல் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாட விடுங்கள். ஒரே இடத்தில் அமர்ந்து செல்ஃபோன், கேம் , கம்ப்யூட்டர், டிவி பார்ப்பது குழந்தையின் உடலுக்கு ஆரோக்கியம் அல்ல. உடல் எடையும் அதிகரிக்கும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...