ஒரு சிலருக்கு அடிக்கடி மூச்சுப் பிடிப்பு அல்லது மூச்சுவிடுவதில் கடும் சிரமம் ஏற்படும். எடை அதிகமுள்ள பொருளை தூக்குவது, படி ஏறி இறங்கும்போது, குளர்ச்சியான சீதோஷண நிலை இருக்கும்போது இந்த மாதிரியான சுவாசப் பிரச்சனையை எதிர்கொள்வார்கள். இது சாதாரணமாகவும் இருக்கலாம் அல்லது உடனடியாக கவனிக்க வேண்டிய பிரச்சனையாகவும் இருக்கலாம். தொடர் சுவாசப் பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். அரிதாக இதுபோன்ற பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அதற்கு முதலில் எளிதாக தீர்வு காண முடியும் என மருத்துவர் ராஜன் கூறுகிறார்.
இஞ்சி டீ:
இயற்கையாகவே இஞ்சியின் மருத்துவக் குணங்களை பலரும் அறிந்த ஒன்றுதான். உடலில் இருக்கும் சாதாரண தொற்றுகளை குணமாக்கக்கூடிய ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. ஒருவேளை சுவாசப் பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால் உடனடியாக இஞ்சியில் டீ வைத்துக் குடிக்கலாம். சுவாசப் பாதை அல்லது நுரையீரல் பகுதிகளில் இருக்கும் சாதாரண தொற்றுகள் அல்லது அழற்சிகளை சரிசெய்துவிடும். மன அழுத்தமாக இருக்கும்போது இஞ்சி டீயை குடிக்கலாம்.
பிளாக் காஃபி:
மூச்சுவிடுவதற்கு சிரமமாக இருப்பவர்கள் பிளாக் காஃபியை குடிக்கலாம். தசை பகுதிகளில் இருக்கும் இறுக்கமான தன்மையை இலகுவாகும். சுவாசப் பாதையில் இருக்கும் கடினத்தன்மை சூடான பிளாக் காஃபி செல்லும்போது உங்களை ரிலாக்ஷாக உணர வைக்கும். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும் பிளாக் காஃபியைக் பருகலாம். இவை சுவாசப் பற்றாக்குறையை போக்கி, இயல்பாக மூச்சுவிடுவதற்கான புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
இதையும் படிங்க | ஆண்களையும் பாதிக்கும் மார்பகப் புற்றுநோய்- தெரிந்துகொள்ள வேண்டியவை!
சாய்ந்து நிற்பது:
உங்களுக்கு எப்போதாவது மூச்சுவிடுவதில் சிரமத்தை எதிர்கொண்டால் அருகில் உள்ள சுவற்றின் மீது சாய்ந்து கொண்டு நிற்கலாம். இடுப்பை சுவற்றில் சாய்த்து, கால்கள் இரண்டையும் அகலமாக வைத்துக்கொள்ளுங்கள். கைகளை இரண்டையும் ரிலாக்ஷாக்கிக் கொள்வதுடன் பின்பகுதியை சுவற்றில் சாயாமல், முன்னோக்கி இருக்குமாறு வைத்துக்கொள்ளுங்கள். சாதாரணமான ஒன்றாக தெரியலாம். ஆனால் உங்களின் சுவாசப் பிரச்சனைக்கு எளிதான தீர்வுகளை தரக்கூடியதில் இதுவும் ஒன்று.
'லிப்' சுவாசப் பயிற்சி:
காற்றோட்டமான பகுதியில் உள்ள தரையில் நேராக அமர்ந்து கொள்ளுங்கள். கால்களை இரண்டு பக்க தொடைகள் மீதும் மாற்றி வைத்துக்கொண்டு, காற்றை ஆழமாக உள்ளிழுத்து, வாய் பகுதியை குவித்து வைத்துக்கொள்ளுங்கள். சில நொடிகளுக்குப் பின்னர் வாய் வழியாக காற்றை வெளியே விட்டு மீண்டும் அதே பயிற்சியை நான்கு முதல் ஐந்து முறை திரும்ப செய்து பாருங்கள். உங்களின் சுவாசப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன?
முன்னோக்கி அமர்தல்:
நாற்காலி ஒன்றில் முன்னோக்கியவாறு அமர்ந்து கொள்ளுங்கள். இறுக்கமாக இருக்காமல், ரிலாக்ஷாக உடல் மற்றும் மனது இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். எந்த சிந்தனையும் இல்லாமல், மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். கால்கள் நேராக இருக்க வேண்டும். முழங்கை பகுதியை உங்களின் கால் முழங்கால் மீது வைத்துக்கொள்ளுங்கள். உள்ளங்கைகளால் தாடையைப் பற்றி ரிலாக்ஷாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.