Home /News /lifestyle /

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை... சளி, இருமலை விரட்ட உதவும் 7 ஆயுர்வேத குறிப்புகள்...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை... சளி, இருமலை விரட்ட உதவும் 7 ஆயுர்வேத குறிப்புகள்...

இதை கோவிட்டுக்கு பிந்தைய நிலை (post COVID condition) என்று உலக சுகாதார மையமும், லாங் கோவிட் கண்டிஷன் (long COVID condition) என சுகாதார நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர். அறிகுறிகள் அதிக நாட்கள் நீடிக்கும் போது அதீத சோர்வு, சுவை அல்லது வாசனை இழப்பு, பிரெயின் ஃபாக் உள்ளிட்ட சிக்கல்கள் பாதிப்பட்டுள்ள நபருக்கு விரக்தி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.

இதை கோவிட்டுக்கு பிந்தைய நிலை (post COVID condition) என்று உலக சுகாதார மையமும், லாங் கோவிட் கண்டிஷன் (long COVID condition) என சுகாதார நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர். அறிகுறிகள் அதிக நாட்கள் நீடிக்கும் போது அதீத சோர்வு, சுவை அல்லது வாசனை இழப்பு, பிரெயின் ஃபாக் உள்ளிட்ட சிக்கல்கள் பாதிப்பட்டுள்ள நபருக்கு விரக்தி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.

Ayurveda Tips for Cold | நமது சமையலறையிலேயே பல நோய் எதிர்ப்பு சக்திக்கான பூஸ்டர்களை வைத்துள்ளோம். அவை நம்மை நோயில் இருந்து காக்க உதவும். உதாரணமாக மஞ்சள் பால் அல்லது மிளகு கலந்த பால் இருமல் மற்றும் சளி பிரச்சனைகளை தீர்க்க உதவும்.

மழைக்காலம் வந்துவிட்டது, இந்த காலத்தில் எப்போதும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல் நலப்பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும். மழைக்காலத்தில் வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, போதுமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். சரியான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வைத்திருப்பதும் முக்கியம்.

அதற்காக கவலை வேண்டாம், நமது சமையலறையிலேயே பல நோய் எதிர்ப்பு சக்திக்கான பூஸ்டர்களை வைத்துள்ளோம். அவை நம்மை நோயில் இருந்து காக்க உதவும். உதாரணமாக மஞ்சள் பால் அல்லது மிளகு கலந்த பால் இருமல் மற்றும் சளி பிரச்சனைகளை தீர்க்க உதவும். துளசி அல்லது இஞ்சி டீ குடிப்பது, மஞ்சள் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளிப்பது, நீராவி பிடிப்பது ஆகியவை மழைக்கால தொற்று நோய்களில் இருந்து நம்மை காக்க உதவும்.

மழைக்கால நோய்களை தடுக்க பயனுள்ள ஆயுர்வேத வீட்டு வைத்தியங்கள் சிலவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.

இஞ்சி மற்றும் தேன்:

1 டீஸ்பூன் உலர்ந்த இஞ்சி தூளை, ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு நாளைக்கு மூன்று முறை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் எடுத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கான அளவு: 1/4 ஸ்பூன் இஞ்சி தூள் மற்றும் தேன்.



மஞ்சள், மிளகு மற்றும் தேன்:

1 டீஸ்பூன் மஞ்சளுடன் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு, அரை மணி நேரத்திற்கு பிறகு எடுத்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கான அளவு: இதே அளவில் பாதி

எது சொன்னாலும் கோபப்படும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி..? உங்களுக்கான டிப்ஸ்

துளசி டீ, வெந்தய டீ, இஞ்சி-புதினா டீ, லைகோரைஸ் டீ போன்ற பல்வேறு வகையான தொண்டைக்கு இதமான டீ-களை குடிக்கலாம்

மஞ்சள்-உப்பு நீரில் ஒரு நாளைக்கு 2-3 முறை வாய் கொப்பளிக்கவும்.

அதிமதுரம் மற்றும் தேன்: 1 டீஸ்பூன்அதிமதுரத்தை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். உணவுக்கு 40 நிமிடங்களுக்கு பிறகு ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிமதுரம் பரிந்துரைக்கப்படுவதில்லை.

குழந்தைகளுக்கான அளவு: அரை தேக்கரண்டி அதிமதுரம் மற்றும் தேன்.



புதினா, ஓமம், வெந்தயம் மற்றும் மஞ்சள் சேர்த்து வேகவைத்த தண்ணீரைக் கொண்டு நீராவி பிடிக்கலாம்.

நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம்:

கொழுப்பு நிறைந்த உணவுகள், வறுத்த உணவுகளை உட்கொள்வதை குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது நல்லது. பாஸ்த்ரிகா, அனுலோமா விலோமா மற்றும் பிரம்ரி பிராணயாமா போன்ற யோகாசனங்களை தினமும் இரண்டு முறை, காலை மற்றும் இரவு பயிற்சி செய்வதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

இளம் வயதிலேயே டிமென்ஷியா... அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என எச்சரிக்கும் மருத்துவர்கள்

சளி மற்றும் இருமலுக்கு திறம்பட செயல்படும் ஆயுர்வேத சூத்திரங்கள்:

- தேனுடன் சிட்டோப்ளாடி சூரணம்

- தேனுடன் திரிகடுக சூரணம்

- தேனுடன் தாலிசாடி சூரணம்

- லக்ஷ்மிவிலாஸ் ராஸ் வெதுவெதுப்பான நீருடன்

- வெதுவெதுப்பான நீருடன் திரிபுவன்கீர்த்தி ராஸ்

- வெதுவெதுப்பான நீருடன் லவங்கடி வாட்டி

- வெதுவெதுப்பான நீருடன் காதிராடி வாட்டி

ஆயுர்வேத நிபுணர்கள், இந்த சூத்திரங்களை எப்போதும் ஆயுர்வேத மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே எடுக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
Published by:Selvi M
First published:

Tags: Ayurvedic medicine, Cold, Health

அடுத்த செய்தி