முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்ன..? 122 வயது மூதாட்டி தினமும் உட்கொள்ளும் 3 உணவுகள் இதோ!

நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்ன..? 122 வயது மூதாட்டி தினமும் உட்கொள்ளும் 3 உணவுகள் இதோ!

Healthy Food

Healthy Food

Healthy Lifestyle | 122 வயதான மூதாட்டியின் நீண்ட ஆயுளுக்கு காரணமாக விளங்கிய 3 உணவு பொருட்கள் பற்றிய ரகசியத்தை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

  • Last Updated :

மரபணுக்களின் படி மனிதர்களின் வாழ்நாள் காலம் வெறும் 38 ஆண்டுகள் மட்டுமே என கூறப்படுகிறது. ஆனால் தற்போது நவீன மருத்துவத்தின் அபார வளர்ச்சியும், புதிய கண்டுபிடிப்புகளும் மனிதன் ஆயுட்காலத்தை 80 ஆண்டுகளாக நீட்டித்துள்ளதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. என்ன தான் சுற்றுச்சூழல் மாறுபாடு, மாசு, ஆரோக்கியமற்ற உணவு முறை என இன்றைய தலைமுறை சீரழிந்து கிடைந்தாலும், 2022ம் ஆண்டிலும் 100 வயதைக் கடந்து வாழக்கூடிய முதியவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

அப்படி 100 ஆண்டுகளைக் கடந்து வாழும் முதியவர்களைக் கொண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. நீண்ட ஆயுளைப் பெற மக்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஈடன்ஸ் கேட் நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.

இந்நிறுவனம் 100 வயதுக்கு மேல் வாழ்ந்த ஆறு பேரை ஆய்வு செய்துள்ளது. அதில் உலகிலேயே வயதான நபரான மூதாட்டி ஜீன் லூயிஸ் கால்மென்ட் இடம் பிடித்துள்ளார். இவரது வயது 122 ஆகும். நிபுணர்கள் முதியவர் 122 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ காரணம் தினமும் அவர் எடுத்துக்கொள்ளும் 3 உணவுகள் தான் என்பதை கண்டறிந்துள்ளனர். போர்ட் ஒயின், ஆலிவ் ஆயில் மற்றும் சாக்லேட் ஆகிய மூன்றும் தான் தனது நீண்ட ஆயுளுக்கு காரணம் என ஜீன் லூயிஸ் கால்மென்ட் ஆராய்ச்சியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளின் படி, நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட எடுத்துக்கொள்ளும் வயதைப் பொறுத்து, அதிகபட்சமாக ஆயுட்காலம் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

நார்வேயில் உள்ள பெர்கன் பல்கலைக்கழகம் "ஆயுட்காலம் மீதான உணவுத் தேர்வுகளின் தாக்கத்தை மதிப்பிடுதல் "ஒரு மாடலிங் ஆய்வு" என்ற தலைப்பில் பிப்ரவரி 8, 2022 அன்று நடத்திய ஆய்வு முடிவுகளை, ப்ளோஸ் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய பொது சுகாதாரம் மற்றும் முதன்மை பராமரிப்புத் துறையின் நான்கு ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Also Read : உணவு பழக்கமும்… இதய சிகிச்சையும்… கட்டுக்கதைகளை உடைக்கும் உண்மைகள்!

ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதால், நடுத்தர வயதுடையவர்களின் ஆயுட்காலம் ஆறு முதல் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என்றும், இளம் வயதினரின் ஆயுட்காலம் சுமார் பத்து ஆண்டுகள் வரை அதிகரிக்க கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Also Read : இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கான எச்சரிக்கை… ஓர் அலர்ட் பதிவு

ஆய்வின்படி, அதிக பருப்பு வகைகள் (பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு), முழு தானியங்கள் (ஓட்ஸ், பார்லி மற்றும் பழுப்பு அரிசி) மற்றும் கொட்டைகள் மற்றும் குறைவான சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவை ஆரோக்கியமான உணவுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

First published:

Tags: Healthy Food, Healthy Lifestyle