முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாதவிடாய் காலத்தில் இந்த 5 பிரச்சனைகளை அலட்சியம் செய்யாதீர்கள்..!

மாதவிடாய் காலத்தில் இந்த 5 பிரச்சனைகளை அலட்சியம் செய்யாதீர்கள்..!

மாதவிடாய்

மாதவிடாய்

மாதவிடாய் சரியாக ஏற்படவில்லை என்பதற்கு பல விதமான காரணங்கள் இருக்கின்றன. உடலில் ரத்த அணுக்கள் குறைபாடு, ஹீமோகுளோபின் குறைபாடு, பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், உடல் எடை அதிகரிப்பு, ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்று பல காரணங்கள் உங்களுக்கு மாதவிடாய் சுழற்சியை தாமதப்படுத்தலாம்.

மேலும் படிக்கவும் ...
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாதவிடாயைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு வகையான அறிகுறிகள் தோன்றும், எத்தனை நாட்கள் உதிரப்போக்கு ஏற்படுகிறது, மாதவிடாய் சுழற்சி நாட்கள் ஆகியவை வேறுபடும்.

மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு பெண் பூப்பெய்திய காலத்தில் இருந்தே மாதா மாதம் நடக்கும். எனவே இதில் ஏதேனும் வித்தியாசமாக தென்பட்டால், நீங்கள் அதை இயல்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உதாரணமாக, அதிகப்படியாக உதிரப்போக்கு ஏற்படுவது என்பது வெகு சிலருக்கு மட்டுமே காணப்படும். வேறு சிலருக்கு திடீரென்று அதிகமான பிளீடிங் என்பது வேறு ஏதேனும் நோய்க்கான அல்லது பிரச்சினைக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

எனவே மாதவிடாய் காலத்தில் அப்நார்மல் என்று அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கிறதா என்பது முக்கியம். அதே நேரத்தில், பின்வருபவை ஏதேனும் உங்கள் மாதவிடாய் காலத்தில் நடந்தால், அலட்சியம் செய்யாதீர்கள்.

அதிகப்படியான இரத்தப்போக்கு

ஏற்கனவே கூறியுள்ளது போல் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் காலத்தில் எந்த அளவுக்கு பிளீடிங் ஆகும் என்பது வேறுபடும். ஒரு சிலருக்கு அதிகமாகவும், ஒரு சிலருக்கு குறைவான அளவுதான் ரத்தப்போக்கு இருக்கும். ஆனால், நீங்கள் 1 மணி நேரத்துக்கு ஒரு முறை பேடு அல்லது டாம்பான் மாற்றும் அளவுக்கு, அதிகமாக பிளீடிங் காணப்பட்டால், அது மென்னோரேகியா என்ற குறைப்பாட்டை குறிக்கிறது. ஃபைப்ராய்டு கட்டிகள், எண்டோமெட்ரியோசிஸ், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், கருத்தடை சாதனம், அல்லது கர்ப்பம் சார்ந்த பிரச்சனை ஆகியவற்றால் அதிகமான இரத்தப்போக்கு ஏற்படலாம். உடனடியாக நீங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

Also Read :  உங்கள் பார்ட்னருடன் சண்டையா.? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க.. ஈஸியா சமாதானம் ஆயிடுவாங்க.!

தாங்க முடியாத அளவுக்கு வயிற்று வலி (cramps)

பொதுவாகவே மாதவிடாய் காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு வயிற்று வலி, முதுகு வலி ஆகியவை ஏற்படும். சாதாரணமான வயிற்று வலி என்பதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது வயிற்றைப் பிசைவது அல்லது வயிற்றை இழுத்துப் பிடிப்பது போல கிராம்ப்ஸ் என்ற வித்தியாசமான வலியும் தோன்றும். இவை எல்லாமே மாதவிடாய் காலத்தில் சாதாரணமாக நிகழ்வதுதான். ஆனால் இதுவே தாங்க முடியாத அளவுக்கு இருந்தால், அது டிஸ்மென்னோரியா என்ற ஒரு பிரச்சனையைக் குறிக்கிறது.

கிராம்ப்ஸ் என்பது கர்ப்பப்பை சுருங்கி விரியும் பொழுது ஏற்படக்கூடிய வழியாகும். இது மாதவிடாய் தொடங்குவதற்கு 2 – 4 நாட்களுக்கு முன்பு, மாதவிடாய் வருவதற்கான ஒரு அறிகுறியாகவும் பல பெண்களுக்குத் தோன்றும். பாலியல் தொற்று நோய், கருத்தடை சாதனம், பெல்விக் பகுதிகளில் அழற்சி, அடினோமயோசிஸ் ஆகியவை இதற்கு காரணமாக இருக்கலாம்.

மாதவிடாய் சுழற்சி சீராக இல்லை

மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லை அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்களுக்கு பீரியட்ஸ் வரவில்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மாதவிடாய் சரியாக ஏற்படவில்லை என்பதற்கு பல விதமான காரணங்கள் இருக்கின்றன. உடலில் ரத்த அணுக்கள் குறைபாடு, ஹீமோகுளோபின் குறைபாடு, பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், உடல் எடை அதிகரிப்பு, ஈட்டிங் டிஸ்ஆர்டர் என்று பல காரணங்கள் உங்களுக்கு மாதவிடாய் சுழற்சியை தாமதப்படுத்தலாம். இதைத் தவிர்த்து, தீவிரமான உடற்பயிற்சி செய்வது, கருத்தடை மாத்திரைகள் அல்லது கருத்தடை முறைகளைப் பயன்படுத்துவது, அதிகமான மன அழுத்தம் ஆகிய வாழ்க்கைமுறை சார்ந்த பிரச்சனைகள் கூட மாதவிடாயை தாமதப்படுத்தலாம்.

Also Read : சின்ன வயசுலையே முதுகு வலி, மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்..!

எனவே உங்களுக்கு மாதவிடாய் தாமதம் அல்லது மாதவிடாய் சுழற்சி சீராக இல்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.

மாதவிடாய் உதிரப்போக்கில் ரத்தம் உறைதல் (clotting)

மாதவிடாய் காலத்தில் பிளீடிங் என்பது திரவமாக இருந்தால் கூட, ஒரு சிலருக்கு கிளாட்ஸ் என்று கூறப்படும் ரத்தம் உறைந்து வெளியேறுவதும் இயல்பானதுதான். ஆனால் எந்த அளவுக்கு உறைந்த ரத்தம் வெளியேறுகிறது, எவ்வளவு பெரிதாக இருக்கிறது, அல்லது அடிக்கடி கிளாட்ஸ் வெளியேறுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி நடந்தால், நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணமாக ஃபைப்ராய்டு கட்டிகள், அடினோமயோசிஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகிய மூன்று குறைபாடுகள் கூறப்படுகின்றன.

நீண்ட நாட்களுக்கு உதிரப்போக்கு

சராசரியாக மாதவிடாய் காலத்தில் மூன்று முதல் அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு உதிரப்போக்கு ஏற்படும். ஆறு அல்லது ஏழு நாட்களுக்கு மேல் உதிரப்போக்கு காணப்பட்டால், அது நிச்சயமாக அப்நார்மல் அறிகுறிதான். கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உதிரப்போக்கு (பிளீடிங்) நீண்ட நாட்களுக்கு ஏற்படும். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாதமும் உதிரப்போக்கு ஏற்படும் நாட்கள் மாறினால், அதையும் நீங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மாதவிடாய் இல்லாத நாட்களில் அல்லது இடைப்பட்ட காலத்தில் பிளீடிங்

மாதவிடாய் ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம், சில நாட்கள் முன்கூட்டியே வரலாம். ஆனால், மாதவிடாய் சுழற்சிக்கு இடைப்பட்ட காலத்தில், உங்களுக்கு பிளீடிங் ஏற்பட்டால் அல்லது மாதவிடாய் முடிந்த சில நாட்களுக்கு பிறகு பிளீடிங் ஏற்பட்டால் அது நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். நீங்கள் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். கர்ப்பம், பெரி-மெனோபாஸ், pcod, பால்வினை நோய்கள், எக்டோபிக் கர்ப்பம், பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயம் மற்றும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை இதற்கான காரணங்களாக இருக்கலாம்.

First published:

Tags: Periods, Women Health