Home /News /lifestyle /

இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா..? நிபுணர்களின் கருத்து ஏன் அவசியம்..?

இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா..? நிபுணர்களின் கருத்து ஏன் அவசியம்..?

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

Tips For Gym After Heart Surgery: இதயம் 35% அல்லது அதற்கும் குறைவாக வேலை செய்யும் நபர்கள், தவறுதலாகக் கூட ஜிம் பக்கம் செல்லக்கூடாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இன்றைய காலகட்டத்தில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது நாகரீகமாகிவிட்டது. அனைத்து வயதினரும் ஜிம்மில் நேரத்தை செலவிடுவதைக் காண முடிகிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் உள்ளன. இருப்பினும் இந்த போக்கு சில கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்தாகவும் மாறலாம். ஜிம்மிற்குச் சென்று உடற்பயிற்சி செய்வது எப்படி ஆபத்தாக மாறும்..? என கேள்வி எழலாம்.

    ஆம்... குறிப்பாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடற்பயிற்சி சற்று ஆபத்தானதுதான். அதை நிபுணர்களின் மேற்பார்வையின்றி செய்வது இன்னும் ஆபத்தானது. எனவே அப்படி இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஜிம்மிற்குச் செல்வதற்கு முன் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆரோக்கியம் என நினைத்து செய்யும் இந்த விஷயம் உங்களுக்கே ஆபத்தாக மாறலாம்.

    நிபுணர் கருத்தைப் பெறுங்கள்

    இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் அல்லது இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அனுமதியின்றி ஜிம்மில் சேரக் கூடாது என்று புது தில்லி அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் டாக்டர் வனிதா அரோரா கூறுகிறார். ”இதயம் 35% அல்லது அதற்கும் குறைவாக வேலை செய்யும் நபர்கள், தவறுதலாகக் கூட ஜிம் பக்கம் செல்லக்கூடாது.



    ஏனெனில் அவர்களுக்கு உடற்பயிற்சியின் போது திடீர் மாரடைப்பு (SCA) உண்டாகலாம். இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படியும் நிபுணர்களின் மேற்பார்வையில் மெதுவாக உடற்பயிற்சிகளை செய்யலாம் . தீவிர உடற்பயிற்சி, டிரெட்மில்லில் ஓடுதல், பாடி பில்டிங் போன்ற இதயத்திற்கு வேலை கொடுக்கும் கடுமையான பயிற்சிகளை செய்யவே கூடாது. மாறாக தினமும் 40 நிமிடங்களில் 4 கிமீ வேகத்தில் நடப்பதே போதுமானது” என கூறுகிறார் மருத்துவர்.

    ஜிம்மிற்கு போகாமல் வீட்டிலிருந்தே தொப்பையை குறைக்க முடியுமா..? இந்த 5 ஒர்க்அவுட்டை செய்தால் சாத்தியம்..!

    ஜிம்மில் இந்த தவறுகளைத் தவிர்க்கவும்

    டாக்டர் வனிதா அரோராவின் கூற்றுப்படி, இதய மருத்துவரிடம் அனுமதி பெற்ற பிறகு நீங்கள் ஜிம்மில் சேருகிறீர்கள் என்றால், உங்கள் மருத்துவ வரலாறு பற்றி பயிற்சியாளரிடம் விவாதிக்க வேண்டும். பின் அதன் அடிப்படையில், நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.



    ஜிம்மின் போது சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது ஆபத்தானது. இதய நோயாளிகள் மட்டுமன்றி, ஆரோக்கியமானவர்களும் சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இது இதயத்தில் வடு உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    உங்களுக்கு நார் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருக்கா..? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்காம யூஸ் பண்ணாதீங்க...

    இது மட்டுமின்றி, 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ஜிம்மிற்கு செல்லும் முன், இதய நோய் நிபுணரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது உடற்பயிற்சியின் போது மாரடைப்பு மற்றும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும். இப்போதெல்லாம், கரோனரி தமனி நோய் இளமை பருவத்தில் கூட ஏற்படுகிறது. எனவே இதயம் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் எந்த வயதிலும் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Heart attack, Heart disease, Heart health

    அடுத்த செய்தி