இன்றைய நிலையில் இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இதய சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகின்றன. அதிலும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மாரடைப்பு ஏற்படுவதும், இதய செயலிழப்பு ஏற்படுவது போன்ற பல பிரச்சனைகள் உண்டாகின்றன. உண்மையில் இதய செயலிழப்பு பற்றி சரியான புரிதல் இங்கு பலருக்கு கிடையாது. இதய செயலிழப்பு பற்றி முழுவதுமாக இந்த பதிவில் பார்ப்போம்.
இதய செயலிழப்பு என்றால் என்ன?
நம்முடைய இதயமானது தசைகளால் உருவாக்கப்பட்ட ஒரு பம்ப் போன்று செயல்படும் தன்மை உடையது. இந்த பம்ப் மூலம் தான் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தமானது கடத்தப்படுகிறது. இதயம் சரிவர வேலை செய்யாமல் நின்று விடும்போது உடலில் உள்ள பாகங்களுக்கு ரத்தம் கடத்தப்படுவது தடை செய்யப்படுகிறது. இதை தான் நாம் இதய செயலிழப்பு என்று அழைக்கிறோம்
இதன் அறிகுறிகள் என்ன?
நடக்கும்போதோ அல்லது வேறு ஏதேனும் உடல் இயக்க வேலைகளை செய்யும் போதும் பலமாக மூச்சு வாங்குவது, கால்களில் வீக்கம் அல்லது அடி வயிற்றில் வீக்கம், மயக்கம், உடல் சோர்வு போன்றவை இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்.
யாருக்கெல்லாம் இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது?
ஏற்கனவே இதய சம்பந்தப்பட்ட கோளாறுகள் உள்ளவர்களுக்கும், ஆஞ்சியோ பிளாஸ்டிக் அல்லது கொரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்டிங் செய்தவர்களுக்கும் இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இதை தவிர அதிக ரத்த அழுத்தம் மற்றும் நீண்ட நாட்களாக இருக்கும் சர்க்கரை வியாதி ஆகியவையும் இதய செயலிழப்பு ஏற்பட காரணமாகும். தற்சமயம் மையோகார்டிடிஸ் எனப்படும் தொற்றினால் கூட இளம் வயதினரிடையே இதய செயலிழப்பு ஏற்படுகிறது.
என்ன விதமான சோதனைகள் மூலம் இதய செயல் இழப்பை கண்டறியலாம்?
பொதுவாகவே மருத்துவர்கள் இசிஜி, எக்கோகார்டியோகிராம் மற்றும் ரத்த ரத்தப் பரிசோதனைகள் மூலம் இதய செயலிழப்பை முன்கூட்டியே கண்டறிய முயற்சி செய்வார்கள். இதில் எக்கோகார்டியோகிராம் என்பது அல்ட்ரா சவுண்டை பயன்படுத்தி சோதனை செய்யும் ஒரு முறையாகும். இதன் மூலம் இதயமானது எந்த அளவிற்கு துடிக்கிறது எனவும் எவ்வளவு இரத்தத்தை ஒரு அதனால் பம்ப் செய்ய முடியும் என்பதை பற்றியும் மருத்துவர் கண்டறிவார். இது தவிர ரத்த பரிசோதனைகள் மூலமும் இதய செயல் இழப்பை கண்டறிய முடியும். இதய செயலிழப்பை மருத்துவர் கண்டறிந்தால் உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்து ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய முயற்சி செய்வார்.
இதற்கு என்ன சிகிச்சை?
பொதுவாகவே மருத்துவர்கள் அதிக அளவு நீரை வெளியேற்றும் மருத்துவ சிகிச்சையில் நோயாளியை உட்படுத்துவார்கள். மேலும் இதயத்தின் இயக்கத்தை அதிகரிக்க கூடிய வேறு சில சிகிச்சை முறைகளான ஏசிஇ இன்ஹிபிட்டர்ஸ், ஏ2டி அன்டகோனிஸ்ட்ஸ் மற்றும் பீட்டாப்ளாக்கர்ஸ் போன்ற சிகிச்சை முறைகளிலும் நோயாளிகளை உட்படுத்துவார்கள்.
வேறு என்ன விதமான சிகிச்சை முறைகள் உள்ளன?
இதய செயலிழப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிந்த பின்னரே மருத்துவர் எந்த விதமான சிகிச்சை மேற்கொள்வது என்பதை முடிவு செய்வார். ஆஞ்சியோ பிளாஸ்டி செய்வதும் அல்லது பைபாஸ் சரி சரி செய்வதும் இதில் அடங்கும். தவிர்க்க முடியாத சில காரணங்களில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு நோயாளி தள்ளப்படுவார்.
Also Read : 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 4 வழிகள்!
இதிலிருந்து தற்காத்துக் கொள்ள நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heart attack, Heart Failure, Heart health