முகப்பு /செய்தி /lifestyle / இந்தியாவில் அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்... மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்... மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

மாரடைப்பு

மாரடைப்பு

இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் 28.1 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகம் முழுவதும் முறையற்ற உணவு பழக்க வழக்கம், சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், தொற்று நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இளவயது மரணங்கள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக மாரடைப்பால் மிக இளவயது நபர்கள் கூட திடீரென உயிரை விட்டு விடுகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

அலுவலகத்தில் வேலையில் இருக்கும் போது, நடந்து கொண்டிருக்கும் போது, நடனமாடிக் கொண்டிருக்கும் போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இளவயது நபர்கள் கூட உயிரிழந்து விடுகிறார்கள். இந்நிலையில் இந்தியாவிலும் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாரடைப்புகளின் காரணம் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய தகவலை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் மொத்தமாக ஏற்படும் உயிரிழப்புகளில் 28.1 சதவீதம் பேரின் மரணத்துக்கு மாரடைப்பே காரணம் என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது

அதன்படி, கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி மது, சிகரெட் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கே அதிகளவில் மாரடைப்பு ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தமாக ஏற்படும் உயிரிழப்புகளில் 28.1 சதவீதம் பேரின் மரணத்துக்கு மாரடைப்பே காரணம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. கடந்த 1990ஆம் ஆண்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 15.2 சதவீதமாக இருந்து இருப்பதாக ஐசிஎம்ஆர் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 1990 ஆம் ஆண்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 15.2 சதவீதமாக இருந்து இருப்பதாக ஐசிஎம்ஆர் அறிக்கை தெரிவிக்கிறது.

அதேபோல் எதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது என ஐசிஎம்ஆர் வழங்கிய தகவலையும் மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தாக்கல் செய்து இருக்கிறது. அதன்படி காய்கறி மற்றும் பழங்களை தேவையான அளவு உணவில் எடுத்துக்கொள்ளாத 98.4 சதவீதம் பேருக்கு இதய நோய்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கடந்த 2017 - 2018 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, தினமும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களில் 32 சதவீதம் பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய மது, புகை உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது

அதேபோல், மதுப் பழக்கும் உள்ளவர்களில் 15.9 சதவீதம் பேருக்கு மாரடைப்பு வந்துள்ளது. இவற்றைவிட அதிகமாக மாரடைப்பு ஏற்படும் 41.3 சதவீதம் பேர் போதிய உடல் உழைப்பு இல்லாதவர்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நல்ல, ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய மது, புகை உள்ளிட்டவற்றை தவிர்ப்பது, தேவையான அளவு உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் மாரடைப்பு என்னும் பேராபத்து நம்மை நெருங்காமல் ஓரளவு பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

First published:

Tags: Health, Heart attack, ICMR