Home /News /lifestyle /

ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன..? மருத்துவரின் விளக்கம்

ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன..? மருத்துவரின் விளக்கம்

இதய பாதிப்பு

இதய பாதிப்பு

நடுத்தர வயதுடைய நபர்களுக்கு திடீர் மரணம் ஏற்படும் செய்திகள் தற்போது அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இது போன்ற நிகழ்வுகள் தலைதூக்கி உள்ளன. திடீர் உயிரிழப்புகளுக்கு காரணம் எப்போதும் ஹார்ட் அட்டாக் அல்ல என்று இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நடுத்தர வயது கொண்ட நபர்கள் பலர் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. உதாரணத்திற்கு, உத்திரபிரதேச மாநிலம், பரேலி பகுதியைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவர், அண்மையில் பிறந்தநாள் பார்ட்டியின் போது நடனம் ஆடிக் கொண்டிருக்கையில் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதேபோல ஜம்மு பகுதியைச் சேர்ந்த யோகேஷ் குப்தா என்ற நபர், மேடையில் நின்று கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார்.

பரேலி, ஜம்மு மட்டுமல்ல நாடெங்கிலும் பல பகுதிகளில் இதேபோல நடுத்தர வயதுடைய நபர்களுக்கு திடீர் மரணம் ஏற்படும் செய்திகள் தற்போது அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இது போன்ற நிகழ்வுகள் தலைதூக்கி உள்ளன. திடீர் உயிரிழப்புகளுக்கு காரணம் எப்போதும் ஹார்ட் அட்டாக் அல்ல என்று இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியன் அரெஸ்ட் இடையே உள்ள வித்தியாசம் :

இதயத்திற்கான ரத்த ஓட்டம் திடீரென்று தடைபடுவதைத் தான் ஹார்ட் அட்டாக் என குறிப்பிடுகிறோம். ஆனால் கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயம் முறையாக செயல்படாமல் எதிர்பாராத விதமாக செயலிழந்து போவதை குறிப்பிடுகிறோம். சுருக்கமாக சொன்னால், ஹார்ட் அட்டாக் என்பது ரத்த ஓட்டம் சம்பந்தமான பிரச்சனை மற்றும் கார்டியாக் அரெஸ்ட் என்பது எலக்ட்ரிகல் பிரச்சனை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட காரணங்கள் என்ன?

இதயநலன் பாதிக்கப்பட்டு, இதயத்தின் துடிப்புகளில் மாற்றம் ஏற்படுவதால் திடீரென்று கார்டியாக் அரஸ்ட் ஏற்படலாம். இதயத்தில் அடர்த்தியான தசை வளர்வது, இதயம் செயலிழந்து போவது போன்றவை இதனுடன் தொடர்புடைய பிரச்சனைகள் ஆகும்.

இதயத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமா..? உங்களுக்கான டயட் டிப்ஸ்..!

கார்டியாக் அரெஸ்ட் வந்தால் என்ன செய்ய வேண்டும் :

பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு சில நிமிடங்களுக்குள்ளாக சிகிச்சை அளித்தால் கார்டியாக் அரெஸ்ட் பிரச்சனையிலிருந்து அவர்களை காப்பாற்ற முடியும். குறிப்பாக மருத்துவ ரீதியான அவசரகால உதவிகள் கிடைக்கும் வரை சிபிஆர் சிகிச்சை முறையை செய்ய வேண்டும். சிபிஆர் சிகிச்சை செய்வதற்கு எந்த ஒரு மருத்துவ உபகரணமும் தேவையில்லை. நம் உள்ளங்கைகள் இரண்டையும் குவித்து வைத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட நபரின் நெஞ்சு பகுதியில் மிக வேகமாக அழுத்துவதன் மூலமாக அவர்களது உயிரை காப்பாற்றலாம்.



கொரோனாவிற்கு பிறகு இத்தகைய பாதிப்புகள் அதிகரிப்பது ஏன்?

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அடுத்தடுத்த பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நடமாடாமல் ஒரே இடத்தில் முடங்கி இருந்ததன் காரணமாக அவர்களது உடல் நலன் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் ஹார்ட் அட்டாக் அல்லது கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான காரணமாகும்.

PCOS பாதிப்பு உள்ள பெண்கள் கர்ப்பமாக முடியுமா..? நிபுணரின் பதில்...

இரண்டாவதாக, கார்டியாக் அரெஸ்ட் என்பது மிகப் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய் அல்ல. வெகு சிலருக்கு மட்டுமே இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இருப்பினும் மொபைல் ஃபோன் கேமரா அல்லது சிசிடிவி போன்றவற்றின் உதவியால் இதுபோன்ற நிகழ்வுகள் குறித்த வீடியோ உடனுக்குடன் வைரல் ஆகிவிடுவதால், ஏதோ மாபெரும் அளவில் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்ற பிம்பம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cardiac Arrest, Heart attack

அடுத்த செய்தி