சளிக்காய்ச்சல் மற்றும் ஹார்ட் அட்டாக் ஆகிய இரண்டு பிரச்சனைகளுக்கும் இடையே ஏறக்குறைய எந்தவித தொடர்பும் இல்லை. ஏனென்றால், சளிக்காய்ச்சல் என்பது வைரஸ் தொற்று மூலமாக பரவக் கூடிய ஒன்றாகும். இது நமது மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகிய இடங்களில் தொந்தரவுகளை உருவாக்கும்.
ஆனால், ஹார்ட் அட்டாக் என்பது இதய ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாகும். இதய தசைகளுக்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்காதபோது இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. எனினும், சில ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை, சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். பின்னர் உண்மை தெரிவதற்குள் அது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறது.
இந்தச் செய்தியில் சளிக்காய்ச்சல் மற்றும் ஹார்ட் அட்டாக் ஆகிய இரண்டுக்குமான அறிகுறிகள் எப்படி வேறுபடுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
குமட்டல்
சளி தொந்தரவு ஏற்படும்போது குமட்டல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணமான ஒன்றுதான். அதனுடன் காய்ச்சல், தலைவலி, தசை வலி, இருமல், கரகரப்பான தொண்டை, சோர்வு போன்றவை இருக்கலாம்.
அதேபோல, ஹார்ட் அட்டாக் பாதிப்பிற்கும் குமட்டல் ஒரு பொதுவான அறிகுறியாகும். நம் உடலில் கார்டியோ சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்போது லேக்டிக் ஆசிட், பையூரிக் ஆசிட் போன்றவை உற்பத்தி ஆகின்றன. அதன் காரணமாக குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும்.
தலைச்சுற்றல் அல்லது சோர்வு
தலைச்சுற்றல் அல்லது சோர்வு என்பது ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டிரோக் ஆகியவற்றின் அறிகுறிகள் ஆகும். அதேபோல, வைரஸ் பாதிப்பு கொண்ட சளி பிரச்சனைக்கும் இதே அறிகுறிகள் தென்படும். அதே சமயம், ஹார்ட் அட்டாக் என்றால் மூச்சுத்திணறல், சோர்வு அல்லது நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள் கூடுதலாக இருக்கும்.
வாயு தொல்லையால் பொதுவெளியில் சங்கடமாக உள்ளதா..? உடனே நிவாரணம் தரும் 5 வீட்டு வைத்தியங்கள்
குளிர்ச்சியான வியர்வை
உடலில் குளிர்ச்சியான வியர்வை ஏற்படுவதுதான் ஹார்ட் அட்டாக்கின் முதல் அறிகுறி ஆகும். குறிப்பாக மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, படபடப்பு போன்றவை இதனுடன் சேர்ந்து ஏற்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடவும். இதேபோல, சளி தொந்தரவின்போதும் குளிர்ச்சியான வியர்வை வரும். தசை வலி போன்றவை வந்து, வந்து போகும்.
மூச்சுத்திணறல்
சளி பிடித்துவிட்டாலே மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத்திணறல், சோர்வு போன்றவை ஏற்படும். ஆனால், பெரும்பாலானோருக்கு இந்த அறிகுறிகள் தென்படாது. ஹார்ட் அட்டாக் அறிகுறிகளும் இதேபோலத்தான் இருக்கும் என்றாலும், இதனுடன் மயக்க உணர்வு வரும்.
இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? உடனே மருத்துவரை அணுகுங்கள்...
உடல்சோர்வு
பொதுவாக நம் உடல் சோர்வு அடைய பல காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும் ஹார்ட் அட்டாக் வருபவர்களுக்கு கட்டாயம் உடல் சோர்வு ஏற்படும். இதயத்தில் உள்ள கூடுதலான மன அழுத்தம் காரணமாக ரத்த ஓட்டம் சிரமமாக இருக்கும். அதேபோல, திடீரென்று அதிக உடல்சோர்வு ஏற்படும் காய்ச்சலுக்கான அறிகுறி ஆகும்.
பரிசோதனை முக்கியம்
ஹார்ட் அட்டாக் பாதிப்பை தவிர்க்க வேண்டும் என்றால் புகைப்பிடித்தால் பழக்கத்தை கைவிட்டு, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். ரத்த அழுத்ம், கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுக்குள் இருக்க வேண்டும். அவ்வப்போது இதய நல மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heart attack