Home /News /lifestyle /

உங்கள் இதயத்தின் வயதை கண்டறிவது எப்படி..? ஆரோக்கியத்தையும் தெரிஞ்சுக்க இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க..!

உங்கள் இதயத்தின் வயதை கண்டறிவது எப்படி..? ஆரோக்கியத்தையும் தெரிஞ்சுக்க இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க..!

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

ஹார்ட் அட்டாக் அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை புரிந்துகொள்ள ஒரு வழியாக இருக்கிறது ஹார்ட் ஏஜ் (heart age). ஹார்ட் ஏஜ் கால்குலேட்டர் என்பது உங்கள் தற்போதைய வயதில் மிக ஆரோக்கியமாக இருக்கிறீர்களா

ஹார்ட் அட்டாக் அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை புரிந்துகொள்ள ஒரு வழியாக இருக்கிறது ஹார்ட் ஏஜ் (heart age). ஹார்ட் ஏஜ் கால்குலேட்டர் என்பது உங்கள் தற்போதைய வயதில் மிக ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை சரி பார்க்க மற்றும் இதயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவுகிறது.

உங்கள் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும், எப்படி உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதை மதிப்பிடுகிறது. வயது, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு, அத்துடன் உணவு, உடற்பயிற்சி மற்றும் புகைபிடித்தல் போன்ற இதய நோய்க்கான உங்கள் ஆபத்து காரணிகளின் அடிப்படையில் உங்கள் ஹார்ட் ஏஜ் கணக்கிடப்படுகிறது. உங்களது இதய வயது குறைவாக இருப்பது , இதய நோய் ஏற்படுவதற்கான குறைந்த அபாயத்தை குறிக்கிறது.

2 ஆண்களில் ஒருவர் அவர்களின் உண்மையான வயதை விட 5 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஹார்ட் ஏஜ் கொண்டிருக்கிறார்கள். 5 பெண்களில் 2 பேருக்கு அவர்களின் உண்மையான வயதை விட 5 அல்லது அதற்கு மேற்பட்ட வயது இதயம் உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்தியாவில் 40-69 வயதுக்குட்பட்ட மொத்த இறப்புகளில் 45% இறப்பு,இதய நோய்களால் ஏற்படுகிறது. ஏனென்றால் 53 வயதான ஒருவரின் இதயத்திற்கு 75 வயது ஆகி இருக்கலாம்..



ஹார்ட் ஏஜ்-ஐ எப்படி கண்டறிவது.?

பின்வரும் கேள்விகளில் நீங்கள் பெறும் பாயிண்ட்ஸ்களை கொண்டு உங்களின் இதய வயதை மதிப்பிடலாம்..

உங்கள் பாலினம் என்ன?

ஆண்

பெண்

உங்கள் வயது என்ன.?

30-34 வயது (பெண் என்றால் மைனஸ் 9; ஆணாக இருந்தால் மைனஸ் 1)

35-39 வயது (பெண் என்றால் கழித்தல் 4; ஆணாக இருந்தால் ஜீரோ)

40-44 வயது (பெண் என்றால் பூஜ்யம்; ஆணாக இருந்தால் பிளஸ் 1)

45–49 வயது (பெண் என்றால் இருந்தால் பிளஸ் 3; ஆணாக இருந்தால் பிளஸ் 2)

50-54 வயது (பெண் என்றால் இருந்தால் 6; ஆணாக இருந்தால் பிளஸ் 3)

55-59 வயது (பெண் என்றால் 7; ஆணாக இருந்தால் பிளஸ் 4)

60-64 வயது (பெண் என்றால் 8; ஆணாக இருந்தால் பிளஸ் 5)

65-69 வயது (பெண் என்றால் 8; ஆணாக இருந்தால் பிளஸ் 6)

70-74 வயது (பெண் என்றால் 8; ஆணாக இருந்தால் பிளஸ் 7)



உங்கள் LDL கொலஸ்ட்ரால் அளவு என்ன.?

<100 mg/dl (பெண் என்றால் மைனஸ் 2; ஆணாக இருந்தால் மைனஸ் 3) 100-129 mg/dl (இருபாலருக்கும் பூஜ்யம்) 130-159 mg/dl (இருபாலருக்கும் பூஜ்யம்) 160-189 mg/dl (பெண் என்றால் பிளஸ் 2; ஆணாக இருந்தால் பிளஸ் 1) >190 mg/dl (பெண் என்றால் பிளஸ் 2; ஆணாக இருந்தால் பிளஸ் 2)

உங்கள் HDL கொலஸ்ட்ரால் அளவு என்ன?

<35 mg/dl (பெண் என்றால் பிளஸ் 5; ஆணாக இருந்தால் பிளஸ் 2) 35-44 mg/dl (பெண் என்றால் பிளஸ் 2; ஆணாக இருந்தால் பிளஸ் 1) 45-49 mg/ dl (பெண் என்றால் பிளஸ் 1; ஆணாக இருந்தால் பூஜ்யம்) 50-59 mg/dl (இருபாலருக்கும் பூஜ்யம்) >60 mg/dl (பெண் என்றால் மைனஸ் 2; ஆணாக இருந்தால் 1)

நீங்கள் புகை பிடிப்பவரா?

ஆம் என்றால் (இருபாலருக்கும் பிளஸ் 2)

இல்லை என்றால் (இருபாலருக்கும் பூஜ்யம்)

எப்போதாவது நீங்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா?

ஆம் என்றால் (பெண்ணுக்கு பிளஸ் 4; ஆணுக்கு பிளஸ் 2)

இல்லை என்றால் (இருபலருக்கும் பூஜ்யம்)

எப்படி கையாள்வது? : ஆஸ்துமாவை கட்டுக்குள் வைக்க இன்ஹேலர்ஸ் சிறந்த தீர்வாகும். மேலும் தீவிரமான முறையில் நீண்ட காலமாக ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் குளிர் காலங்களில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால் குளிர் காலங்களில் நிமோனியா போன்ற மோசமான தொற்றுகள் அதிகம் உண்டாக வாய்ப்புள்ளது. இவை ஆஸ்துமா பாதிப்பை மேலும் அதிகமாக்கி விடும்.

உங்கள் இரத்த அழுத்த அளவு என்ன..?

<120/<80 (பெண் என்றால் மைனஸ் 3; ஆணாக இருந்தால் பூஜ்யம்) 120-129/80-84 (இருபாலருக்கும் பூஜ்யம்) 130-139/ 85-89 (பெண் என்றால் பூஜ்யம்; ஆணாக இருந்தால் பிளஸ் 1) 140-159/ 90-99 (இருபாலருக்கும் பிளஸ் 2) >160/>100 (இருபாலருக்கும் பிளஸ் 3)

மேற்கண்ட அத்தனை கேள்விகளுக்குமான உங்கள் பதிலுக்கு அருகே பிராக்கெட்டில் கொடுக்கப்பட்டிருந்த பாயிண்ட்ஸ்களை கணக்கிடுங்கள். இவை உங்களுக்கு இதய பிரச்சனைகளை உருவாகும் அபாயத்தை தீர்மானிக்கும்.

குளிர்காலம் மட்டுமல்ல... கோடைக்காலத்தில் இதயம் பாதிக்கலாம் : நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை..!

ஆண்கள்:

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: -3 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 1%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: -2 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 2%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: -1 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 2%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 0 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 3%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 1 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 4%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 2 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 4%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 3 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 6%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 4 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 7%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 5 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 9%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 6, அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 11%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 7, அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 14%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 8 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 18%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 9 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 22%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 10 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 27%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 11 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 33%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 12 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 40%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 13 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 47%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: >14 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: >56%


பெண்கள் :

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: -2 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 1%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: -1 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 2%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 0 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 2%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 1 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 2%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 2 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 3%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 3 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 3%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 4 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 4%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 5 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 5%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 6 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 6%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 7 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 7%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 8 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 8%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 9 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 9%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 10 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 11%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 11 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 13%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 12 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 15%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 13 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 17%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 14 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 20%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 15 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 24%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: 16 , அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: 27%

  • மொத்த பாயிண்ட்ஸ்கள்: >17, அடுத்த 10 ஆண்டுகளில் இதய நோய் அபாயம்: >32%


US CDCன் கூற்றுப்படி படி, உயர் ரத்த அழுத்தம் உள்ள புகைபிடிக்காத, நீரிழிவு நோயாளி, பருமனான 50 வயதுடைய பெண்ணுக்கு 85 வயது இதயம் உள்ளது, ஆரோக்கியமான உடல் நிறை குறியீட்டெண் கொண்ட 45 வயது ஆணுக்கு 75 வயது இதயம் இருந்தால், அவர் நீரிழிவு நோயாளியாக, உயர் ரத்த அழுத்தம் கொண்டவராக மற்றும் புகைப்பிடிப்பவராக இருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், எடை மற்றும் பிற சுகாதார நிலைமைகள் காரணமாக மக்களுக்கு அதிக இதய வயது இருப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.



இதய வயதை எது தீர்மானிக்கிறது?

ஒரு நபரின் இதயத்தின் ஒட்டுமொத்த வயதை தீர்மானிக்கும் பல காரணிகள் உள்ளன. அவற்றில் வயது, ரத்த அழுத்தம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவை மிக முக்கியமானவை.

ஹார்ட் ஏஜ் கால்குலேட்டர் முழுமையானதா.?

வெவ்வேறு ஹார்ட் ஏஜ் கால்குலேட்டர்களின் கணிப்பு மாறுபாடு குறித்து கூறும் நிபுணர்கள், ஒரு வயதான இதய வயது முடிவின் மருத்துவ அர்த்தம் மிகவும் மாறுபடும். ஒரு ஹார்ட் ஏஜ் முடிவு அடுத்த 5-10 ஆண்டுகளில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான குறைந்த, மிதமான அல்லது அதிக முழுமையான அபாயத்தைக் குறிக்கலாம்.

மேலும் அதே நபர் எந்த கால்குலேட்டரைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து இளைய அல்லது வயதான இதய வயது முடிவைப் பெறலாம். மேலும் இதய வயது, வாழ்க்கை முறையை மாற்ற வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்களுக்குத் தெரிவிக்க இது உதவலாம். என்றாலும் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதற்கான மருந்துகளைப் பற்றித் தெரிந்துகொள்ள நோயாளிகளுக்கு உதவாது என்பது நிபுணர்களின் கருத்து.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Heart health

அடுத்த செய்தி