முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இதய நோயை உண்டாக்கும் அதிக கொலஸ்ட்ரால் : கட்டுப்படுத்த உதவும் உணவுகள்...

இதய நோயை உண்டாக்கும் அதிக கொலஸ்ட்ரால் : கட்டுப்படுத்த உதவும் உணவுகள்...

அதிக கொழுப்பு

அதிக கொழுப்பு

உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. ஒன்று நல்லது மற்றொன்று கெட்டது. கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்க உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொலஸ்ட்ரால் குறைக்கும் உணவுகள்: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தாலே ஆபத்தான நோய்களும் வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற ஒரு பொருளாகும், இது உடலின் அனைத்து செல்களிலும் உள்ளது. இந்த செல்கள், உடலின் நரம்பு மண்டலம் மற்றும் ஹார்மோன்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது. கொலஸ்ட்ரால் புரதங்களுடன் கலந்தால், அது லிப்போபுரோட்டீன்களை உருவாக்கத் தொடங்குகிறது.

அந்தவகையில் உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது. ஒன்று நல்லது மற்றொன்று கெட்டது. கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்க உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவின் மூலம் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தலாம். கொலஸ்ட்ராலைக் குறைக்க என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம்.

கொலஸ்ட்ரால் குறைக்க என்ன சாப்பிட வேண்டும்..?

  • மெடிக்கல் நியூஸ் டுடே படி, கொலஸ்ட்ராலைக் குறைக்க உங்கள் உணவில் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • அவகேடோ கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

  • உங்கள் உணவில் கொட்டைகள் மற்றும் விதைகளைச் சேர்ப்பது கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்கிறது.
  • கொழுப்பு நிறைந்த மீன் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
  • முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.

  • பழங்கள் மற்றும் பெர்ரி நார்ச்சத்தின் நல்ல ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன. அதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • டார்க் சாக்லேட் மற்றும் கோகோ கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
  • கொலஸ்ட்ராலை குறைக்க, தினமும் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிடலாம்.
  • அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க, உங்கள் உணவில் உருளைக்கிழங்கு, தக்காளி, சோளம், ப்ரோக்கோலி போன்ற சத்தான காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

என்ன சாப்பிடக்கூடாது..?

 -  உணவில் உப்பு அல்லது சோடியம் உட்கொள்வதை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

- முட்டையின் மஞ்சள் கரு, இரால் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதால் இவற்றை உட்கொள்ள வேண்டாம்.

- மது அருந்தவே கூடாது, அது கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.

அதிக நிறைவுற்ற கொழுப்பு உள்ள பொருட்களை உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்.

உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துமா..?

அதிக கொலஸ்ட்ராலின் தீமைகள்

அதிகரித்த கொலஸ்ட்ரால் காரணமாக பிளாஸ்மா, நரம்புகளில் குவிந்து, அது வெடிக்கலாம்.

இதயத்திற்கு செல்லும் நரம்புகளில் அடைப்பு ஏற்படலாம்.

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

அதிகரித்த கொலஸ்ட்ரால் காரணமாக இரத்தம் உறைதல் ஏற்படலாம், இதன் காரணமாக பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

First published:

Tags: Cholesterol