ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தினசரி யார் யாருக்கு எவ்வளவு இரும்புச்சத்து தேவை..? குறைந்தால் என்னென்ன பக்கவிளைவுகளை சந்திப்பீர்கள்..?

தினசரி யார் யாருக்கு எவ்வளவு இரும்புச்சத்து தேவை..? குறைந்தால் என்னென்ன பக்கவிளைவுகளை சந்திப்பீர்கள்..?

இந்தியாவில் ஒரு பெரிய பொது சுகாதார சுமையாக இரும்புச்சத்து குறைபாட்டின் காரணமாக ஏற்படும் ரத்த சோகை இருப்பதாக மருத்துவர் சுபபிரகாஷ் சன்யால் கூறி உள்ளார்.

இந்தியாவில் ஒரு பெரிய பொது சுகாதார சுமையாக இரும்புச்சத்து குறைபாட்டின் காரணமாக ஏற்படும் ரத்த சோகை இருப்பதாக மருத்துவர் சுபபிரகாஷ் சன்யால் கூறி உள்ளார்.

இந்தியாவில் ஒரு பெரிய பொது சுகாதார சுமையாக இரும்புச்சத்து குறைபாட்டின் காரணமாக ஏற்படும் ரத்த சோகை இருப்பதாக மருத்துவர் சுபபிரகாஷ் சன்யால் கூறி உள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கடுமையான உடல்நல பிரச்சனையில் ஒன்று இரும்புச்சத்து குறைபாடு. பெரும்பாலும் இந்த குறைபாடு சோர்வாக வெளிப்படுகிறது. இரும்புச்சத்து ஒரு ஊட்டச்சத்து என்றாலும்நம் உடலுக்கு மிகவும் தேவையான மினரல் ஆகும். ஏனென்றால் நமது உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவுகிறது இரும்புச்சத்து. ஹீமோகுளோபினின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் இரும்புச்சத்தானது ரத்த சிவப்பணுக்களில் உள்ளது.

மேலும் இது நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை நம் உடல் முழுவதும் கொண்டு செல்கிறது என ஃபோர்டிஸ் ஹபிட்டலின் மூத்த மருத்துவரான சுபபிரகாஷ் சன்யால் கூறி இருக்கிறார் நம்மிடம் போதுமான இரும்புச்சத்து இல்லையென்றால், நம் உடலால் போதுமான ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் ரத்த சிவப்பணுக்களை உருவாக்க முடியாது. இந்த நிலையில் ரத்த சிவப்பணுக்களின் பற்றாக்குறை இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகை (iron deficiency anemia) என குறிப்பிடப்படுகிறது என்றார்.

இந்தியாவில் ஒரு பெரிய பொது சுகாதார சுமையாக இரும்புச்சத்து குறைபாட்டின் காரணமாக ஏற்படும் ரத்த சோகை இருப்பதாக மருத்துவர் சுபபிரகாஷ் சன்யால் கூறி உள்ளார். இது பற்றி மேலும் பேசியுள்ள மருத்துவர் ரத்த சோகை பாதிப்பு பெண்களிடையே 53.2% ஆகவும், ஆண்களில் 21.7% ஆகவும் உள்ளது. இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் ரத்த சோகைக்கு சப்ளிமெண்ட்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கலாம் என்றார்.

சில அறிகுறிகள்..

* சோர்வு அல்லது பலவீனம்

* மூச்சு திணறல்

* அடிக்கடி தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி

* வேகமான அல்லது ஒழுங்கற்ற இதய துடிப்பு

* நெஞ்சு வலி

* முடி கொட்டுதல்

* நாக்கில் புண் உண்டாவது

* நகங்கள் எளிதில் உடைவது

* கை மற்றும் கால்கள் ஜில்லென்றாவது

ஒருவருக்கு எவ்வளவு இரும்புச்சத்து தேவை?

பொதுவாக இது வயது, பாலினம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பொறுத்தது. கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு பெரியவர்களை விட அதிக இரும்புசத்து தேவைப்படுகிறது. அதே போல 4 - 8 வயது வரை தினசரி 10மி.கி, மற்றும் 9 -13 வயது வரை தினமும் 8 மி.கி என்ற அளவில் குழந்தை பருவத்தில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.

பின்னாளில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக இரும்புச்சத்து தேவைப்படுகிறது. ஏனென்றால் தங்கள் மாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு மாதமும் அதிக ரத்தத்தை அவர்கள் இழக்கிறார்கள். எனவே 19 - 50 வயது வரையிலான பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் 18 மி.கி இரும்புச்சத்து வேண்டும். இதே வயதில் ஆண்களுக்கு தினசரி தேவைப்படும் இரும்புசத்து 8 மி.கி மட்டுமே.

சியா vs சப்ஜா விதைகள்: உடல் எடையை குறைக்க எது சிறந்தது?

அதிக இரும்புசத்து அதிகம் தேவைப்படும் நபர்கள்..

கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், அல்சர் இருப்பவர்கள், இரைப்பை குடல் கோளாறு கொண்டவர்கள், முழுமையாக சைவ உணவு முறையை பின்பற்றுபவர்கள், எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளவர்கள்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்..

* கீரை, பச்சை பட்டாணி, ப்ரோக்கோலி போன்ற காய்கறிகள்

* கொண்டைக்கடலை, பருப்பு, காய்ந்த பட்டாணி, பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள்

* அன்னாசிப்பழம், பிளம்ஸ், தக்காளி, அவரை, சோயாபீன்ஸ், காலிபிளவர், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி, பாகற்காய், புரோக்கோலி, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், பூசணிக்காய்

* முட்டை, மீன், தானியங்கள்

* ஆடு, பன்றி இறைச்சி,கோழி, மீன், நண்டு

* வால்நட்ஸ், பிஸ்தா, கொடி முந்திரி, பீச் பழங்கள், உலர்ந்த திராட்சை, பாதாம்

மேலும் விட்டமின் சி அளவை அதிகரிப்பதன் மூலம் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்க முடியும். ஸ்ட்ராபெர்ரி, பிரக்கோலி அல்லது ஆரஞ்சு சாறு போன்ற விட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Iron Deficiency