Home /News /lifestyle /

குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் முன் தம்பதிகள் எடுக்க வேண்டிய முக்கியமான பரிசோதனைகள்..!

குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் முன் தம்பதிகள் எடுக்க வேண்டிய முக்கியமான பரிசோதனைகள்..!

கர்ப்பப் பரிசோதனை

கர்ப்பப் பரிசோதனை

கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு உடல்நல பரிசோதனைகள் எந்த அளவுவுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு கர்ப்பத்திற்கு முந்தைய திட்டமிடல் என்பது பெற்றோராக முயற்சிக்கும் தம்பதியருக்கு மிகவும் முக்கியம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு உடல்நல பரிசோதனைகள் எந்த அளவுவுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு கர்ப்பத்திற்கு முந்தைய திட்டமிடல் என்பது பெற்றோராக முயற்சிக்கும் தம்பதியருக்கு மிகவும் முக்கியம்.

ஆனால் பெரும்பாலான தம்பதிகளுக்கு இது தெரியாது. குழந்தை பராமரிப்பு என்பது உண்மையில் கர்ப்பம் அடைவதற்கு முயற்சி மேற்கொள்ளும் போதே தொடங்கி விடுகிறது. தம்பதிகள் தங்களுக்கு ஆரோக்கியமான உடல்நலம் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் விரைவில் மற்றும் கர்ப்பத்தை உறுதி செய்யலாம். எனவே குழந்தை பெற்று கொள்ள திட்டமிடும் முன் தம்பதிகள் செய்து கொள்ள வேண்டிய சில அடிப்படை சுகாதார பரிசோதனைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

ப்ரீகன்செப்ஷன் செக்கப் (preconception checkup):

இந்த பரிசோதனை பெண் ஒருவர் கர்ப்பமாகும் அதேகேற்ப அவரது உடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக செய்யப்படும் மருத்துவ பரிசோதனை ஆகும். இந்த சோதனையில் கர்ப்பம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்க கூடிய சுகாதார நிலைமைகளை ஏதேனும் இருக்கிறதா என்பது பரிசோதிக்கப்படுகிறது.

உடல் பரிசோதனை:

ஆரோக்கியமான உடல்நிலை கர்ப்பத்தை எளிதில் உறுதி செய்யும் என்பதால் பெண்களின் உயரம், எடை, ரத்த அழுத்தம், இதய ஆரோக்கியம், நுரையீரல், வயிறு மற்றும் பிற உடல் அமைப்புகளில் ஏதேனும் மருத்துவ நிலை இருக்கிறதா என்பது இந்த பரிசோதனையில் கண்டறியப்படுகிறது. அறிகுறிகள் அல்லது மருத்துவ நிலை இருப்பின் அதற்கேற்ப சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.



சிறுநீர் பரிசோதனை:

குழந்தை பெற்று கொள்ள திட்டமிடும் நேரத்தில் செய்யப்படும் சிறுநீர் பரிசோதனை, சிறுநீர் பாதை நோய் தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒருவேளை இந்த பரிசோதனையில் சிறுநீரில் சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டால், அடுத்து நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

கர்ப்பத்திற்கு முந்தைய ரத்த பரிசோதனைகள்:

ஹீமோகுளோபின், வைட்டமின் டி குறைபாடு, ரத்த சோகை, தலசீமியா, ரூபெல்லா நோய் எதிர்ப்பு சக்தி, சின்னம்மை, ஹெர்பெஸ், சிபிலிஸ், எச்ஐவி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் தைராய்டு பிரச்சனைகள் உள்ளிட்டவை கர்ப்பத்திற்கு முந்தைய ரத்த பரிசோதனைகளில் சரி பார்க்கப்படுகின்றன.

உடலுறவுக்குப் பின் சிறுநீர் கழித்துவிட்டால் கரு தங்காதா..? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்

பெண்ணோயியல் சோதனைகள் (gynaecological test)

இது பாலியல் ரீதியாக பரவும் தொற்று அல்லது அறிகுறிகளுக்கான பிறப்புறுப்பு பரிசோதனையை உள்ளடக்கியது. மேலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்கிறதா என்பதை கண்டறிய PAP smear டெஸ்ட் செய்யவும் இதில் அறிவுறுத்தப்படுகிறது.

முன்கூட்டிய மரபணு பரிசோதனை..

கணவன் அல்லது மனைவி தங்கள் எதிர்கால குழந்தைக்கு சில நோய்களுடன் தொடர்புடைய அசாதாரண மரபணுக்களை கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை தீர்மானிக்க Gentic disorder பரிசோதனை உதவும். இந்த டெஸ்ட் ரத்த மாதிரி அல்லது உமிழ்நீர் கொண்டு செய்யப்படலாம்.



ப்ரீ-பிரகனென்சி டெஸ்ட்ஸ்:

இந்த பரிசோதனைகளில் உங்கள் மருத்துவர் ஆரோக்கியமான கர்ப்பத்தை உறுதிப்படுத்த சில அடிப்படை சோதனைகளை பரிந்துரைக்கலாம். மேலும் கருத்தரிக்க இயலாமைக்கு பொருத்தமான சிகிச்சையையும் பரிந்துரைக்க கூடும்.

அல்ட்ராசவுண்ட் டெஸ்ட்:

பெண்களின் அடிவயிற்றில் செய்யப்படும் இந்த டெஸ்ட் கர்ப்பமாவதற்கு இடையூறாக கருப்பையில் நீர்க்கட்டிகளின் வளர்ச்சி அல்லது நார்த்திசு கட்டிகள் இருப்பதை கண்டறிய உதவுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Baby Planning, Pregnancy

அடுத்த செய்தி