• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அளவுக்கு மீறிய உடற்பயிற்சி உடல்நலத்திற்கு ஆபத்து : எச்சரிக்கும் ஆரம்பகால அறிகுறிகள்...

அளவுக்கு மீறிய உடற்பயிற்சி உடல்நலத்திற்கு ஆபத்து : எச்சரிக்கும் ஆரம்பகால அறிகுறிகள்...

அதிக உடற்பயிற்சி ஆபத்துகள்

அதிக உடற்பயிற்சி ஆபத்துகள்

அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வென்ட்ரிகுலர் அரித்மியா எனப்படும் தீவிர இதய தாள அசாதாரணங்கள் ஏற்படும். இது திடீர் மரணத்தை உருவாக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

  • Share this:
அக்டோபர் 29ம் தேதி வெள்ளிக்கிழமை நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், பெங்களுரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 46 வயதான அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, இதயம் செயல்படவில்லை என்பதை அறிந்தனர். உயர்தர சிகிச்சை கொண்டு முயற்சி செய்யப்பட்டபோதும், அதற்கு பலன் கிடைக்கவிலை.

பிட்னஸில் அதிக கவனம் செலுத்தும், மிகவும் பிரபலமான ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது என்பதை திரையுலகத்தினர் மற்றும் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் ரியான் பெர்னாண்டோ பேசும்போது, புனீத் ராஜ்குமார் பல இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பவராக இருந்தார். எப்போதும் பிட்னஸாக இருக்க வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கொண்டே இருப்பார் என தெரிவித்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். சில தகவல்களின்படி, அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம், உடற்பயிற்சி செய்பவர்களிடையே ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் உடற்பயிற்சி செய்வது ஆபத்தானதா? அப்படியானால் அதன் அறிகுறிகள் என்ன? எப்போது அதிக உடற்பயிற்சி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு நிபுணர்கள் சொல்வது என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.1. வழக்கமான உடற்பயிற்சி VS திடீர் உடற்பியற்சி :

நாள்பட்ட நோய்களைத் தடுக்க, நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்வைப் பெற உடல் செயல்பாடு அவசியம். வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சுறுசுறுப்பான வாழ்க்கை மற்றும் சீரான எடை, ஆரோக்கியமான இதய செயல்பாடு ஆகியவை சமச்சீராக இருக்கும். அதிக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, அதன் தீமைகளை எதிர்கொள்வதை தடுக்க முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர். கார்டியாலஜி நிபுணர் மருத்துவர் வெங்கடேஷ் பேசும்போது, பழக்கமில்லாத உடற்பயிற்சி, போதிய பயிற்சி இல்லாத உடற்பயிற்சிகளை திடீரென அதிகரிக்கும்போது தசைக்கூட்டு எலும்பில் காயமும், ரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் பக்கவாதம் வருமா..? ஆய்வில் அதிர்ச்சி.!

வார்ம் அப் செய்து உடற்பயிற்சிகளை தொடங்குவது சரியான வழி என கூறும் அவர், உடற்பயிற்சி நிபுணர்களின் மேற்பார்வையில் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். உடனடி முடிவுகளைப் பெறுவதற்காக செய்யப்படும் உடற்பயிற்சிகள் ஆபத்தானது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.2. அதிக உடற்பயிற்சி அறிகுறிகள் :

அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்படும் குறுகிய கால ஆபத்துகள் என்னவென்றால், தசைவலி, சோர்வு, தீவிர மனநிலை குழப்பம், தூக்க சிக்கல்களை சந்திப்பார்கள். இது உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதித்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர் வெங்கடேஷ் குறிப்பிடுகிறார். இதயத் தமனிகளில் பிளேக்குகள் (plaques) உள்ள நோயாளிகளுக்கு அவை வெடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இல்லையென்றால் மாரடைப்பு ஏற்படலாம் என அவர் எச்சரிக்கிறார்.

அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வென்ட்ரிகுலர் அரித்மியா எனப்படும் தீவிர இதய தாள அசாதாரணங்கள் ஏற்படும். இது திடீர் மரணத்தை உருவாக்கும் வாய்ப்புகளும் உள்ளன. இதய பாதிப்பைத் தவிர நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனப்படும். வைரஸ் தொற்றுகளை எதிர்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன என மருத்துவர் வெங்கடேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.3. அதிக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பதால், அதனை ஏன் நிறுத்த வேண்டும் என்பதற்கான தெளிவான காரணங்கள் இல்லை. அதேநேரத்தில் இதய நோயாளி அல்லது நீரிழிவு நோய் உள்ளிட்ட பிற நாள்பட்ட நோய் பாதிப்புகள் இருந்தால் உடலை அதிகம் கஷ்டப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மருத்துவர் வெங்கடேஷ் கூறும்போது, இந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் திடீரென உடற்பயிற்சியை அதிகரிப்பது சரியானது அல்ல. முறையான ஆலோசனையுடன் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவிக்கிறார்.

உஷார்..! நினைவாற்றல் இழப்பை உண்டாக்கும் இந்த உணவுகளை தொடாதீர்கள்...

உடற்பயிற்சியின்போது வலி, மூச்சுத்திணறல், தலைச்சுற்றல், மயக்கம், படபடப்பு, தேவையற்ற வியர்வை அல்லது சோர்வு இருந்தால் உடனடியாக பயிற்சியை நிறுத்துவிட வேண்டும். மேலும், மருத்துவமனைக்கு சென்று உரிய ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் உடற்பயிற்சியை ஒருபோதும் செய்யாதீர்கள்.

உடல் எடை அதிகரிப்பு, நீங்கள் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறீர்கள் என்பதையும், எடை இழப்பு ஏதேனும் நோய் பாதிப்புக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். அதனால், நீங்கள் உடலை மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதிக அழுத்தம் கொடுக்காமல் உடற்பயிற்சி செய்தீர்கள் என்றால் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: