ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சாப்பிட்ட உடனே மலம் கழிக்கிறீங்களா..? உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்..!

சாப்பிட்ட உடனே மலம் கழிக்கிறீங்களா..? உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்..!

வயிறு கோளாறு

வயிறு கோளாறு

பொதுவாக நாம் ஒரு உணவை சாப்பிட்டால் அது குடல் வழியாக வயிற்றுக்குள் செல்ல கிட்டதட்ட 6-8 மணி நேரம் ஆகும் என்கின்றனர் மருத்துவர்கள். பின் அது செரிமானித்திற்கு பெருங்குடலுக்கு அனுப்புகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க செல்வது பயப்படக்கூடிய ஆபத்து இல்லை என்றாலும் இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதை உடனே சரி செய்ய வேண்டியது அவசியம். பொதுவாக நாம் ஒரு உணவை சாப்பிட்டால் அது குடல் வழியாக வயிற்றுக்குள் செல்ல கிட்டதட்ட 6-8 மணி நேரம் ஆகும் என்கின்றனர் மருத்துவர்கள். பின் அது செரிமானித்திற்கு பெருங்குடலுக்கு அனுப்புகிறது. பின் அது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி தேவையான பாகங்களுக்கு அனுப்பிவிட்டு தேவையற்ற உணவை மலமாக தள்ளுகிறது. இப்படி சொல்லும்போதே மூச்சு வாங்கும் விஷயத்தை உங்கள் உடல் சட்டென செய்கிறது எனில் உங்கள் உடலில் ஏதோ தவறான விஷயம் நடக்கிறது என்று அர்த்தம்.

  ஏன் சாப்பிட்ட உடனேயே மலம் வருகிறது ..?

  காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸ் (gastrocolic reflex) என்பது ஒரு உடலியல் ரிஃப்ளெக்ஸ் ஆகும். இது உணவுக்குப் பிறகு கீழ் இரைப்பைக் குழாயின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. உணவுக்குப் பிறகு மலம் கழிப்பதற்கான தூண்டுதல் பெரும்பாலும் காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸ் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அப்படி உணவு உண்டவுடன் பெருங்குடல்களில் ஒரு எதிர்வினை தூண்டப்பட்டு அது பெருங்குடல் சுருக்கங்களுக்கு வழிவகுக்கிறது.

  இந்த பெருங்குடல் சுருக்கங்கள் உடலில் செரிக்கப்பட்ட உணவை மலம் கழிப்பதற்காக மலக்குடலை நோக்கி தள்ளுகிறது. பெரும்பாலும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி உள்ளவர்கள் காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸுக்கு அதிகமாக பாதிக்கப்படுவார்கள். ஆனால் சிலர் இது நேற்று சாப்பிட்ட உணவை வெளியேற்றலாம் என தவறாக நினைக்கின்றனர்.

  காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸ் தூண்டலுக்கு என்ன காரணம்..?

  காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸ் தூண்டலுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் சொல்லப்படுகிறது. இது உணவை சாப்பிட்ட உடனேயே அதை வெளியேற்ற நினைக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, உணவு ஒவ்வாமை, உணவு சகிப்புத்தன்மை, பதட்டம், இரைப்பை அழற்சி, நாள்பட்ட அழற்சி குடல் நோய் மற்றும் பிற அடிப்படை மருத்துவ நிலைமைகள் இதற்கான பொதுவான காரணங்களாக கூறப்படுகிறது. இவை தவிர, குடல் நுண்ணுயிரியின் மாற்றமும் இந்த அனிச்சையை ஏற்படுத்தும். தொற்று காரணமாக இவ்வாறு நிகழலாம்.

  Also Read : ஆண்களே 30 வயதை கடந்துட்டீங்களா..? குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தால் இந்த பிரச்சனைகளை தெரிஞ்சுக்கோங்க...

  பல ஆராய்ச்சி ஆய்வுகள் இந்த ரிஃப்ளெக்ஸுடன் நீரிழிவு நோயையும் தொடர்புபடுத்தியுள்ளன. அதுமட்டுமன்றி காரமான உணவு, கார்பனேற்றப்பட்ட பானங்கள், புகைபிடித்தல், மது அருந்துதல், மோசமான உணவுப் பழக்கம், குறைவான உடல் உழைப்பு, அன்றாடம் உட்கொள்ளும் மருந்துகள், பால் பொருட்கள் போன்றவையும் இந்த தேவையற்ற குடல் இயக்கத்திற்கான காரணங்களாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

  இதை எவ்வாறு தடுத்து நிறுத்துவது..?

  பொதுவாக மருத்துவர்கள் காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸைக் கட்டுப்படுத்த ஆன்டிஸ்பாஸ்மோடிக்ஸ் போன்ற மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், மருந்துகள் இல்லாமல் இதைக் கட்டுப்படுத்த விரும்பினால், அதுவும் சாத்தியமாகும்.

  Also Read :  அதிகப்படியான வியர்வைக்கு இதுவும் காரணமாக இருக்கலாம்... அலர்ட்டாக இருங்கள்..!

  அதாவது , வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் இந்த தேவையற்ற பெருங்குடல் சுருக்கத்தை கட்டுப்படுத்த உதவும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் அதிக காரமான உணவுகளை உண்பவராக இருந்தால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அல்லது அதிகமாக புகைபிடித்தால், படிப்படியாக அதை முற்றிலும் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

  போதுமான தூக்கம் மற்றும் போதுமான தண்ணீர் குடிக்கவும். இந்த வழிமுறைகள் சுகாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆரோக்கியமான சமச்சீர் உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகள் குடல் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Food, Pooping