இதய நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் தொடர்பான சிக்கல்கள் இன்றைய சூழலில் பலருக்கும் பொதுவான பாதிப்புகளாக இருந்து வருகின்றன. நோய் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருக்க காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும், தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும், சராசரியாக 7 - 8 மணி நேரங்கள் தூங்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வாழ்க்கை முறை பழக்கங்களை கடைபிடிக்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆனால் பொதுவாக 40 வயதை அடையும் போது ஒருவரின் உடல் உணர கூடிய சில பாதிப்புகள் அல்லது மாற்றங்களை சந்திக்கும் என்பது இயல்பு. இவற்றை நீங்கள் புறக்கணிக்க கூடாது. 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய சில அவசியமான பரிசோதனைகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன...
நல்ல மன ஆரோக்கியத்தை பேண ஸ்ட்ரெஸ் டெஸ்ட்:
40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை கண்டறிவதற்கான பரிசோதனைகளை செய்வது அவசியம். இதில் கவுன்சிலிங் அல்லது மருந்துகளும் அடங்கும். சரியான நேரத்தில் மனஅழுத்தத்தை கண்டறியவிட்டால் அது உணர்ச்சி பிரச்சனைகள் அல்லது தீவிர கவலை மற்றும் கவலையின் பிற வடிவ மனஅழுத்தங்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
ப்ரீ-டயாபட்டிக் டெஸ்ட்:
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்டறிய சாப்பிடுவதற்கு முன் ரத்த சர்க்கரை பரிசோதனை செய்யப்பட வேண்டும். இந்த டெஸ்டின் ரிசல்ட் 70 -100 மில்லிகிராம்களுக்கு இடையில் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அளவுகள் அதிகமாக இருந்தால், முறையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் தேவைப்படும்.
புரோஸ்டேட் கேன்சர் டெஸ்ட்:
ஆன்டிஜென் மற்றும் ப்ரோஸ்டேட் சுரப்பி தொடர்பான சோதனைகள் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை கண்டறிய முடியும். 40 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு ஆண்களுக்கும் இந்த பரிசோதனை அவசியம்.
டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்னிலிருந்து உங்கள் கண்களை பாதுகாக்க உதவும் டிப்ஸ்..
ஆஸ்டியோபோரோசிஸ் டெஸ்ட்:
40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான சாத்தியமான அபாயங்கள் குறித்து தெரிந்து கொள்ள மருத்துவர்களை அணுக வேண்டும். எலும்பு அடர்த்தி சோதனை ஆஸ்டியோபோரோசிஸ் இருக்கிறதா என்பதை தீர்மானிக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகளின் பலவீனத்தை குறிக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் மிகவும் வலுவிழந்த மற்றும் எளிதில் உடையக்கூடிய எலும்பு ஆரோக்கியத்தை குறிக்கிறது.
கொலஸ்ட்ரால் டெஸ்ட்:
40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்க ஃபாஸ்டிங் ப்ரொஃபைல் லிப்பிட் டெஸ்ட் செய்யப்பட வேண்டும். அதிக கொலஸ்ட்ரால் அளவு தமனிகள் சுருங்குதல், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட தீவிர நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஹார்மோன் டெஸ்ட்:
கிட்டத்தட்ட 40 வயதிற்கு மேற்பட்ட மூன்றில் ஒரு பங்கு ஆண்களை பாதிக்கும் ஹைபோகோனாடிஸம் கோளாறு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய டெஸ்டோஸ்டிரோன் டெஸ்ட் செய்யப்பட வேண்டும். ஹீமோகுளோபின் தரத்தை சரிபார்க்க வைட்டமின் பி 12 மற்றும் சீரம் ஃபெரிடின் ஆகியவையும் பரிசோதிக்கப்பட வேண்டும்.
பாலியல் ரீதியாக பரவும் நோய்களை கண்டறியும் பரிசோதனை:
பாலியல் செயல்பாடுகளைப் பொருட்படுத்தாமல் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் HIV டெஸ்ட் (ரத்த பரிசோதனை) செய்து கொள்ள வேண்டும். இந்த நோய்கள் ரத்த விந்து, ரத்த மாற்றம் மற்றும் ஊசிகள் மூலம் பரவும் என்பதால் பரிசோதனை அவசியம்.
கண் பரிசோதனை:
40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், பார்வையின் தரம் மோசமடைவதைத் தடுக்க ஒரு கண் மருத்துவரிடம் முறையான கண் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
உடல் பருமன் சோதனை:
பல தீவிர உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடல் பருமன் வழிவகுக்கும் என்பதால், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தங்கள் பிஎம்ஐ லெவலை மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். பிஎம்ஐ லெவல் அதிகமாக இருந்தால், குறிப்பிட்ட நபரின் உடல் நிலைக்கேற்ப மருத்துவர் சிறந்த சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Men's health