‘கொரோனா’ என்ற ஒற்றை வார்த்தை உலகம் முழுவதும் வாழும் மக்களின் அன்றாட ஹெல்த் கேர் விஷயங்களில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. மக்கள் சுகாதாரத்தை பற்றி பார்க்கும் பார்வை முற்றிலும் மாறிவிட்டது. தன் மீதும், தான் நேசிப்போரின் உடல் நலத்தின் மீது அதிக அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கும், மக்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு நாளும் வர ஆரம்பித்துள்ளன. நீங்கள் அறிந்திருக்க வேண்டிய சில டிரெண்டிங் ஹெல்த்கேர் தொழில்நுட்பங்கள் இதோ...
கொரோனா பரவலைத் தடுக்கவும் மருத்துவமனையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் ‘டெலி மெடிசின்’ சிறந்த தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசால் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம், இடையில் சரிவர பயன்படுத்தப்படாமல் இருந்து, கொரோனா பரவலை அடுத்து மக்களின் கவனம் பெற்றிருக்கிறது.
இதையும் படியுங்கள் : இந்த 4 வகை பருப்பை சேர்த்து அரைச்சா ஆரோக்கியமான தோசை மாவு ரெடி... எப்படி செய்வது..?
டெலிமெடிசின் : டெலிமெடிசின் என்பது இ-மெடிசின் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலமாக நோயாளிகள் எங்கிருந்தாலும், மருத்துவர்களை ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெற முடியும். மருந்துகள் பற்றிய சந்தேகங்கள், தனிப்பட்ட கவனிப்பு, ஆலோசனை போன்ற எல்லா வகையான உதவிகளையும் நீங்கள் ஒருசில கிளிக்குகளில் பெறலாம். கொரோனா பெருந்தோற்று காலத்தில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கும், வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கும் டெலிமெடிசின் பயனுள்ளதாக அமைந்தது. தமிழகத்தில் கூட கொரோனா பரவலின் போது 104 என்ற எண்ணின் கீழ் இலவச டெலிமெடிசின் சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெர்சனலைஸ் மெடிசின் : (தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம்) ஒரு தனிநபரின் தனிப்பயனாக்கப்பட்ட தரவைப் பயன்படுத்தி அவர்களுக்கு குறிப்பிட்ட மருந்துகளை உருவாக்கும் நடைமுறை ஆகும். குறிப்பிட்ட நபரின் மரபணு சுயவிவர தகவலை வைத்து நோய்க்கான சிறந்த தடுப்பு மற்றும் நோயறிதல் ஆகியவற்றிற்கான சிகிச்சையை உருவாக்க முடியும். மருத்துவ முடிவுகள், நடைமுறைகள், மருத்துவ தலையீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து சிறந்த சிகிச்சைகளைக் கொண்டு வருவதற்கு இந்த மருத்துவ மாதிரி உதவும்.
இதையும் படியுங்கள் : கருப்பு கொண்டைக்கடலை ஊற வைத்த தண்ணீரை தினமும் இப்படி குடித்து வந்தால் இத்தனை நன்மைகளா..? மிஸ் பண்ணிடாதீங்க..
நர்சிங் பணிப்பாய்வு : கொரோனா தொற்றுநோய்களின் போது செவிலியர்கள் ஆற்றிய பணி அளப்பறியது. கொரோனா வாரியர்ஸாக முன்னிலையில் நின்று நம்மை காக்க உதவினர். நர்சிங் பணிப்பாய்வு சுகாதார அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. செவிலியர் மேலாண்மை மற்றும் நோயாளிகளுக்கு செவிலியர்களை ஒதுக்குவது போன்ற பணிகளுக்கு முக்கியமானது. இதன் மூலமாக ஒரு நர்சிங் வார்டில் தினசரி நடவடிக்கைகளின் நேரம் மற்றும் தங்கள் நோயாளிகளைக் கவனிப்பதற்காக நர்சிங் ஊழியர்கள் செய்யும் அடுத்தடுத்த பணிகள் அல்லது செயல்பாடுகளை வரையறுக்க உதவுகிறது.
இதையும் படியுங்கள் : மீந்து போன சாதத்தில் பஞ்சு போன்ற இடியாப்பமா..? பத்தே நிமிடத்தில் செய்ய ரெசிபி...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் : தொழில்நுட்பம் அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்ந்து கொண்டே செல்கிறது. அதற்கு ஏற்ப மருத்துவ துறையிலும் பல அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்கது Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்கள் மருத்துவ துறையில் பயன்படுத்தப்படுகின்றன. தற்போதைய காலகட்டத்தில் மருத்துவத்துறையின் பணிகள் அதிவேகமாகவும், எளிதானதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே மருத்துவ துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, ஒரு சிறந்த உதவியாளருக்கு சமமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு உதவும்.
ஹெல்த் கிளவுடு : ஹெல்த் கிளவுடு நமது உடல் சார்ந்த தரவுகளை சேமிப்பதில் கேம்-சேஞ்சராக செயல்படுகிறது. இதன் உதவியுடன் முடிவில்லாத தரவுப்பதிவு, பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது. ஹெல்த் கிளவுடு தொழில்நுட்பம் மருத்துவ வல்லுநர்கள் முதல் நோயாளிகள் வரையிலான அனைவருக்கும் துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்களை அணுக அனுமதிக்கிறது. இதனால் மருத்துவ சிகிச்சையில் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.