உண்ணாவிரதம் இருப்பதனால் உடலுக்கு இத்தனை நன்மைகளா ?

உண்ணாவிரதம் இருப்பதால் உணவு விஷத்தன்மையாக மாறுவதை தடுக்க முடியும் என கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

உண்ணாவிரதம் இருப்பதால் உணவு விஷத்தன்மையாக மாறுவதை தடுக்க முடியும் என கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

 • Share this:
  உடல் எடையை குறைப்பதற்காக டயட் இருப்பதற்கும், விரதம் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. டயட்டில் குறிப்பிட்ட வகை உணவுகளை மட்டும் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். அதேநேரத்தில் விரதம் இருப்பது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உணவு சாப்பிடாமல் இருப்பதாகும். விரதம் இருப்பது அனைவரின் உடல் நலத்திற்கும் ஆரோக்கியமானது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் இதனை சரியான எடையை நிர்வகிப்பவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் உண்ணாவிரதம் இருப்பதற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

  உண்ணாவிரதத்தின் நன்மைகள் :

  கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் சமீபத்தில் இதுகுறித்து ஆய்வு செய்த நிலையில், உண்ணாவிரதம் இருப்பதால் உணவு விஷத்தன்மையாக மாறுவதை தடுக்க முடியும் என கண்டறிந்துள்ளனர்.

  இதுகுறித்து எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையில் 48 மணிநேரம் எலிகளுக்கு உணவு கொடுக்காமல் இந்த ஆய்வு நடைபெற்றது. அதன்பின்னர் எலிகளுக்கு சால்மோனெல்லாவை வாய்வழியாக வழங்கும்போது, ​​அவை குறைவான தொற்றுநோயை அனுபவித்தது கண்டுபிடிக்கப்பட்டது. எப்போதும் போல மூன்று வேலை சாப்பிட்ட எலிகளுடன் ஒப்பிடும்போது உண்ணாவிரதம் இருந்த எலிகளுக்கு உணவு விஷத்தை ஏற்படுத்தவில்லை.

  இதன் மூலம் உண்ணாவிரதம் அனைத்து குடல் திசு சேதத்தையும், வீக்கத்தையும் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர், புட் பாய்சன் ஏற்பட்டால் அது இரைப்பை குடல் அசவுகரியத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் , இதனால் செரிமானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே உண்ணாவிரதம் இருப்பது இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.

  இது ஏன் நடக்கிறது?

  ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி, குடலில் உள்ள உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துக்கள் பிரிக்கப்படுகிறது, இதில் சிறிதளவு உணவு மீதம் இருந்தாலும் அதில் உருவாகும் நுண்ணுயிர் நோய்க்கிருமிகள் நமது உடலுக்கு தேவையான ஆற்றலைப் பெறுவதை தடுக்கும். இதனால் அவ்வப்போது உண்ணாவிரதம் இருப்பது நமது குடல் பகுதியில் உணவு இருப்பதை தவிர்க்க உதவுகிறது, இதனால் புட் பாய்சன் ஏற்படாது.

  எவ்வாறாயினும், உணவு நச்சாக மாறுதவை உண்ணாவிரதம் இருப்பதால் மட்டும் தவிர்த்து விட முடியாது. இது ஒரு சிக்கலான தலைப்பு என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், இதுகுறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சி தேவை என்பதால் இந்த ஆய்விலிருந்து தற்போது உறுதியான முடிவை எடுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

  மேலும், விலங்குகளை வைத்து நடத்தும் ஆய்விற்கும், மனிதர்களை உட்படுத்தும் நேரத்தில் கிடைக்கும் முடிவிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது என அவர்கள் விளக்கியுள்ளனர். எனவே உணவு விஷத்தின் அறிகுறிகளை தவிர்க்க இடைவிடாத உண்ணாவிரதம் இருக்கலாம் என நீங்கள் முடிவு செய்தால் அதற்கு முன்னர் உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

  உண்ணாவிரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் :

  ஹார்மோன் மாற்றம் :

  உண்ணாவிரதத்தின் போது, ​​உங்கள் உடலில் பல விஷயங்கள் நடக்கும். முதலில் கவனிக்கத்தக்க விஷயம் ஹார்மோன் மாற்றங்கள் தான். உண்ணாவிரதம் இருப்பதால் ஏற்கனவே சேமிக்கப்பட்ட உணவின் ஆற்றல் முழுமையாக கிடைக்க உதவுகிறது. மேலும் இன்சுலின் அளவு கணிசமாகக் குறைந்து, உடலில் இருந்து கழிவுப் பொருட்களை வெளியேற்றத் தொடங்குகிறது. இதனால் உங்கள் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

  Also Read : உங்கள் உதடு கருப்பாக இருப்பதற்கு இது தான் காரணம்.. இனி இதை செய்யாதீங்க..

  உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் :

  பெரும்பாலான நாள்பட்ட நோய்கள் அனைத்தும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படுகின்றன. உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் புரதம் மற்றும் டிஎன்ஏ போன்ற பிற முக்கிய மூலக்கூறுகளுடன் வினைபுரிந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. உண்ணாவிரதம் இருக்கும் உணவு முறை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு உடலின் எதிர்ப்பை அதிகரிக்கிறது. இதனால் உடலில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதய ஆரோக்கியத்திற்கு நல்லது :

  இதய நோய் அபாயத்தை குறைப்பதில் உண்ணாவிரதம் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க உதவுகிறது, இரத்த அழுத்தம், இரத்த ட்ரைகிளிசரைடுகள் இவை அனைத்தும் இதய நோய்களுக்கு பங்களிக்கின்றன. உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

  மூளைக்கு நன்மை பயக்கும் :

  உண்ணாவிரதம் இருப்பது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு வளர்சிதை மாற்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதனால் புதிய நரம்பு செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

   

   
  Published by:Tamilmalar Natarajan
  First published: