ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வதால் கிடைக்கும் 7 பலன்கள்

இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வதால் கிடைக்கும் 7 பலன்கள்

இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி

இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி

நம் அலுவலகப் பணிகள் மற்றும் வீட்டு வேலை ஆகிய சுமைகள் காரணமாக நாம் பிஸியாக இருந்தாலும், அவ்வபோது சற்று நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும். நம் உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள இது உதவும். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நம் அலுவலகப் பணிகள் மற்றும் வீட்டு வேலை ஆகிய சுமைகள் காரணமாக நாம் பிஸியாக இருந்தாலும், அவ்வபோது சற்று நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும். நம் உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள இது உதவும். சிலருக்கு அதிகாலை நேரத்தில் அலுவலகம் தொடங்கி விடுவதால் அந்த சமயத்தில் நடை பயிற்சி செல்ல நேரம் இருக்காது. இதனால் எந்தவித உடற்பயிற்சிகளையும் அவர்கள் செய்வதில்லை. ஆனால், இதுபோன்ற நபர்கள் இரவு உணவுக்குப் பிறகு லேசான உடற்பயிற்சிகளை செய்து கொள்ளலாம்.

இரவு உணவுக்குப் பிறகு நடை பயிற்சி செல்வது உங்களுக்கு நல்ல பலனை தரும். குறிப்பாக, உடல் நலன் மட்டுமல்லாமல் மனநலனை மேம்படுத்தவும் இது உதவிகரமாக இருக்கும்.

செரிமானத்தை அதிகரிக்கும்

இரவு நேரத்தில் நடந்து செல்வதால் நம் ஜீரனத்திற்கு தேவையான என்ஜைம்கள் உடலில் உற்பத்தி ஆகும். இதனால், சாப்பிட்ட உணவு எளிமையாக ஜீரனம் அடையும். இது வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

மெடபாலிசத்தை ஊக்குவிக்கும்

சாப்பிட்ட பிறகு நடை பயிற்சி செய்வதால் நமது மெடபாலிசம் மேம்பாடு அடைகிறது. அதிகப்படியான கலோரிகளை உடலில் இருந்து எரிப்பதற்கு இது உதவிகரமாக இருக்கும். ஆனால், சாப்பிட்ட பிறகு நீங்கள் உடனடியாக ஓய்வெடுக்கச் சென்றுவிட்டால் கலோரிகள் அப்படியே தங்கிவிடும்.

எதிர்ப்புசக்தி கிடைக்கும்

நடை பயிற்சியை தொடர்ந்து உணவுகள் வேகமாக செரிமானம் அடைவதால் நமது உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறுகின்றன. இதனால், உடல் உள் உறுப்புகளின் நலன் மேம்பாடு அடையும். அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

டிஜிட்டல் ஐ ஸ்ட்ரெய்னிலிருந்து உங்கள் கண்களை பாதுகாக்க உதவும் டிப்ஸ்..

நள்ளிரவு பசி குறையும்

பலர் பசி காரணமாக நள்ளிரவில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இது தவறான பழக்க, வழக்கமாகும். ஆனால், தினசரி நடை பயிற்சி செய்வதன் மூலமாக இதை கட்டுப்படுத்த முடியும். 15 நிமிடங்கள் அதிவேகமாக நடந்தீர்கள் என்றால் பசி உணர்வை கட்டுப்படுத்த முடியும்.

தூக்கம் மேம்படுகிறது

இரவில் நீங்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர் என்றால், உணவு சாப்பிட்ட பிறகு நடந்து செல்வது நல்ல பலனை தரும். உங்கள் ஸ்ட்ரெஸ் அளவை குறைத்து நன்றாக தூக்கம் வரும்.

ரத்த சர்க்கரை அளவு குறைகிறது

நடக்கும்போது ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை உடல் பயன்படுத்திக் கொள்கிறது. இதனால், ரத்த சர்க்கரை அளவு குறைகிறது.

மன அழுத்தம் குறையும்

பொதுவாகவே நீங்கள் மன அழுத்தம் அல்லது ஸ்ட்ரெஸ் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருபவர் என்றால், இரவு நேரத்தில் நடப்பது உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். உங்கள் உடலுக்கு ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கும்.

First published:

Tags: Walking