Home /News /lifestyle /

இரவு சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

இரவு சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

நடைபயிற்சி

நடைபயிற்சி

இரவு உணவுக்கு பிறகு நடைபயிற்சி செய்வதால் உடலுக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரவில் நடைபயிற்சி என்றதுமே சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆமாம், நடைபயிற்சி என்றாலே நம் மனதுக்கு சட்டென்று காலையில் செய்யும் பயிற்சி என்றே நினைவுக்கு வரும். மாலையிலும் இந்த பயிற்சியை செய்வோர் உண்டு என்றாலும், இரவில் இதை யாரும் செய்து பார்த்திருக்க மாட்டோம். இரவு சாப்பிட்டு முடித்த பிறகு சற்று நேரத்திற்கு உள்ளாக தூங்கச் செல்வதே நம்மில் பலரது வழக்கமாக இருக்கும்.

ஆனால் இரவு உணவுக்கு பிறகு நடைபயிற்சி செய்வதால் உடலுக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகாலையில் அவசர, அவசரமாக அலுவலகங்களுக்கு புறப்பட்டுச் செல்வோருக்கு உடற்பயிற்சி செய்திட நேரம் இருக்காது. மாலை வந்ததும் உடல் களைப்புற்று இருக்கும். ஆனால், இரவில் சாப்பிட்ட பிறகு கொஞ்சம் ரிலாக்ஸாக நடந்து செல்லலாம். இதன் மூலமாக கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

ஜீரணம் மேம்படும் :

நடைபயிற்சி செல்லும்போது உங்கள் வயிற்றில் கேஸ்ட்ரிக் என்ஜைம்களின் சுரப்பு அதிகமாகிறது. இதனால், உடலில் செரிமான சக்தி மேம்படும். மேலும், வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன.

இது தவிர இரவில் நடப்பதால் கலோரிகள் ஏராளமாக எரிக்கப்படும். ஆனால், சாப்பிட்ட பிறகு உடனே ஓய்வெடுக்கச் சென்றாலோ அல்லது அமர்ந்து விட்டாலோ உடலில் கலோரிகள் தேக்கம் அடையும். இதனால், உடல் பருமன் ஏற்படக் கூடும்.



நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் :

இரவில் நடைபயிற்சி செய்யும்போது உணவுகள் எளிதாக ஜீரணம் அடைகின்றன என்ற சூழலில், வயிற்றில் உள்ள கழிவுகளை அது வெளியேற்றுகிறது. இதனால், உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடு மேம்படுகிறது. இது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பது நல்லதா..? மீறி குடித்தால் என்ன பாதிப்புகள் வரும்..?

நல்ல தூக்கம் வரும் :

இரவில் பலர் தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொண்டு வருவீர்கள். உங்களுக்கான சிறந்த நிவாரணமாக நடைபயிற்சி இருக்கும். நடக்கும் போது உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் குறைந்து, நல்ல தூக்கம் வருவதற்கான வழி பிறக்கும்.

ரத்த சர்க்கரை சீராக இருக்கும் :

நடைபயிற்சி செய்யும்போது உடலில் உள்ள குளுகோஸ் பயன்படுத்திக் கொள்ளப்படுவதால், ரத்த சர்க்கரை அளவு சீரான நிலையில் இருக்கும். பொதுவாகவே, நீங்கள் மன அழுத்தம் அல்லது கவலைகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நடைபயிற்சி உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். நடைபயிற்சியின் போது வெளிப்படும் எண்டோர்பின்ஸ் என்ற என்ஜைம் உங்கள் உடலை சுறுசுறுப்பாக உணர வைக்கும்.



நொறுக்கு தீனிகளை தவிர்க்கலாம் :

சிலர் இரவில் தூக்கம் வராமல் கண் விழித்திருக்கும் சமயத்தில், மனதில் எழும்பும் ஆசைகள் காரணமாக ஸ்நாக்ஸ் எடுத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இது உடல் நலனுக்கு தீமையை விளைவிக்கும். சாப்பிட்ட பிறகு 15 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தால், இந்த ஸ்நாகஸ் சாப்பிடும் சிந்தனை மனதில் வராது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Health Benefits, Walking

அடுத்த செய்தி