முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தொண்டை சளி முதல் மூட்டு வலி வரை.. பல நோய்களுக்கு பலன் தரும் மூக்கிரட்டை மூலிகை பற்றி தெரியுமா..?

தொண்டை சளி முதல் மூட்டு வலி வரை.. பல நோய்களுக்கு பலன் தரும் மூக்கிரட்டை மூலிகை பற்றி தெரியுமா..?

மூக்கிரட்டை மூலிகை

மூக்கிரட்டை மூலிகை

பொதுவாகவே மூக்கிரட்டை சாப்பிட அது உள்ளே இறங்கும்போதே உறுப்புகளின் நோய்களை சரி செய்து கொண்டே செல்லும் என வயதானவர்கள் கூட பெருமையாக பேசுவார்கள்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மூக்கிரட்டை மூலிகைகளின் மகத்துவம் அறிந்த அனைவரும் இதை பொக்கிஷம் என்பார்கள். ஆனால் இது சாதாரணமாக பல இடங்களில் வளர்ந்துகிடக்கும் . கொடிபோல் படரும் இந்த செடி வறண்ட இடங்களிலும் செழித்து வளரும். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும்போது சாலையோரங்களில் வளர்ந்திருக்கும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும்.

பொதுவாகவே மூக்கிரட்டை சாப்பிட அது உள்ளே இறங்கும்போதே உறுப்புகளின் நோய்களை சரி செய்து கொண்டே செல்லும் என வயதானவர்கள் கூட பெருமையாக பேசுவார்கள்.

இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்ய உதவுகிறது. உங்களுக்கு இரத்த சோகை இருந்தாலும் குணமாகும்.

மஞ்சள் காமாலை இருப்பவர்கள் அதனால் உண்டாகும் வயிறு உப்பசம் போன்ற இதர பக்கவிளைவுகளை சரி செய்ய மூக்கிரட்டை உதவியாக இருக்கும்.

புற்றுநோய் வரும் அறிகுறி இருந்தாலும் அதன் செல்களை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை இந்த மூலிகைக்கு உண்டு.

உடல் நல பாதிப்புகளுக்கு மட்டுமன்றி சருமப் பராமரிப்புகளுக்கும் மூக்கிரட்டை உதவுகிறது. என்றும் இளமையான தோற்றம் வேண்டுமெனில் உங்கள் செல்களை புதுப்பித்து முதுமையை நீக்கி எப்போதும் இளமையாக வைக்க உதவுகிறது.

உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும், மனதை எப்போதும் உற்சாகமாகவும் வைத்துக்கொள்ளும். மூளையின் ஆற்றலையும் அதிகரிக்க உதவுகிறது.

Also Read : இலவங்கப்பட்டையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

உங்களுக்கு கண் பார்வை கோளாறு இருந்தால் மூக்கிரட்டை , பொன்னாங்கன்னி மற்றும் கீழா நெல்லி ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து அதை மோரில் கலந்து குடித்து வர கண் பார்வை சீராகும்.

எடை குறைப்புக்கும் மூக்கிரட்டை பலன் தருகிறது. இதற்கு நீங்கள் மூக்கிரட்டை, சிறு குறிஞ்சான், நெருஞ்சில் மிளகு , சீரகம், திப்பிலி ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு தூளாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வர எடை குறைவதை கண்கூடாக காண்பீர்கள். உடலின் மெட்டாபாலிசம் அதிகரிக்கும்.

மூக்கிரட்டைடை பாசி பருப்பு, தக்காளி, உப்பு, பெருங்காயம், கொஞ்சம் மிளகு சேர்த்து வேக வைத்து கூட்டு போல் செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வாருங்கள். இதனால் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சுவாசப்பிரச்சனை, சீராகும். முதுமை வயதில் ஏற்படக்கூடிய வாத நோய்களை சரி செய்ய உதவும்.

சளி, மூக்கடைப்பு, தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கும் மூக்கிரட்டை இலையை கொதிக்க வைத்த்ய் குடித்தால் சரியாகும். அதன் வேர்கள் மரவள்ளி கிழங்கு போல் இருக்கும். அதை காய வைத்து பொடி செய்து சுடு தண்ணீரில் கரைத்து குடித்தாலும் சரியாகும்.

Also Read : சுகரை குறைக்கும் இன்சுலின் செடி பற்றி தெரியுமா?

அந்த நீரானது வயிற்று பிரச்சனைகளுக்கும் பலன் தரும். வயிற்று பூச்சி, நச்சுக்கிருமிகள் இருந்தாலும் சரி செய்துவிடும்.

மூக்கிரட்டை வேருடன் மிளகு சேர்த்து அதனுடன் விளக்கெண்ணெய் சொட்டு விட்டு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளுங்கள். அதை அரைத்தேக்கரண்டி பருக மூலம் மற்றும் தோல் நோய் இருந்தால் சரியாகும். அந்த தண்ணீரில் சீரகம், ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பருகினால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி குறைந்து குணமாகும்.

மூக்கிரட்டையை சாப்பிடும்போது வயிறுப்போக்கு, மலம் இளகி வரும். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. வயிற்றை சுத்தம் செய்வதால் அவ்வாறு உண்டாகும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

First published:

Tags: Health Benefits, Health tips, Siddha Medicine