ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Gooseberry | Amla | குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடலாமா..? தெரிந்துகொள்ளவேண்டியவை என்னென்ன?

Gooseberry | Amla | குளிர்காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடலாமா..? தெரிந்துகொள்ளவேண்டியவை என்னென்ன?

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களை பெறலாம். மேலும் நெல்லிக்காய் நம்பமுடியாத ஆரோக்கியமான குளிர்கால சூப்பர்ஃபுட் ஆகும். குளிரான காற்றால் ஏற்படும் உங்கள் நுரையீரல் பாதிப்புகளை சரி செய்யும் சத்துக்கள் நெல்லிக்காயில் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்திற்கு ஊக்கமளிக்கிறது.

  நெல்லிக்காய் சாறு, ஊறுகாய் மற்றும் நெல்லிக்காய் மிட்டாய்கள் என ஆண்டு முழுவதும் நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. நெல்லிக்காய் சீசன் பெரும்பாலும் அக்டோபர் - பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் இருக்கும் என்பதால் குறைந்த விலையில் நீங்கள் பெறலாம். குளிர்காலத்தில் தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவது உங்களை ஆரோக்கியத்தை சீராக வைத்து இருக்க நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும்.

  நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  பொதுவாக குளிர்காலத்தில் சளி, காய்ச்சல் பிரச்சனைகள் ஏற்படுத்து வழக்கம். கடுமையான குளிர் மாரடைப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. நெல்லிக்காய்

  குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

  நெல்லிக்காயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், கல்லீரல் பாதிப்பைத் தடுக்கவும் துணை புரிகிறது.

  பெரிய நெல்லிக்காயும் சூட்டை தணிக்க உதவும்

  நெல்லிக்காயில் அதிக வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி குளிர்கால தொற்றுகள் அண்டாமல் தடுக்கிறது. மேலும் நுரையீரல் பிரச்னைகளை சீராக்கி சுவாச பாதை சீராக இயங்க உதவுகிறது.

  திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால் வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம் உள்ளது. அதாவது ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது.

  நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.

  Detox food | உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் டீடாக்ஸ் உணவு முறைகள்.. கண்டிப்பா படிங்க..

  ஒரு நாளில் எவ்வளவு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும்

  நெல்லிக்காயை மிட்டாய், புட்டிகளில் அடைத்த சாறாக பயன்படுத்துவதை விட பிரஷ்ஷான ஜூஸ்ஸாக சாப்பிடுவது மிகவும் நல்லது. கடைகளில் வாங்கி குடிக்கும் ஜூஸ்களை விட நாம் வீட்டிலேயே செய்வது பாதுகாப்பானது. பழங்கள் இயற்கையானவை என்பதால் இதில் எந்தவொரு பதப்படுத்தும் கெமிக்கல், நிறங்கள் எதுவும் இல்லை என்பதால் ஆரோக்கியமானது. மேலும், குளிர்காலம் என்பது நெல்லிக்காய் அறுவடை செய்யப்படும் பருவம் என்பதால் தற்போது அதனை பயன்படுத்தி கொள்வது அவசியமாகும்.

  ஆண்டு முழுவதும் நீங்கள் நெல்லிக்காய் மிட்டாய்கள் மற்றும் நெல்லிக்காய் ஊறுகாய் வைத்து சாப்பிடலாம், ஆனால் இப்போது நெல்லிக்காய்கள் பெருமளவு கிடைக்கும் காலம் என்பதால் இதனை அன்றாடம் சாப்பிடுவது நல்லது.

  நெல்லிக்காய் ஜூஸ்

  அதிகபட்ச நன்மைக்காக தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். நீங்கள் தினமும் காலையில் 1-2 நெல்லிக்காய்களை சாப்பிடலாம். வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பதால் ஒரு நாளைக்கு 2-க்கு மேல் சாப்பிட வேண்டாம். மேலும், நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் நெல்லிக்காய் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

  நெல்லிக்காயை உணவில் சேர்க்க பல்வேறு வழிகள்

  நெல்லைக்காய் சற்று புளிப்பு, துவர்ப்பு சுவையில் இருப்பதால் இதை பச்சையாக சாப்பிடுவது கடினம். இதன் புளிப்பைக் குறைக்க, நீங்கள் பழத்தை வெட்டி அதன் மேல் சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடலாம். அல்லது நெல்லிக்காய்களை உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிடலாம்.

  குறிப்பு : நெல்லிக்காய் ஆரோக்கியமானது, ஆனால் சில சிறப்பு நேரத்தில் இந்த பழத்தின் அமில தன்மை காரணமாக அதை தவிர்ப்பது நல்லது. அறுவை சிகிச்சை செய்த நபர்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Amla, Goosberry, Winter