தினமும் தயிர் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..?

தயிரில் வாழும் பாக்டீரியாக்கள் குடலுக்கு நல்லது. இதனால் 70% நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்.

தினமும் தயிர் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..?
கெட்டி தயிர் - பெர்ரீ - பாதாம் : இந்த மூன்றுமே புரதச்சத்து நிறைந்தவை. உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைக்க உதவுக்கூடியவை.
  • Share this:
தயிரை தினமும் உணவின் ஒரு அங்கமாக சேர்த்துக்கொள்வதால் பல நன்மைகளைப் பெறலாம். அவை என்னென்ன பார்க்கலாம்.

தயிரில் விட்டமின் B-12 , கால்சியம் , பாஸ்பரஸ் , மெக்னீசியம் மற்றும் மினரல்கள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும்.

தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்னை இருப்போர் தினமும் ஒரு பவுல் தயிர் சாப்பிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


தயிர் மன அழுத்தம், சோர்வை உண்டாக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரத்தலை கட்டுப்படுத்துவதால் மன அழுத்தம், எதிர்மறை சிந்தனைகள் வராது.தயிரில் இயற்கையான முறையில் ப்ரோபயோடிக்ஸ் என்னும் அமிலம் உள்ளது. இது தயிரில் வாழும் பாக்டீரியாக்களினால் சுரப்பதால் குடலுக்கு நல்லது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிகும். குடல் ஆரோக்கியமா இருந்தாலே 70% நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும்.குடல் ஆரோக்கியமாக இருந்தாலே ஜீரண சக்தியும் வேகமாக செயல்படும்.

கோடையில் களைகட்டும் மாங்காய்..! இதை வைத்து சட்னி எப்படி செய்யுறது தெரியுமா?

தயிரில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் தோல் மற்றும் தலை முடி வளர்ச்சிக்கு நல்லது. தசைகள் இறுக்கமாகவும் தயிர் உதவும்.

தயிரை நேரடியாக தலையில் அப்ளை செய்தாலே பொடுகு, தொற்று, தலை வறட்சி போன்ற பிரச்னைகளை சரிசெய்யலாம்.

பார்க்க :

 

 
First published: April 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading