முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கேரட் தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

கேரட் தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

கேரட் நன்மைகள்

கேரட் நன்மைகள்

கேரட்டில் உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு நல்லது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவும். 

  • Last Updated :

ஆரஞ்சு நிறத்தில் கண்களைக் கவரும் கேரட்டுகள் பார்ப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடும்போதும் மொறு மொறுவென குறைந்த இனிப்புச் சுவையில் நன்றாக இருக்கும்.

கேரட் அதன் சுவைக்கு ஏற்ப ஆரோக்கியத்திலும் சளைத்ததல்ல. கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

அதில் உள்ள இனிப்புச் சுவை சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு நல்லது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.  அதில் உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய கிருமிகளை உருவாக்குகிறது.

இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவும் : இதயப் பிரச்னைகள் இரத்தக் கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.

கண்களுக்கு நல்லது: கேரட்டில் இருக்கும் வைட்டமின் A கண்களின் பார்வையைத் தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

உடல் எடையைக் குறைக்கும் : குறைவான கலோரிகளே இருப்பதால் டயட்-ல் இருப்பவர்கள் கேரட்டைச் சாப்பிடுவது நல்லது.

புற்றுநோய் பாதிப்பு இல்லை: புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை கேரட்டில் இருப்பதால் தினமும் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.

சருமம் பளபளக்கும்: உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவும். தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.

இதையும் படிக்க :

top videos

    கேரட் சாதம் இப்படி செய்தால் வீடே மணக்கும்!

    First published:

    Tags: Carrot, Health tips