Home /News /lifestyle /

பெண்கள் ஃபிட்னஸ் விஷயத்தில் தவறாக புரிந்து வைத்திருக்கும் 5 விஷயங்கள்..! 

பெண்கள் ஃபிட்னஸ் விஷயத்தில் தவறாக புரிந்து வைத்திருக்கும் 5 விஷயங்கள்..! 

பெண்கள் ஃபிட்னஸ்

பெண்கள் ஃபிட்னஸ்

அந்த காலத்தில் பெண்கள் ஃபிட்னஸுக்காக என தனியாக எந்த பயிற்சியையும் செய்ய தேவையில்லை, வயல் வேலைகளை செய்வது, கால்நடைகளை பராமரிப்பது, வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு என பம்பரமாக சுழன்று வந்ததால் அவர்கள் உடல் எடை கட்டுக்குள் இருந்தது.

மேலும் படிக்கவும் ...
அந்த காலத்தில் பெண்கள் ஃபிட்னஸுக்காக என தனியாக எந்த பயிற்சியையும் செய்ய தேவையில்லை, வயல் வேலைகளை செய்வது, கால்நடைகளை பராமரிப்பது, வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்பு என பம்பரமாக சுழன்று வந்ததால் அவர்கள் உடல் எடை கட்டுக்குள் இருந்தது.

ஆனால் இப்போது மாறி வரும் வாழ்க்கை சூழ்நிலை காரணமாக பெண்கள் கணினி முன்பு நாள் முழுவதும் அமர்ந்திருக்க கூடிய வேலைகளை செய்கின்றனர். போதாக்குறைக்கு சமையலில் தொடங்கி வீட்டை சுத்தப்படுத்துவது வரை அனைத்து வேலைக்கும் இப்போது இயந்திரங்கள் வந்துவிட்டன. அதனால ஃபிட்னெஸ்ஸைத் தனியாகவும் வாழ்க்கையைத் தனியாகவும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

உடலில் சேர்ந்துவிட்ட கூடுதல் கிலோவை குறைக்க ஒவ்வொரு பெண்ணும் உடற்பயிற்சி, டயட் என பலவிஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் உடலை நேசியுங்கள் என சொல்வது சாதாரணமானது, ஆனால் கேலி, கிண்டல்கள், ஏமாற்றம், மீம்ஸ், சினிமா வசனங்கள் என எங்கு பார்த்தாலும் குண்டான பெண்கள் மீது வீசப்படும் உருவகேலி குண்டுகள் ஏராளம். எனவே தான் இதையெல்லாம் வென்றெடுக்க பெண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமென போராடுகிறார்கள்.

அதனால் தான் 6 மாதத்திற்கு ஒருமுறை புதுசு, புதுசாக ஏதாவது ஒரு டயட் சேலஞ்ச் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. காஸ்ட்லியாக இருந்தாலும் பரவாயில்லை என அந்த டயட் பிளான்களை மேற்கொள்ளும் பெண்கள் என்றாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா?. ஏன் என்ன செய்தாலும் உடல் எடை பெரிதாக குறையவில்லை, நாம் எங்கே கோட்டவிடுகிறோம்? என சிந்தித்துள்ளீர்களா?. ஃபிட்னஸ் விஷயத்தில் பெண்கள் புரிந்து வைத்துள்ள தவறான சில விஷயங்கள் என்னென்ன என நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.புரதம் உடல் கொழுப்பை அதிகரிக்கும்:

புரதம் ஒரு அத்தியாவசிய மக்ரோநியூட்ரியண்ட்; அதன் பங்கு உடலில் கொழுப்பை அதிகரிப்பது அல்ல, மாறாக மெலிந்த தசைகளை வலுவாக மாற்றுவது ஆகும். மேலும், புரதம் உங்கள் பசியைக் கட்டுப்படுத்தவும், நீண்ட நேரத்திற்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டது போன்ற திருப்தியைக் கொடுக்கவும் உதவுகிறது. எனவே பெண்கள் உடற்பயிற்சி போன்ற ஒர்க்அவுட்டிற்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட அளவு புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது பெண்கள் தங்களது உடல் எடையில் ஒரு கிலோவிற்கு குறைந்தபட்சம் 1.2 கிராம் புரதம் சாப்பிட வேண்டும். ஒரு நல்ல ஒர்க்அவுட்டிற்குப் பிறகு, புரதம் தசையை மீட்டெடுக்கவும் வலுப்படுத்தவும் உதவுகிறது.

உங்களுக்கு இரத்த அழுத்தம் சார்ந்த நோய் பாதிப்பு உள்ளதா..? அப்போ அவசியம் இதை படிங்க..

வெயிட் லிப்டிங் உங்களை பருமனாக காட்டும்:

தண்ணீர் தூக்குவது, குழந்தையை தூக்கிக்கொண்டு நடப்பது என பெண்கள் காலங்காலமாக செய்து வந்த பளுதூக்கும் விஷயங்கள் தான் தற்போது வெயிட் லிப்டிங்காக மாறியுள்ளன. பளு தூக்குதல் என்பது பெண்களின் கார்டியோ கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. ஆனால் பெண்கள் வெயிட் லிப்டிங் போன்ற விஷயங்களை செய்வதால் உடல் பார்க்க ஆண்கள் போல் மாறும் என்றும், குண்டான தோற்றம் கிடைக்கும் என்றும் தேவையில்லாமல் அஞ்சுகின்றனர். இந்த பயிற்சிகள் தசைகளை வலுப்படுத்தி, அந்த தசைகளை தக்கவைத்து, வளர்சிதை மாற்றத்தை சிறந்த நிலையில் வைத்து, கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது.போதுமான அளவு தூங்குகிறீர்களா?

பெண்கள் ஆபீஸ் மற்றும் வீட்டு வேலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை எப்போதும் தனது உடல் நலத்திற்கு கொடுப்பது கிடையாது. வீடு, குடும்பம், வேலை, பிள்ளைகள் இந்த பட்டியலில் கடைசியாக தான் தூக்கம் என்பது இடம்பிடிக்கிறது. பணத்தைக் கொட்டி ஜிம்மிற்கு சென்றாலோ, நேரத்தை ஒதுக்கி பயிற்சிகளை மேற்கொள்வதாலோ உடல் எடையை குறையாது. உங்களுடைய உடல் எடை குறைப்பு அல்லது பராமரிப்பு தொடர்பான பயணம் வெற்றி பெற வேண்டும் என்றால், போதுமான அளவு உறங்குவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் நீங்கள் தூங்கும் போதுதான் உடலுக்கு ஓய்வெடுக்கவும் , இழந்தை சக்தியை மீட்கவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் நன்றாக தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தினமும் ஒரு ஸ்பூன் தேன்... பெண்களுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

ஆய்வின்படி, ஒருவர் போதுமான அளவு உறங்குவது உடலில் கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. கொழுப்பில்லாத உடலை பராமரிப்பதில் தூக்கம் முக்கிய பாங்காற்றுகிறது. போதுமான அளவு உறக்காவிடில் எடை இழப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்தை குறைத்து எடையை அதிகரிக்கச் செய்யும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.டயட் பிளான்:

அனைத்து வகையான பெண்களுக்கும் ஒரே மாதிரியான உடற்பயிற்சி நடைமுறைகள் மற்றும் உணவுத் திட்டங்கள் பொருந்தாது. ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்பதற்காக ஒரு குறிப்பிட்ட உணவுமுறையை பின்பற்றுவது விரும்பிய இலக்கை அடைய உதவாது. சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உங்களுக்கு பொருத்தமான டயட் முறையை பின்பற்றுவது நல்லது.

நிலைத்தன்மை முக்கியமானது:

உடற்பயிற்சி மூலம் உடல் எடையைக் குறைப்பது என்பது ஒரு நீண்ட பயணமாகும். சில காலம் முயன்ற பிறகு, உடல் எடையில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை என்றால், அதனை கைவிட நினைக்கிறீர்கள். ஒருவேலை உங்கள் ஒர்க்அவுட் பிளான்கள் பலன் கொடுக்கவில்லை என்றால், அது பற்றி நன்றாக ஆராய்ந்து, கடின உழைப்பை செலுத்துவதே நல்ல பலனைக் கொடுக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fitness, Weight loss, Women Health

அடுத்த செய்தி