முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Monsoon Diseases : பருவமழை நோய்கள் கொரோனா தொற்றை அதிகரிக்கும் அபாயம் - எச்சரிக்கும் மருத்துவர்

Monsoon Diseases : பருவமழை நோய்கள் கொரோனா தொற்றை அதிகரிக்கும் அபாயம் - எச்சரிக்கும் மருத்துவர்

பருவமழை நோய்கள்

பருவமழை நோய்கள்

திடீர் வானிலை மாற்றத்தால் காய்ச்சல் அபாயம் ஏற்படும். ஆனால் கோவிட் நெருக்கடி நீடிக்கும் நிலையில் காய்ச்சல் வந்தால் சாதாரணமாக நினைக்காமல், துவக்க நிலையிலேயே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று இன்னும் ஓயாத நிலையில், அடுத்து விரைவில் மூன்றாம் அலை நாட்டை தாக்க கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். நாடு முழுவதும் விரைவில் மழைக்காலம் துவங்க உள்ளது.

மழைக்காலத்தில் நம் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான அத்தியாவசிய தகவல்களான, பருவமழை காலத்தின் போது உண்டாகும் மலேரியா, டெங்கு போன்ற பருவமழை நோய்கள் கோவிட் -19 அபாயத்தை எவ்வாறு அதிகரிக்க செய்யும், தொற்று பாதிப்பு தாக்காமல் தற்காத்து கொள்வது எப்படி உள்ளிட்ட பல சந்தேகங்களுக்கான பதில்களை முன்னணி தொற்றுநோயியல் நிபுணரான டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா கூறி உள்ளார்.

கோவிட் -19 உட்பட பிற நோய் தொற்றுகளை தவிர்க்க வரவிருக்கும் மழை சீசனில் என்னென்ன முன்னெச்சரிக்கைகள் செய்ய வேண்டும்?

மழை காலமானது கொசுக்கள் உள்ளிட்ட பிறவகை ஆர்த்ரோபாட் இனங்கள் மனிதர்களை கடிப்பதால் பரவும் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களை அதிகரிக்க செய்யும். மழை சீசனில் கூடுதலாக பூஞ்சை தொற்று, உணவு மற்றும் நீரினால் பரவும் நோய்கள் மற்றும் பிற தோல் நோய் தொற்றுகள் பற்றிய பயமும் இருக்கிறது. எனவே மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது, தடுப்பூசி போட்டு கொள்வது தவிர மழை சீசனில் தனிப்பட்ட சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். எப்போதும் சுத்தமான மற்றும் சுகாதாரமான தண்ணீரை குடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரை பருகுவது நல்லது. சமைக்கும் மற்றும் சாப்பிடும் முன் காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு கல்வி சுத்தப்படுத்தி விட்டு பயன்படுத்த வேண்டும். வெளியில் குளிர்பானங்கள், ஜூஸ் பருகுவதை தவிர்த்து விட்டு, வீட்டிலேயே பிரெஷான ஜூஸ் மற்றும் பழங்களை சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும் என்பதற்காக ஜன்னல்களை திறந்து வைப்பது கொசுக்கள் வீடுகளுக்குள் புக சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

எனவே கொசுவலை, குட்நைட் போன்ற கொசு விரட்டிகள், ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைக்க ஏதுவாக மஸ்கிட்டோ நெட்களை பயன்படுத்துவது, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பது, வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்வது, அழுகிய குப்பைகளை சேராமல் பார்த்து கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மலேரியா மற்றும் டெங்கு அபாயங்களை குறைக்கிறது. அதே போல திடீர் வானிலை மாற்றத்தால் காய்ச்சல் அபாயம் ஏற்படும். ஆனால் கோவிட் நெருக்கடி நீடிக்கும் நிலையில் காய்ச்சல் வந்தால் சாதாரணமாக நினைக்காமல், துவக்க நிலையிலேயே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

மழை காலங்களில் வெளியே செல்லும் போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்?

மழை சீசனில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மக்கள் பெரும்பாலும் ஃபுல் ஹேண்ட் கொண்ட டிரெஸ்களை போட முயற்சிக்க வேண்டும். உடலின் பெரும்பாலான பாகங்களை கவர் செய்யாமலாவிற்கான உடைகளை தேர்வு செய்ய வேண்டும். கவர் செய்யப்பட்ட உடல் பகுதிகளை தவிர பிற வெளியே தெரியும் உடல் பகுதிகளில் மஸ்கிட்டோ க்ரீமை பயன்படுத்தலாம். அதே போல மழை நேரங்களில் வெளியே செல்லு போது தவறாமல் செய்ய வேண்டிய மற்றொரு விஷயம் எக்ஸ்ட்ரா மாஸ்க்குகளை எடுத்து கொண்டு செல்வது.

சாதாரண காய்ச்சல், சளிக்கும் கொரோனா காய்ச்சல், சளிக்கும் என்ன வித்தியாசம்? தெரிந்துகொள்ளுங்கள்..!

ஏனென்றால் ஒருவேளை மழை நீரில் நனைந்து மாஸ்க் ஈரமாகிவிட்டால் அந்த மாஸ்க் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்காது. எனவே எக்ஸ்ட்ரா மாஸ்க்குகள் அவசியம். வெளியிடங்களில் சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதை தவிர்க்க எப்போதும் கூடவே தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லலாம். மழை சீசன்களில் எழும் பூஞ்சை தொற்று (fungal infection) அபாயங்களை தவிர்க்க வெளியே சென்று வந்த பிறகு கை, கால்களை நன்றாக கழுவுவது, ஈரம் காயும் வரை கை, கால்களை உலர்த்துவது உள்ளிட்டவற்றை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

பருவமழை சீசன் நோய்களுக்கும், கோவிட்-19 தொற்றுக்குமான வித்தியாசம்?

கோவிட்-19 மற்றும் பருவகால காய்ச்சல் ஆகியவற்றின் பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல் அல்லது காய்ச்சல் அடிப்பது போன்ற உணர்வு / சளி, இருமல், மூச்சுத் திணறல், களைப்பு, தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, தசை வலி அல்லது உடல் வலிகள் மற்றும் தலைவலி உள்ளிட்டவை அடங்கும். இரண்டிற்கும் இடையே இவ்வளவு பொதுவான அறிகுறிகள் இருப்பதால் மழை சீசனில் மேற்காணும் அறிகுறிகள் தோன்றினால் அது கோவிட்-19 தொற்றா, இல்லையா என்பதை விரைவாக கண்டறிவது முக்கியம். இந்த நேரத்தில் மேற்கண்ட அறிகுறிகள் உள்ள நபர்கள்உடனடியாக ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் அல்லது RTPCR டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.அலட்சியமாக இருக்க கூடாது. சுவை அல்லது வாசனை உணர்வில் காணப்படும் திடீர் மாற்றம் அல்லது இழப்பு, மூச்சு திணறல், ஆக்ஸிஜன் செறிவூட்டல் கோளாறு உள்ளிட்ட சில குறிப்பிட்ட அறிகுறிகள் COVID-19 தொடர்பான நேரடி அறிகுறிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மலேரியா மற்றும் டெங்கு நோயாளிகள் கோவிட்டால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்?

மலேரியா மற்றும் டெங்கு நோயாளிகளுக்கு கோவிட்-19 ஆபத்து அதிகமாக இருக்கும். மலேரியாவால் பாதிக்கபட்ட நபருக்கு திசுக்களில் சிறிதளவு ஆக்ஸிஜன் குறைவு ஏற்படுகிறது. மலேரியா மற்றும் டெங்கு ஆகிய இரண்டுமே உடலில் ரத்த உறைவு நிலையை ஏற்படுத்துகின்றன. இது நுரையீரல் த்ரோம்போசிஸ் அபாயம் ஏற்பட வழிவகுத்து அழற்சி சைட்டோகைன்களை (inflammatory cytokines) ஏற்படுத்துகின்றன. தவிர கோவிட்-19-ல் மோசமான விளைவு ஏற்பட கூடிய அபாயத்தை ஏற்படுத்துகின்றன. டெங்கு நோயாளிகள் கோவிட்டால் பாதிக்கப்பட்டால், கோவிட்டை கண்டறிவதில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பிரதிபலிப்பு குறித்த தவறான நேர்மறையான முடிவைக் காட்டலாம். அதே போல கோவிட் நோயாளிகள் டெங்கு serology-யின் நேர்மறையை காட்டலாம் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மழைக்காலம் முதியவர்களுக்கு கோவிட் பாதிப்பை அதிகப்படுத்துமா?

ஏற்கனவே மோசமான சுகாதார நிலை, பலவீனமான நோயெதிர்ப்பு செயல்பாடு, குறைவான உடல் செயல்பாடு, மோசமான தனிப்பட்ட ஆரோக்கியம் உள்ளிட்ட பலவற்றை கொண்டுள்ள முதியவர்களுக்கு மழைக்காலம் அவர்களுக்கு ஆபத்தான ஒன்று தான். எளிதில் கோவிட் உட்படாத பல தொற்றுக்களை அவர்களுக்கு ஏற்படுத்தி விடும். எனவே பருவகால நோய்கள் மற்றும் கோவிட் தொற்றிலிருந்து அவர்களை பாதுக்காக்க கோவிட் தடுப்பூசியை விரைந்து போட்டு கொள்வது அவசியம்.

Coronavirus : கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் சுவை,வாசனை உணர்வை மீண்டும் பெற 1 வருடம் ஆகலாம் - ஆய்வு

டைபாய்டு காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதை கண்டறிவது எப்படி?

டைபாய்டு ஒரு பாக்டீரியா தொற்று. இது காய்ச்சல், உடல்நலக்குறைவு, தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று அசௌகரியம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் சால்மோனெல்லா டைபியாவால் (Salmonella typhi) இது ஏற்படுகிறது. தற்போது இரண்டாம் அலையில் கோவிட் நோயாளிகள் இரைப்பை குடல் அறிகுறிகளுடன் உள்ளனர், இது டைபாய்டை மருத்துவ ரீதியாகப் பிரதிபலிக்கிறது மற்றும் நோயறிதலில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தவிர கோவிட் நோயாளிகளில் நிகழும் தவறான நேர்மறை வைடல் டெஸ்ட்கள் (false positive Widal tests) டைபாய்டா அல்லது கோவிட்டா என்பதை கண்டறிவதை சவாலாகியுள்ளன. எனவே நோயின் கடுமையான கட்டத்தில் கோவிட் தொற்றை உறுதிப்படுத்த RT-PCR டெஸ்ட் மற்றும் டைபாய்டை உறுதிப்படுத்த ப்ளட் கல்ச்சர் (blood culture) ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

First published:

Tags: CoronaVirus, Covid-19, Monsoon Diseases