• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Head Injury : தலையில் ஏற்படும் காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? அறிகுறிகளும்..சிகிச்சை முறைகளும்..!

Head Injury : தலையில் ஏற்படும் காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? அறிகுறிகளும்..சிகிச்சை முறைகளும்..!

தலைக் காயம்

தலைக் காயம்

தலையில் ஏற்படும் காயங்களின் தீவிரத்தைப் பொறுத்து அதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    பொதுவாக தலையில் ஏற்படும் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை. மக்களின் இறப்பு மற்றும் உடல் உறுப்புக்கள் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளில் ஒருவரின் தலைப்பகுதி செயல்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் பல லட்சக்கணக்கான நரம்புகள் பின்னிப்பிணைந்து இருக்கும் மூளை தான் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் தலைமை தாங்குகிறது. எனவே உடலில் காயம்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பகுதிகளில் தலை முதன்மை வகிக்கிறது.

    ஏதேனும் ஒரு பொருளை கொண்டு நீங்கள் தலையில் தாக்கிக்கொள்ளும்போதோ அல்லது விளையாடும் போது கீழே விழுவதன் மூலமோ அல்லது ஏதேனும் விபத்து காரணமாகவோ தலையில் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு வரும் காயங்களால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் வரவிருக்கும் ஆபத்துக்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக காண்போம்.

    இது தொடர்பாக மும்பையின் குளோபல் மருத்துவமனைகளின் தலைமை-பராமரிப்பு பிரிவு பிரிவு டாக்டர் பிரசாந்த் போரேட் கூறியதாவது, "காயங்கள் லேசானவை முதல் கடுமையானவை வரை பிரிக்கலாம். தலையில் இடித்துக்கொள்வதால் ஏற்படும் புடைப்பு, சிறிய அளவிலான வெட்டு காயம் போன்றவை லேசானதாக இருக்கலாம். ஆனால், ஒரு விபத்தால் ஏற்படும் மூளை காயம், மண்டை ஓட்டில் எலும்பு முறிவு, மூலையில் ரத்தக்கசிவு, மூளை பாதிப்பு போன்ற கடுமையான விளைவுகள் கூட ஏற்படலாம். மண்டை ஓட்டில் எலும்பு முறிவுகள், எபிடியூரல் ஹீமாடோமா மற்றும் சப்டுரல் ஹீமாடோமா உள்பட உங்கள் தலையில் ஏற்படும் பிற கடுமையான காயங்கள் அனைத்தும் சரியான நேரத்தில் கவனிக்கப்பட வேண்டும். இல்லையெனில் அவை பேராபத்தை ஏற்படுத்திவிடும்" என்று கூறியுள்ளார்.



    இதன் அறிகுறிகள்:

    தலையில் ஏற்படும் காயங்களின் தீவிரத்தைப் பொறுத்து அதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலையில் லேசான காயம் உள்ளவர்கள் தலைவலி, ஒளி மற்றும் ஒலியின் உணர்திறன், தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, சோர்வு, தூக்க முறைகளில் மாற்றம், சமநிலை மற்றும் பார்வை பிரச்சினைகள் மற்றும் அறிவாற்றல் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். உங்கள் காயம் கடுமையானதாக இருந்தால், மந்தமான பேச்சு, தெளிவின்மை, சரியாக நடக்க முடியாமல் போவது, உடலின் ஒரு பக்கத்தில் ஏற்படக்கூடிய பலவீனம், வியர்வை, வலிப்பு, வலிப்புத்தாக்கங்கள், காதில் இருந்து வெளியேறும் திரவம், கோமா, ஒரே நிலையில் இருப்பது அல்லது எரிந்து விழுவது போன்றவைகள் அறிகுறிகளாக இருக்கும்.



    தலை காயங்களை எவ்வாறு கண்டறிவது மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?

    உங்கள் தலையில் காயம் எங்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை தீர்மானிக்க எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ மூலம் கண்டுபிடிக்கலாம். பின்னர், உங்கள் வயது, பாலினம் மற்றும் உங்கள் காயத்தின் இருப்பிடத்தைப் பொறுத்து, உங்களுக்கு ஏற்ற சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது, அறுவை சிகிச்சை செய்து கொள்வது, தலை மேற்பரப்பில் கடுமையான காயங்கள் ஏற்பட்டால் தையல் போடுவது, தலையில் ஏதேனும் புடைப்பு ஏற்பட்டிருந்தால் ஐஸ்கட்டி வைத்தல் மற்றும் காயம் குறைவாக இருந்தால் அதனை கண்காணித்தல் ஆகியவை சிகிச்சை முறையில் அடங்கும். காயம் தீவிரமாக இருந்தால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதில் தாமதம் செய்யாதீர்கள். தாமதித்தால் அவை உயிர் இழப்புக்கு கூட வழிவகுக்கும்.



    தலையில் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க என்ன செய்யலாம்?

    * இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் அணியுங்கள்.

    * நிலப்பரப்பு கடினமாக இருக்கும் இடங்களில் மற்றும் தலையில் காயங்கள் ஏற்படக்கூடிய விளையாட்டு மைதானங்களில் உங்கள் குழந்தைகள் விளையாடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    பிசிஓஎஸ் பாதிப்பு பெண்களின் தலைமுடி மற்றும் சருமத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்..?

    * நீங்கள் சோர்வாக இருந்தால் விளையாட்டுகளில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.

    * சீரற்ற நிலப்பரப்பில் சைக்கிள் ஓட்டுதல் அல்லது ஸ்கேட்டிங் செய்வதைத் தவிர்க்கவும்.

    * வானங்களில் சேதமடைந்த பாதுகாப்பு கியரை உடனடியாக மாற்ற வேண்டும். இதனால் விபத்துகளில் ஏற்படும் காயங்களை தவிர்க்கலாம்.

    * குளம், பூங்கா அல்லது கடற்கரைக்கு செல்லும் பட்சத்தில், நீங்கள் அங்கு குறிப்பிட்டிருக்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யத் தவறினால், உங்களுக்குத் தீங்கு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

    இந்த ரத்தவகை உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகமாம்: ஆய்வில் கண்டுபிடிப்பு!

    * கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியுங்கள். ஆல்கஹால் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அதனை அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.

    * வீட்டில் குழந்தைகள் விளையாடும் பகுதிகளில் கூர்மையான பொருட்கள் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: