• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கர்ப்பிணிகள் ‘விரதம்’ இருக்கலாமா..? செய்ய வேண்டியவை… செய்யக்கூடாதவை

கர்ப்பிணிகள் ‘விரதம்’ இருக்கலாமா..? செய்ய வேண்டியவை… செய்யக்கூடாதவை

கர்ப்பிணிகள் பாதுகாப்பு

கர்ப்பிணிகள் பாதுகாப்பு

கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் தேவை.

  • Share this:
கர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உங்கள் உணவுப் பழக்கத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது மிக முக்கியம். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கண்ட்ரோலாக வைத்து கொள்வது மிக அவசியம். அவ்வப்போது சில இடைவெளிகளில் ஊட்டச்சத்துக்களை எடுத்து கொள்வது முக்கியமானது.

பொதுவாக கர்ப்பிணி பெண்கள் சிறிய இடைவெளிகளில் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்களின் தினசரி ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கும்படியும் கூறப்படுகிறது. மிக நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருப்பது கர்ப்பகாலத்தில் ஆபத்தானது. தற்போது நவராத்திரி தொடங்க இருப்பதால் விரதம் இருக்க வேண்டும் என நினைக்கும் கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

கர்ப்ப காலத்தில் உண்ணாவிரதம் :

நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா ஆகும்.பல கர்ப்பிணி பெண்கள் தங்கள் மத அல்லது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருக்க விரும்புகிறார்கள். கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ணாவிரதம் இருக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் தாய்க்கு மட்டுமல்ல குழந்தைக்கும் தேவை.

கர்ப்ப காலத்தில் உண்ணாவிரதம் இருப்பது கடினமானதல்ல. கர்ப்ப காலத்தில் உண்ணாவிரதத்தின் போது கார்போஹைட்ரேட் உட்கொள்வது மிகவும் முக்கியம். கார்போஹைட்ரேட்டுகள் நமது வளர்ச்சி அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது தசைகள் மற்றும் மூளைக்கு ஆற்றலைத் தருவதில் பங்காற்றுகிறது.

கார்போஹைட்ரேட்டுகளின் வேலை என்ன?

பொதுவாக இரண்டு வகையான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. கிளைசெமிக் குறியீட்டைப் பொறுத்து மெதுவான மற்றும் வேகமான கார்போஹைட்ரேட்டுகள் என்று இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. வேகமான கார்போஹைட்ரேட்டுகள் அதிக ஜி.ஐ மற்றும் அதிக வேகத்தில் ஆற்றலை வெளியிடுகின்றன. இதனால் எடை அதிகரிப்பு பிரச்சினைகள் போன்றவை ஏற்படும்.

வேகமான கார்போஹைட்ரேட்டுகளில் ரொட்டி, சர்க்கரை, மாவுச்சத்துள்ள காய்கறிகள், பழச்சாறுகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் அடங்கும்.இ தனுடன் ஒப்பிடும்போது, ​​மெதுவான கார்போஹைட்ரேட்டுகள் குறைந்த ஜிஐ மற்றும் உடலில் மெதுவாக ஆற்றலை வெளியிடுகின்றன.



உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க, சரியான வகையான கார்போஹைட்ரேட்டுகளைப் பெறுவதே நோக்கமாக இருக்க வேண்டும், இது மெதுவாக ஆற்றலை வெளியிடுகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு உதவுகிறது. எனவே, உங்கள் உணவில் முழு தானியங்கள், விதைகள் மற்றும் கொட்டைகள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், காய்கறிகள் போன்றவைகளை சேர்க்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஊட்டச்சத்து :

உண்ணாவிரதம் என்பது பாரம்பரியமான மற்றும் வழக்கமான சடங்காக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் ஆன்மீகத்தின் அடிப்படையில் விரதம் இருக்கின்றனர். இந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

டெங்கு முதல் சரும பராமரிப்பு வரை... பப்பாளி இலையில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

சரியான முறையில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால், இதயப் பிரச்சினைகள், தோல் பிரச்சினைகள், குறைபாடுள்ள எலும்பு வளர்ச்சி போன்ற உடல்நலக் கோளாறுகளை குழந்தைகளிடையே உருவாக்கும். நீரிழிவு, இரத்த சோகை, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் உண்ணாவிரதத்தை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.



ஆரோக்கியமான உணவுகள் :

நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதால் நீங்கள் வழக்கத்தை விட குறைவான உணவை உண்ணுவீர்கள். அப்போது செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே கீரை, முட்டைக்கோஸ், தக்காளி, மிளகாய் போன்ற உணவுகளை முதன்மையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் புரதங்கள், வைட்டமின் பி, பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது.

சமக் என்ற அரிசி ஜீரணிக்க மிகவும் எளிதானது. இதில் அதிக அளவு நார்ச்சத்து,இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கியமான தாதுக்கள் உள்ளன. எனவே விரதம் இருக்கும் நேரத்தை அதனை சாப்பிட்டு வரலாம். பாதாம், திராட்சை, வால்நட், வறுத்த வேர்க்கடலை போன்றவைகளை எடுத்து கொள்ளும் போது அது உடலுக்கு மிகுந்த சக்தியை அளிக்கும். மேலும் போதுமான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள். தேங்காய் நீர், எலுமிச்சை நீர் மற்றும் மோர் போன்ற பானங்களை சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம், இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: