Anti gravity yoga : பிரபலங்களிடையே ட்ரெண்ட் ஆகும் "ஆன்டி கிராவிட்டி யோகா".... இவ்வளவு நன்மைகளா?

Anti gravity yoga : பிரபலங்களிடையே ட்ரெண்ட் ஆகும் "ஆன்டி கிராவிட்டி யோகா".... இவ்வளவு நன்மைகளா?

ஆன்டி கிராவிட்டி யோகா

ஒரு துணியை ஊஞ்சல் போல கட்டி அதில் செய்வது தான் இந்த யோகா.

  • Share this:
யோகா உடலுக்கும், மனதிற்கும் மிகவும் இன்றியமையாத ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. யோகாவில் பல்வேறு வகைகள் உள்ளது. அந்த வரிசையில் தற்போது "ஆன்டி கிராவிட்டி யோகா" பிரபலாமாகி வருகிறது. இதனை தொங்கும் யோகா என்றும் அழைப்பர். ஒரு துணியை ஊஞ்சல் போல கட்டி அதில் செய்வது தான் இந்த யோகா.

இப்போது மிகவும் பிரபலமாகியுள்ள இந்த யோகாவை, தொட்டிலில் விதம் விதமாக தொங்கியும், ஆடியும் யோகா செய்தும் உடம்பையும், மனசையும் பிட்டாக்கி வருகிறார்கள். க்வினெத் பேல்ட்ரோ மற்றும் நடாலி போர்ட்மேன் ஆகிய ஹாலிவுட் பிரபலங்களிலிருந்து, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஆலியா பட் போன்ற பாலிவுட் நடிகைகள் முதல் , ராகுல் ப்ரீத்தி சிங், சமந்தா, அமலா பால் போன்ற தமிழ் நடிகைகளும் இந்த யோகாவை செய்து புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

ஆன்டி கிராவிட்டி யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்துகொள்வோம்.,

* நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த யோகா செய்வதால் முதுகெலும்பு வலுவடைகிறது. இது, முதுகு மற்றும் முதுகெலும்பு பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவுகிறது மற்றும் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உடல் சமநிலையையும் மேம்படுத்துகிறது. தினமும் இந்த யோகாவை செய்து வந்தால் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம்.

* வேலை செய்யும் போது பல மணிநேரம் தவறான நிலையில் உட்கார்ந்துகொள்வது அல்லது நின்று கொண்டே வேலை செய்வதால் உடல் சோர்வடைகிறது. ஆன்டி கிராவிட்டி யோகாவில் இந்த பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது.



* ஆன்டி கிராவிட்டி யோகா மையம் நடத்தி வரும் மனிஷா ஷிராஃப் இதுகுறித்து கூறுகையில், “இந்த வகையான உடற்பயிற்சி உங்கள் உடம்பை வலிமையாக்குகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை சீராக்கி தசைகளை வலுவாக்குகிறது" என்றார்.

* இந்த யோகாவை தொடந்து செய்துவந்தால் முக்கிய தசைகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், முதுகெலும்பு மற்றும் தோள்பட்டை நெகிழ்வுத்தன்மையையும் மேம்படுத்துகிறது.

* யோகா உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கும் என்று நீங்கள் கருதக்கூடும், ஆனால் உண்மையில் இந்த யோகா செய்வதால் மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் உள்ளிட்ட செரிமானம் தொடர்பான பல்வேறு சிக்கல்களை குணப்படுத்த இது உதவுகிறது. மேலும் உங்கள் அடிவயிற்றை தளர்த்தி எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

* மேலும் இந்த யோகாவை தினமும் செய்து வந்தால் உங்கள் கை, கால் மூட்டுகள் வலுப்பெற்று சீராக இயங்கும். மேலும் முதுகுவலி பிரச்னை இருப்பவர்களுக்கும் இந்த யோகா சிறந்த பலனை தருகிறது.



யாரெல்லாம் இந்த யோகா செய்யலாம்?

16 முதல் 50 வயதுக்குட்பட்ட எவரும் இதைச் செய்யலாம். முதுகுவலி பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுபவர்களும் இதை முயற்சி செய்யலாம், ஆனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் இந்த யோகா செய்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

கவனிக்க வேண்டியவைகள் :

* கால்-கை வலிப்பு அல்லது இதய பிரச்சினைகள் இருப்பவர்கள் இந்த யோகாவை செய்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்

* ஆன்டி கிராவிட்டி யோகாவை தொடங்குவதற்கு முன்னர் ஒரு குறைந்த தூர நடைப்பயிற்சி அவசியம்.

வீட்டிலிருந்து அலுவலக வேலை செய்பவரா நீங்கள்? உங்கள் பிரச்னைக்கான தீர்வுகள் இங்கே....

* ஆன்டி கிராவிட்டி யோகாவை தொடங்குவதற்கு முன்னர் உங்கள் நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் அல்லது ஜூஸ் அருந்துங்கள்.

* ஆனால் உணவு உண்பதை தவிர்த்து விடுங்கள், முடியாதவர்கள் ஏதேனும் சிற்றுண்டி எடுத்து கொள்ளலாம்.

* இந்த யோகாவை செய்யும் நேரத்தில் மிக விரைவில் செய்ய உங்களை கட்டாயப்படுத்த வேண்டாம். பொறுமையாக செய்தால் நல்ல பலனை பெறலாம்.

* யோகா செய்யும் போது மிகவும் தளர்வான ஆடைகளை அணிய வேண்டாம். உங்களுக்கு வசதியான பிட்டான ஆடைகளை அணியுங்கள்.

 

 

 
Published by:Sivaranjani E
First published: