Home /News /lifestyle /

கல்லீரல் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி..

கல்லீரல் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி..

புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி

புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி

கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது மிக முக்கியம். ஹெபடைடிஸ் பி மற்றும் ஏ வைரஸ் உங்களது கல்லீரலில் பரவாமல் தடுக்க ஒரே சிறந்த வழி தடுப்பூசி தான் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஹெபடைடிஸ் என்பது கல்லீரல் திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். இது பெரும்பாலும் வைரஸ் தொற்றுநோய்களாலும், ஆல்கஹால் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களின் வெளிப்பாட்டினாலும் ஏற்படுகிறது. உலகெங்கிலும் சுமார் 300 மில்லியன் மக்கள் வைரஸ் ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயின் மற்றொரு பிரச்னை என்னவென்றால், இந்த பாதிப்பு இருப்பதே நீண்ட காலத்திற்கு தெரியாது.

ஹெபடைடிஸ் வைரஸ் ஐந்து வகைகளில் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவை A, B, C, D மற்றும் E ஆகும். நோய் மற்றும் மரணத்தின் சுமை காரணமாக அவை ஏற்படுகின்றன. மேலும் இது தொற்றுநோய் விகிதத்தை அதிகரிக்கும் என்பதால், இந்த வைரஸ்களால் பாதித்தவர்கள் காட்டாயம் மருத்துவ உதவியை நாட வேண்டும்.

குறிப்பாக இதில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோய்த்தொற்றுகள் (நாட்பட்ட ஹெபடைடிஸ்) பல ஆண்டுகளாக நீடிக்கும் மற்றும் கடுமையான கல்லீரல் கோளாறுகளான சிரோசிஸ் (கல்லீரல் வடு) மற்றும் ஹெபடோசெல்லுலர் கார்சினோமா (கல்லீரல் புற்றுநோய்) போன்றவற்றுக்கு வழிவகுக்கும். அதிலும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்புக்கு ஹெபடைடிஸ் பி மிகவும் பொதுவான காரணமாக அமைகிறது.

எனவே, இந்த கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது மிக முக்கியம். ஹெபடைடிஸ் பி மற்றும் ஏ வைரஸ் உங்களது கல்லீரலில் பரவாமல் தடுக்க ஒரே சிறந்த வழி தடுப்பூசி தான் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். தற்போதைய கொரோனா நெருக்கடி சூழலில் பல இணை நோய்களை கொண்ட நபர்கள் தங்கள் மருத்துவ பராமரிப்பு விஷயங்களை மேற்கொள்வதில் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மருத்துவமனைகளில் ஹெபடைடிஸ் நோய்க்கான சிகிச்சையை பெற மேற்கொள்ளும் வழக்கமான சந்திப்பு மற்றும் சரியான நேரத்தில் விசாரணைகள் போன்றவை பெரிதும் தடைபட்டுள்ளன.இது மட்டுமல்ல, தாமதமான விநியோகம் மற்றும் பெரும்பாலான ஆர்டர்களில் சரியான மருந்து பொருட்கள் கிடைக்காதது போன்ற சிக்கல்களால் ஆன்லைனில் நோய்களுக்கான மருந்துகளை வாங்குவது கூட சவாலாகிவிட்டது. இதுபோன்ற காலத்தில் டெலிமெடிசின் பிரச்சனையை எதிர்கொள்வது இக்கட்டாக இருந்தாலும், பலருக்கு இந்த சேவை கூட கிடைப்பதில்லை என்பது வேதனையாக இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஏற்கனவே ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் கொரோனா பாதிப்பு தொடர்பான மன அழுத்தம், COVID 19 தடுப்பூசி எந்தத்தளவுக்கு பாதுகாப்பு தரும் மற்றும் அதன் செயல்திறன் குறித்து பதிலளிக்கப்படாத பல கேள்விகளும் அவர்களில் பெரும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளன.

புகைப்பிடிப்பதை போலவே இந்த 5 பழக்கங்களும் மிகவும் ஆபத்தனாது : எச்சரிக்கும் மருத்துவர்கள்

ஹெபடைடிஸ் நோயாளிகளுக்கு COVID 19 மற்றும் ஹெபடைடிஸ் குறித்த சில அடிப்படை மற்றும் தேவையான தகவல்களை வழங்குவது இந்த சமயத்தில் மிக முக்கியம். இது தொற்றுநோய்க்கு மத்தியில், ஹெபடைடிஸ் நோயாளிகளுக்கு பீதியைத் தவிர்க்க உதவும். எனவே தற்போதைய காலத்தில் ஹெபடைடிஸ் நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

* இந்த நோய் நெருக்கடி காலத்தில் முடிந்தால் உங்கள் சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்வதை குறைக்கவும். அதற்கு பதிலாக விர்ச்சுவல் முறையில் உங்கள் மருத்துவருடன் தொடர்பில் இருக்க முயற்சி செய்யுங்கள். டெலிமெடிசின் மற்றும் வீடியோ அழைப்புகளின் வடிவத்தில் இன்று பல விருப்பங்கள் கிடைக்கின்றன அதன் உதவியோடு மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். 

* உங்கள் மருந்துகளை எக்காரணம் கொண்டும் மாற்றவோ அல்லது நிறுத்தவோ வேண்டாம்.

* உங்கள் மருந்துகளை சரியான நேரத்தில் வாங்கவும்.

* ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க வேண்டும்.

* முகக்கவசங்கள் அணிந்து பாதுகாப்பான சமூக தூரத்தை பராமரிப்பதன் மூலம் சரியான சுவாச சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.

* குறிப்பாக உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்து, விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். பெரும்பாலும், கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் COVID 19 தடுப்பூசி எந்தவிதமான முரண்பாடுகளையும் ஏற்படுத்தவில்லை.* துரதிருஷ்டவசமான நிகழ்வில், உங்களக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா தோற்று இருந்தாலும் மருத்துவர் மேற்பார்வையின் கீழ் ஹெபடைடிஸ் சிகிச்சையைத் தொடர வேண்டும்.

* COVID 19 சிகிச்சையானது ஒரு நுரையீரல் நிபுணரின் கவனிப்பின் கீழ் முன்னுரிமை பெற வேண்டும் என்பது அவசியமில்லை.

* ஹெபடைடிஸ் நோயின் போது கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது குணமடைந்த பிறகும் ஒருவர் அனைத்து வழியிலும் சோர்வடையக்கூடும். எனவே, ஒருவர் கருத்தில் கொள்ளக்கூடிய விஷயம் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தான்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Covid-19, Liver Health

அடுத்த செய்தி